ADS 468x60

19 July 2013

மட்டக்களப்பின் ஆவணங்களை பாதுகாக்கும் முனைப்பு ஆரம்பம்.

ஒரு சமூகத்தின் இருப்பினை உறுதி செய்வது அதன் புராதன சுவடுகளாகும். உலகில் பல தொலைந்து போன நாகரிகங்கள் அதன் சுவடுகளை ஆதாரமாகக்  கொண்டே அதன் வரலாறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்று தான் இலங்கைத் தமிழர்களின் தொன்மை வரலாறுகள், பல கால இனமுரன்பாடுகள் காரணமாக நியாயமான அளவு இழந்திருக்கின்றது. குறிப்பாக கிழக்கின் மட்டக்களப்பின்  தொன்மை, பூர்வீகம் சார்பான தேடல் அதன் பராமரிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கவில்லை என்பது கவலைக்குரியதே.



இலங்கை தமிழர்களின் இருப்பு காப்பகமாக புதிதாக தோன்றிருக்கும் நூலகம் வலைத் தளம் NOOLAKAM பல்வேறு  ரூபங்களில் தனது சேவையை விஸ்த்தரித்து வருவது குறிப்பிடதக்கது.

இதிலும் குறிப்பாக தமிழ்பேசும் சமுகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமைப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்ப்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச் சேகரங்களையும், ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியினை இந்த வலைத்தளம் இலவச சேவையாகச் செய்து வருகின்றது.

இந்த வலைத்தளம் கொண்டுள்ள அத்தனை உள்ளடக்கங்களும் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் எழுத்தாளர்களுக்கு இவை மிகவும் பயனுள்ள உசாத்துணையாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அத்துடன் எழுத்தாளர்கள், கவிஞ்ஞர்களுக்கு இந்த வலைத்தளத்தினூடாக அவர்களது படைப்புகளை இலவசமாக பிரசுரிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் இதை கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதன் ஒரு சேவை விஸ்த்தரிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிய பெரிய நூல்கள், ஏடுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், எழுத்தாக்கங்கள், இதழ்கள், பிரசுரங்கள், கல்வெட்டுக்கள் என்பனவற்றை வகைப்படுத்தி எண்ணிமைப்படுத்தி (ஸ்கேன்) அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு ஒன்றிணைந்த குழுமத்தினரின் ஏற்ப்பாட்டில் புத்திஜீவிகள், கல்விமான்கள், பாடசாலைச் சமுகம், எழுத்தாளர்கள், மாணவர்கள், தொண்டர்கள் என கலந்து கொண்ட ஒரு தொகுதியினருக்கு நூலகம் செயற்ப்பாட்டுக் குழுவினர் 30.03.2013 அன்று எமது மாவட்டத்துக்கு வருகைதந்து தெழிவுறுத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய நூலகக் குழு நியமனமும் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இக்குழுமத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆக, இந்த வேலைத்திட்டத்தினை செய்வதனூடாக இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியம், வரலாறு, வாழ்க்கைமுறை, எழுத்தாற்றல் என்பவற்றை ஆவணப்படுத்தி, அவற்றை உலகுக்கு பறை சாற்றும் நடவடிக்கைக்கு அனைவரதும்  உதவிகள்  தேவைப்படுகிறது. இதன்மூலம் நமது இருப்பினை பாதுகாக்கும் தருணத்தினை வலிமைப்படுத்த அனைவரும்  ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். 

ஆகவே எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கும் ஆவணங்கள் இருப்பின், அவற்றை இந்தநூலகக் குழுவிடம் தொடர்வு கொண்டு கையளிக்குமாறு அன்பாக வேண்டுகின்றோம். அதனை அவர்கள் எண்ணிமைபடுத்தி(ஸ்கேன்) ஆவணப்படுத்தும் பெரும் கைங்கரியத்திற்கு உதவ ஆவணம் செய்யுமாறு அன்பாக வேண்டி கொள்கிறோம். உங்கள் ஆவணங்கள் எண்ணிமை படுத்தியபின் உங்கள் கரங்களில் பத்திரமாக திருப்பி தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயற்பாட்டிற்கு மாவட்டம் பூராகவும் இருக்கும் எழுத்தாளர்கள் தொண்டர்கள் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.





0 comments:

Post a Comment