ADS 468x60

17 July 2017

யாருக்கு தெரியும் இன்னும் தமிழர்கள் இருட்டுக்குள் கிடப்பது

கால்கள் நகர மறுத்தன ஓங்கிக் குலை(ர)க்கும் நாய்களின் சத்தம், ஓரங்களில் நிற்க்கும் பற்றைக்காடுகள், தேங்கிக் கிடக்கும் மழை தண்ணீர்,  இவற்றுக்கு இடையே மின்னிக் ஒளிரும் குப்பி விளக்குகளின் அடியில் மண்டியிட்டுக் கிடக்கும் குழந்தைகளை போகும் இடம் எல்லாம் கண்டோம்.

எமது நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது, இருந்தும் இன்னும் இருளில் மண்டிக் கிடக்கும் எம் தமிழ் குழந்தைகளின் கல்வியும், இருள் மயமாய் போய்விட்டது. அது ஒரு கசப்பான அனுபவம். சென்ற பரம்பரை அந்த  கல்விச் செல்வத்துக்கு உரித்தற்றவர்களாக நடந்த கொடிய யுத்தம் அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளது.

இந்த நிலை தொடரக்கூடாது. நாங்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு, மின்சார வசதி இல்லாத இம்முறை க.பொ.சாதாரண தரத்துக்கு தோற்ற இருக்கின்ற 101 மிகக் கஸ்ட்டப்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 'ஹரிக்கன் லாம்புகள்' வழங்கி நல்ல வெளிச்சத்தில் படிக்க உதவினோம். காயன்மடு, இலுப்படிச்சேனை, கரடியனாறு, கித்துள் போன்ற பாடசாலைகளில் இருந்து இம்மாணவச் செல்வங்கள் ஒளி வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். 

'இந்தப் பாடசாலைக்கு சுமார் 12 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தெல்லாம் வந்து கல்விகற்றுவிட்டு திரும்பச் சென்று படிக்கும் அதி கஸ்ட்ட பகுதியில் இருக்கும் மாணவர்கள் அநேகம், உன்னிச்சை, உன்னிச்சை ஆறாம் கட்டை, உன்னிச்சை 8ம் கட்டை, இராசதுரை நகர், ஆயித்தியமலை, கித்துள், மணிபுரம் மற்றும் நெல்லூர் போன்ற இடங்களைப் போன்று 20 பின்தங்கிய கிராமங்களில் இருந்து வைசைக்கிளிலும் நடந்தும் கல்வி கற்று வருகின்றனர்' என கரடியனாறு பாடசாலையின் அதிபர் திரு R.செந்தில்நாதன் தெரிவித்தார்.

'டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு சவாலான நாள், அதிலும் குப்பி லாம்புகளின் அடியில் இந்த மாரி காலத்தில், அடிக்கும் காற்றிலும், தூவாணத்தின் ஈரளிப்பிலும், கூரைகளின் இடைவெளியில் ஒழுகிக்கொண்டிருக்கும் மழைச் சொட்டுகளுக்கு மத்தியிலும் பஞ்சம் தலை தூக்கும் இந்த தருணத்தில் கரிக்கன் லாம்பில் படிக்கும் அளவுக்கு வசதியானவர்கள் இல்லை இந்தக் குழந்தைகள், இது இவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே' என கரடியானாறு பாடசாலையின் பிரதி அதிபர் T.கரிகாலன் அவர்கள் உருக்கமாக கூறினார்

நான்கு பாடசாலைகளுக்கும் சென்று 101 கரிக்கன் லாம்புகளை அந்தந்த மாணவர்களிடம் வழங்கி வைத்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும், உற்ச்சாகத்தினையும் ஏற்ப்படுத்த என்னுடன் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாள நண்பர்கள் கைகோர்த்தமை, இன்னும் இந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மனங்களில் நம்பிக்கை உணர்வை ஏற்ப்படுத்தியதை காணக்கூடியதாக உள்ளது. விரிவுரையாளர் ரவி அண்ணன், விரிவுரையாளர் சுரேஸ், விரிவுரையாளர் திருமதி சுரேஸ் மற்றும் உதவி விரிவுரையாளர் ஜேசாந்தினி மற்றும் ஆசிரியர் றமேஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து இம்மாணவர்களுக்கு பல புத்திமதியையும், உற்சாகத்தினையும் நல்கி இந்த கரிக்கன் லாம்புகளை வழங்கி வைத்தனர்.

இதிலும் விசேடம் இந்தப் பிரதேசத்தில் இருந்து கல்வி கற்று மற்றும் ஆசிரியராக கற்ப்பித்தும் இன்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி அங்கு விரிவுரையாளர்களாக கடமை புரியும் நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி களத்தில் இறங்கி வேலை செய்தமை உன்மையில் ஒரு நிறைவையும் புது நம்பிக்கையினையும் எமக்கு ஏற்ப்படுத்த தவறவில்லை.

(மாணவர்களின் அளவில்லாத சந்தோசம் இங்கு இந்த வீடியோ இணைப்பில்)

'முகம் தெரியாத எங்களுக்கு, எங்கள் கஸ்ட்ட நிலையை உணர்ந்து இன்னும் சிறப்பாக கல்வியை கற்று ஒரு ஒளி மயமான வாழ்க்கைக்குள் பிரவேசிக்க வேண்டும் என இந்த பெறுமதி மிக்க கரிக்கன் லாம்புகளை தேடி, வாங்கி எமது காலடியில் தந்து கல்விக்கு ஒளி கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இவைபோன்ற பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு ஒளியேற்ற நல்ல ஆசியை இறைவன் வழங்க வேண்டுமென இப்பிரதேச மக்களின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்' என இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்த ஊரைச் சேர்ந்ந உதவி விரிவுரையாளர் செல்வி T.ஜேசாந்தினி தெரிவ்த்தார்.

எங்கட அப்பா அம்மா எல்லாம் கூலி வேலை செஞ்சிதான் படிக்கிறம், சின்ன வயசில இஞ்ச சரியான சண்டை அதால வீட்ட விட்டு ஒரே ஓடுறான் வேலை, அதால சரியா படிக்காம போயிட்டம், ஓடித் திரிஞ்சதால ஒழுங்கான ஒளைப்பும் இல்ல, இப்பதான் யுத்தம் முடிஞ்சி திரும்ப வந்து படிக்க ஆரம்பிச்சி இருக்கம், எங்களுக்கு உங்களப் போல எல்லாம் படிச்சி முன்னுக்கு வர சரியான ஆச சேர். குப்பி விளக்கிலதான் படிக்கிற சில வேளைகளில அதை அம்மா அப்பா எங்கயாச்சினும் தண்ணி எடுக்க, பக்கத்து வீட்டுக்கு என்டு கொண்டுபோனா படிக்க முடியாதுபோயிடும், அதுபோல இஞ்ச பாத்திங்கணா எங்கும் பெரிய வயல் வெட்டை மழை காலங்களில் குப்பி விளக்கு வைத்து படிக்கிற எங்களுக்கு சரியான கஸ்ட்டம் சேர். ஆனா இந்த கரிக்கன் லாம்ப பார்த்ததும் என்ன சொல்ர என்டே தெரியல! இந்த பெரும் உதவியை  தந்துதவிய அன்ரன் ஜெசன்வை அங்கிள் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் ' என முகத்தில் புன்னகை தவள சின்னத்துரை சபேசன் என்ற மாணவன்  நன்றியுணர்வுடன் கூறினான்..

இத்துடன் இந்த மாணவர்களுக்கு பரிட்சை நெருங்குவதால் அவர்களுக்கான சில மேலதிக உதவிகளையும் அவர்கள் எங்களிடம் கேட்டனர், சில விசேட பிரத்தியேக வினாவிடை வகுப்புகளை ஒழுங்குபடுத்தித் தரும்படியும், அவர்களிடம் தற்பொழுது கைகளில் இல்லாத புத்தகங்கள் சிலவற்றை வாங்கித் தரும்படியும் சொந்த சகோரதங்களாக அவர்கள் எங்களிடம் வேண்டிக்கொண்டனர். உடனடியாக அவர்களுக்கு நாங்கள் முன்வந்து ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களைப் போதிப்பதற்கு இணக்கம் தெரிவித்தது அவர்களுக்கும் எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆக எமது தமிழ் சமுகம் இழந்தவற்றை அவர்கள் திருப்பிப் பெற நாம் முயற்சி எடுக்காமல் பேசிக் கொண்டு இருப்பதை விட இந்த அளவில் எல்லா இடங்களிலும் நாமே முன்வருவோம், நாமே கட்டியெழுப்ப உதவியாய் இருப்போம் நம்மை விட்டால் வேறு யார்டதான் அக்கறை கொள்ளப்போகிறார்கள்!!! 

எங்கள் குழுமத்தில் இம்மாதிரியான தொண்டுள்ளம் கொண்டவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதனையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். வாருங்கள் உங்கள் பங்களிப்பையும் இச்சமுகத்தை கட்டியெழுப்ப தாருங்கள்

இருட்டில் குப்பி விளக்கில் படிக்கும் மாணவர்கள்

நாங்கள் வழங்கிய கரிக்கன் லாம்பில் படிக்கும் சிறுவர்கள்.
நன்றி சொல்லும் பாடசாலை அதிபர்..
 இந்த நிகழ்வை சிறப்பிக்க எங்களுடன் தோழ் கொடுக்கும் விரிவுரையாளர்கள்


கரிக்கன் லாம்பை பெற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள்..

இருட்டிலும் வீடு வீடாகச் சென்று கரிக்கன் லாம்பினை மாணவர்களுக்கு வழங்கும்போது..


0 comments:

Post a Comment