ADS 468x60

14 July 2017

தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும்.


நாங்கள் இன்னும், எங்கள் சமுகம் மற்றும் மாணவர்கள் இடையே இருக்கின்ற தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும். அவர்களை தொழில் துறைக்குள் கவர்ந்திழுக்கும் மார்க்கத்தினை கிராம மட்டத்தில் இருந்து மாவட்ட மட்டம் வரை விாிவாக்கம் செய்ய வேண்டும். 

இன்று எமது நாட்டில் அதிக தொழிலாளர்கள் வேலைபார்க்கின்ற, அதிக வருமானத்தினை ஈட்டித்தரும் துறைகளாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு (பணிப்பெண்கள்), தேயிலை தொழில் சாலை மற்றும் ஆடைக் கைத்தொழில் துறைகள் காணப்படுகின்றன. இவற்றில் வேலைசெய்வோர் அதிகம் திறனற்ற தொழிலாளிகளாகவே இருக்கின்றனர். ஆனால் ஊழியர்கள் ஆகக்குறைவாக அதே நேரம் தொடர்பான திறனுடன் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு வருமானத்தினை ஈட்டித்தருகின்றமை குறிப்பிடதடதக்கது. 

இதற்மேலாக எமது வடகிழக்கு பிரதேசத்தில் பொதுவாகப் படித்தவர்கள் இருப்பினும் அவர்கள் தொழில் சந்தையினுடைய தேவையை நிறைவு செய்கின்ற திறனை வளர்த்துக்கொள்ளாதவர்களாகவேஇருப்பது பாரிய சவாலாக தேசிய மட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு விடயமாகும். 

ஆக இளைஞர்கள் தேவையற்ற விடயங்களில் காலத்தினை கழிப்பதனைவிடுத்து இந்த 
தொழிற் சந்தைக்கு தேவையான அறிவு, திறனை வளர்த்துக்கொண்டு இந்த நாட்டின் பாரத்தினை அல்லது தங்கள் தங்கள் குடும்ப பாரத்தினை குறைப்பதற்கு முன்வர வேண்டும். இதற்கான முழு ஆற்றுப்படுத்தலையும், தொடர்புபடுத்தலையும் அரசியல்வாதிகள் முன்னின்று சமுகத்துக்கு எடுத்தியம்ப வேண்டும் அதுபோக பாடசாலை முதல் பல்கலைக்கழக மட்டம் வரை இந்த தேவையை எடுத்தியம்பும் விழிப்புணர்வினை முன்னெடுத்து சமுகத்தில் இருக்கும் தொழில் துறைமீதான பார்வையை தெழிவுபடுத்த வேண்டும். அதனூடாக வேலையற்ற இளைஞர் அணியினைக் கொண்ட நாடு என்ற சாபக்கேட்டில் இருந்து நீங்கிக்கொள்ளலாம்.

இளைஞர்களிடையே ஒரு அறிவும் இல்லாது அல்லது திறனும் இல்லாது முச்சக்கர வண்டி ஓட்டலாம் அல்லது வெளிநாடு ஓடிவிடலாம் என்கின்ற மனப்பாங்கை வெளியில் எடுத்தெறியவேண்டும், கௌரவத்தோடும், வாய்ப்புகளோடும் வேலை செய்வதற்க்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் திறனை தொழில் நுட்ப அறிவினூடு பெற்றுக்கொள்ளவேண்டும்.என்பது எனது ஆதங்கம். 

0 comments:

Post a Comment