ADS 468x60

27 June 2017

சத்துணவுத் திட்ட மீளாய்வு- சுரவணையடியூற்று பாலா் பாடசாலை

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பில் Nick & Nelly foundation  நிதியுதவியுடன் சுமார் ஒரு மாத காலமாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலைக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்யுமுகமாக இன்று பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரகள்;, சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து இந்நிகழ்ச்சித் திட்டத்தின் குறை நிறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

அந்த வகையில் இத்திட்டம் மிகவும் முன்னேற்றகரமான முறையில் அனைவரதும் ஒத்துழைப்புடன் எடுத்துச் செல்லப்படுவதாக அங்கு வந்திருந்த மக்கள் தெரிவித்தார்கள். இங்கு வழங்கப்படும் உணவு சம்பந்தமான பதிவுகள் பேணி வரப்படுவதாகவும், மாணவர்களின் நிறை அதிகரித்திருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்கள். மேலும் மாதாமாதம் பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்படுவது தொடர்பாகவும் பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

இச்செயற்திட்டம் பெற்றோரிடம் மாத்திரமின்றி ஊர் மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இத்திட்டம் இடைவிடாமல் நடைபெறுவதற்கு பெற்றோர், ஊர் மக்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறி, ஒழுங்கான முறையில் இதனைக் கொண்டு நடாத்துகின்றமைக்காக நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்து, இவ்வாறான திட்டம் பின்தங்கிய கிராமத்திற்கு வரப்பிரசாதம் என விதந்துரைத்தமை இந்த ஏற்பாட்டுக் குழுவினருக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
மாதாந்த மாணவர்களது நிறை அறிக்கை மாதிரி.

இங்கு இவர்களது ஒரு மாதகால அறிக்கையில் சில தரவுகளை ஆராய்ந்து பார்த்தபோது கணிசமான முன்னேற்றத்தினைக் சிறுவர்களின் நிறையில் ஒப்பீட்டளவில் காணக்கூடியதாக இருந்தமை இத்திட்டத்தினை செயற்படுத்தும் அத்தனை பேருனுடைய வெற்றியின் அறிகுறியாகும். அதன் முன்னேற்ற அறிக்கையில் சில மாதிரிகள் இந்த அட்டவணையில் தரப்பட்டுள்ளது. அவற்றில் அத்தனை மாணவா்களினதும் நிறை அதிகாித்து இருப்பதனைக்காணலாம். இவா்களுடைய ஆரோக்கியம் நல்ல கல்விச்சமுகத்தை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.


 இத்திட்டத்தினை முன்னின்று செயற்படுத்தும் கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் உறுப்பினா்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகள் கலந்துகொண்டு இதற்கான மேம்பாட்டு ஆலோசனைகளை எடுத்தியம்பியதுடன் அவர்களுடைய குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment