ADS 468x60

19 July 2017

கச்சக்கொடிஸ்வாமி மலை தமிழர்களின் பூர்வீக கிராமமா?

அடர்ந்த காடு. இளந்தென்றல். துள்ளிக் குதிக்கும் மான்கள். புதர் மறைவில் முயல்கள். கீச் கீச் பறவைகளின் இசை நாதம். பஞ்சு மெத்தை புற்கள். மலைக்குன்றில் வெண்பனி மேகங்கள். மலை முகட்டில் குதித்து எழும் வெள்ளை அருவி என்பன மகிழ்ந்து இருப்பதுபோல் அங்குள்ள எம் தமிழ் உறவகள் வாழவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மட்டக்களப்பின் தென் மேல் பகுதியில் தமிழ் வரலாற்று முக்கியமான இடங்களை தன்னகத்தே கொண்டுள்ள பகுதிகளுக்குள் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு முக்கியமானதாகும். இங்கு இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள அழகானதும் எல்லைக் கிராமமுமாக திகழ்வது கச்சகொடி சுவாமி மலையாகும்.


வலிமையுள்ளவன் சொன்ன சொல்லில் வாழும் இந்த மக்கள் அவர்களுக்கென தேவையானதை சொல்லிக் கேட்க்கும் தலைமையை வேண்டி நிற்க்கின்றனர். உறங்கக்கூட யானைகளின் அட்டகாசத்தினால் பாதுகாப்பில்லாதது போலவே, இவர்களது சொத்துக்களுக்கும் எதிர்காலத்துக்கும் நாதியில்லாமல் போகும் நிலமை காணப்படுகிறது. 

கிட்டத்தட்ட 1533 மக்கள் தொகையைக் கொண்டுள்ள இக்கிராமம் ஒரு பழங்கிராமமாகும். இந்த பிரதேசம் பல காலமாக இடம்பெயர்ந்து யுத்தத்தின் கெடுபிடிக்குள் நேரடியாக அகப்பட்ட ஒரு வறிய கிராமமாகும். இவ்வாறான கிராமங்களில் அடிப்படைக் கல்வி கூட மிக மந்தமான நிலையில் இருக்கையில் தொழில்நுட்ப்பக் கல்வி, மருத்துவம் போன்றவற்றின் முன்னேற்றம் பற்றி நாங்கள் எதை எதிர்பார்ப்பது!! இந்த துறைகளில் ஒட்டுமொத்த உலகத்தினரும்; கால் நூற்றாண்டுக்கும் முன்பதாகவே கால் எடுத்து வைத்துள்ள நிலையில் நாங்கள் இன்னும் பின்னுக்கு நிற்ப்பது உலகத் தமிழரின் வளர்;ச்சிப் பங்கில் பின்னடைவையே ஏற்ப்படுத்தக்கூடும்.

பாடசாலையின் அதிபர் இவ்வாறு கூறுகிறார் 
கனடாவின் சிடாஸ் அமைப்பினர் எமது மட்டக்களப்பு கிராமங்களில் கல்வி கற்க்கும் வசதி குறைந்த  சுமார்  50  மாணவர்களுக்கு, அடிப்படை வசதிகளைக் கொடுத்து உதவும் வகையில் கச்சகொடிஸ்வாமிமலை மகாவித்யாலயம் பாடசாலையில் 27.04.2013 அன்று பெறுமதி மிக்க பாடசாலை சப்பாத்துக்களையும், புத்தகப் பைகளையும் வழங்க உதவியமை வரவேற்க்க தக்க ஒன்றாகும்.

'எங்கள் பிள்ளைகள் பெரிய ஆளா வரனும் எண்டு ஒண்டும் நாங்க பாக்கல்ல. அவங்க எழுத வாசிக்கயாவது படிச்சா அத பெரிசா நெனச்சிக்குவம் நாங்க, இவங்க நாலு மூணு மைலுக்கு அங்காலயும் இருந்து இஞ்ச வாறாங்க, அவங்க திரும்ப வீடு வந்து சேரக்குள்ள 4 மணியாகுது. அவங்களுக்கு நாங்க உழசை;சி பெரிசா படிப்பிக்கிற அளவுக்கு எங்களுக்கு வருமான மட்டம் காணாது, சீசன் தொழில்தான், வீடு வாசல், வேலி வெளைச்சல் என்று ஒன்றயும் செய்ய முடியாத நில எங்களுக்கு தம்பி. அதால புள்ளங்கல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிறத்துக்கு பதிலா வேலைக்கனுப்புறாங்க. இதனால தொடந்து படிக்காம இந்த மாவட்டத்துக்கே கூலிக்கார சனங்களா போகுதுகள். அதுக்குள்ள நீங்க இங்க வந்து இந்த வெறுங்காலோட திரியுற புள்ளகளுக்கு நல்ல சப்பாத்துகள் பாடசாலை பைகள் எல்லாம் தந்ததற்கு எல்லோர் சார்பிலும் நன்றி' என நிலைமையை உள்ளபடி சொன்னார் ஒரு ஊர்வாசி.

எது எப்படி இருப்பினும் இன்னும் இவ்வாறு காணப்படும் கிராமங்களுக்கு தமிழர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகொடுத்து உதவினால் தான் நாளை இவர்களும் எம் உறவுகள் என சொல்லும் சொந்தக் காரர்கள் ஆகலாம்.

( மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் ..  )

நிகழ்வுகளின்  நிழல்கள் 
இந்தக் குழந்தைகள் மலைக் குன்றுகளில், வெயிலில் பாதணி இன்றி நடப்பது எமது மனதுக்கு மாத்திரமல்ல எல்லோருக்கும் வருத்தத்தினை எற்ப்படுத்துகிறது. எத்தனை காலம் இந்த பிஞ்சுகள் அரவணைப்பின்றி வாழப்போகிறார்களோ! ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். உண்மையில் சிடாஸ் நிறுவனத்தினரின் இந்த மகத்தான பணி வரவேற்க்கத்தக்கதுதான்.








பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் -
என்ற நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது

0 comments:

Post a Comment