ADS 468x60

15 July 2017

மீனவர் சங்கங்கள் வலுப்பெறவேண்டும்.

நமது கிராம மக்களை முன்னேற்றுவது எமது மாவட்ட ஒருமைப்பாட்டுக்குப் பக்கபலமாக நிற்கும் என்கிற புனிதக் குறிக்கோள்களை நோக்கி நமது லட்சியப் பயணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறிக்கோள்களுக்கு கூடத் தடைகள் ஏற்படலாம் என்பதை வரலாறு காட்டுகிறது.

எமது மாவட்டத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் திட்டங்களை வகுப்பதிலும்; அதை நிறைவேற்றுவதிலும்; அந்த திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளவை யாக இருக்க வேண்டும் என்பதிலும்; வளர்ச்சித் திட்டங்களால் ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றால் அதனை உடனடியாக களைவதிலும் அக்கறையோடு செயல்பட்டு வரும் ஏழை எளியவர்களின் ஆட்சியாக, சாமானியர்களின் ஆட்சியாக, சராசரி மனிதர்களின் ஆட்சியாக, மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் ஆட்சியாக எமது பிரதிநிதிகளின் தலைமையிலான ஆட்சி விளங்கி வருகிறன்றதா. என்கின்ற கேள்வி அனைவர் மனதிலும் ஊள்ளார்ந்த ரீதியில் இருக்கிறது.
நச்சுப் பொருட்களின் கழிவுகளைக் கொட்டுதல், ஆற்ரோர நில அபகரிப்பு, கண்டல் காடுகள் அழிப்பு, என்று அனைத்து வழிகளிலும் மட்டக்களப்பு வாவிகளில் அநீதிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில் மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தையும் நலிவாக்கி முடக்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பின் வாவிகளை சூழ உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மட்டக்களப்பு பொதுமக்கள் பேசி வருகின்றனர். இவையெல்லாம் நம்ம அரசியல் அதிகாரிகளுக்கு சின்ன சின்ன விசயங்கள். அது எத்தனை மக்களின் வாழ்வாதாரத்தினைக் கேள்விக்குறியாக்கி மாற்றானிடம் மண்டியிடும் ஏழைச் சமுகமாக எதிர்காலத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதில் யார் கருசனை கொள்ளுகிறார்கள்.
மீனவர் சங்கங்கள் வலுப்பெறவேண்டும், அவர்கள் இளைஞர் சங்கங்கள் கழகங்கள் என்பவற்றுடன் ஒன்றிணைந்த வகையில் வலுவான அமைப்பைக் கட்டியெழுப்பி அதனூடு மக்களிடையே எதிர்கால பிரச்சினைகள் தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான விளக்கங்களை வழங்கி, அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்து ஒரு பாதுகாப்பான வேலிலை இந்த துறைசார்ந்து அமைக்கவேண்டும்.
கட்டுமரம் வாழும் வீடு - ஐலசா
மின்னல்வலை அரிச்சுவடி - ஐலசா
பிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள் - ஐலசா
மின்னல் இடிகாணும் கூத்து - ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
முழுநிலாதான் கண்ணாடி - ஐலசா
மூச்சடக்கி நீந்தல் யோகம் - ஐலசா
தொழும் தலைவன் பெருவானம் - ஐலசா
தொண்டு தொழிலாளர் நாங்கள் - ஐலசா
ஒத்துமை கொண்டாடனும் - ஐலசா
உரிமையை உயர்த்திடனும் - ஐலசா

0 comments:

Post a Comment