ADS 468x60

28 August 2017

மதுவில் மயங்கும் மட்டக்களப்பார்

ஒரு பிரதேசத்தின் முதுகெலும்பு அந்த பிரதேசத்தின் மனித வளங்கள்தான். அவற்றை ஆரோக்கியமாக பேணுவதனிலேயே அந்த சமுகத்தின் வளர்சி தங்கியுள்ளது. ஆனால் இந்த மனிதர்களை இயக்கத்தில் வைக்கவேண்டிய அதிகாரிகள் மயக்கத்தில் அல்லோ வைத்திருக்கின்றனர் எப்படி ஐயா மட்டக்களப்பு உருப்படும்? தவறான விடயங்களில் எல்லாம் மறவாமல் முன்னிற்கும் மட்டக்களப்பு வருடா வருடம் அதிகம் மது நுகர்வோர் மூலம் புதுவித சாதனையாக அதிக பணத்தை செலவிடும் பட்டியலில் இலங்கையில் முதன்மை வகிக்கிறது. இங்கு அட்டவணையின் தகவல்படி 63 உத்தரவாதமளிக்கப்பட்ட மதுசாலைகள் இயங்கிவருவது ஒரு ஆபத்தான விடயமே. அது இப்போது 66 ஆக உயா்ந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் மன்முனை வடக்கில் மாத்திரம் 33 மதுசாலைகள் இயங்கிவருகின்றன.

26 August 2017

எங்கதம்பி மட்டக்களப்பு

இன்று சிங்கள நண்பி ஒருவர், பத்திாிகையில் வௌிவந்த எனது மாலையிட்டு பொட்டுவைத்த படத்துடன் கூடய ஆக்கம் ஒன்றினைப் பார்த்துவிட்டுக் கேட்டார் 'சீலன் எங்க #யாழ்பாணத்திற்கு #போய் #ஏதும் #புரோக்கிறாம் #செய்த#நீங்களா?' என. எனக்கு அப்போது தான் மிகத்தெழிவாகத் விளங்கத்தொடங்கியது மட்டக்களப்பை, அவர்களது கலாசாரத்தினை, தமிழ்ப் பண்பாட்டை யாருக்கும் தெரியாதவாறு அறவே குழிதோண்டிப் புதைத்து அதை ஏனைய சமுகத்தினரின் மனங்களில் இருந்து யாழ்ப்பாணத்தினர் அடங்கலாக அகற்றி விட்டனர் என்பதை நினைத்து மிகவும் வேதனையடைந்தேன். அவர்களுக்கு மட்டக்களப்பார், தமிழ்ர் என்பது காட்டப்படவில்லை, அவர்களது கலாசாரம் பூர்வீகம்வாய்ந்தது என எடுத்துச் செல்லப்படவில்லை.

மீன்மகள் பாடுகின்றாள் கேளுங்கள்!


நீண்ட நாட்களின் பின் ஒரு மட்டக்களப்பு கலை சார் பதிவினை ஏற்றலாம் என நினைத்தேன். இங்கு எப்படி நம்ம மட்டக்களப்பு மீன்கள் பாடுகின்றன எனச் சற்றுக் கேட்டுப்பாருங்களேன்.
கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.

11 August 2017

பட்டிருப்பு தொகுதியில் ஒருங்கிணைப்பின் தேவைப்பாடு

Image may contain: 3 people, people sitting, people eating, pizza, table and foodநான் சென்ற மாதம் எமது பட்டிருப்பு தொகுதியில நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு; அழைக்கப்பட்டிருந்தேன். எனக்குள்ள அக்கறைக்கு பொருத்தமான இரு அதிகாாிகளை சந்திக்க கிடைத்தது ஒருவர் வைத்தியர் சுகுணன் மற்றவர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளைநாயகம்....

05 August 2017

வாய்ப்பேச்சில் வீரனாய் இருப்பவர்களை நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறோம்!

எல்லா பெரியவர்களும் உட்காந்து இருக்கும் மகா சபையில் வீஸ்மர், துரோணாச்சாரியார் உட்பட எல்லாம் கொதிச்சுப்போய் பெண் பாலியல் துஸ்ப்பிரயோகம் கண்முன் நடக்கும் போது அதற்கு எதிராக அந்த மகா சபையில் என்ன செய்தார்கள்? சும்மா பாா்த்துக்கொண்டு இருந்தாா்கள். வீஸ்மர் அல்லது துரோணர் போன்ற மாமேதைகளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கணுமா! படித்த மேதாவிகள்தானே! இல்லப்பா இல்லை, அவர்கள் எல்லாரும் (fair weather good people) தட்பவெட்ப சூழ்நிலைகள் நன்னறாக இருக்கும் பொழுது கண்ணுக்கு முன் அபாயம் இல்லாது இருக்கும் பொழுது மாத்திரம் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவ்வாறு எல்லாராலயும் நல்லவனா இருக்கமுடியும் அது ஒன்றும் பொியவிடயமல்ல தானே.

04 August 2017

வேரையறுத்தல்லோ காடை அழித்தோம்!

Related image
வேரையறுத்தல்லோ
காடை அழித்தோம்
காடையழித்தல்லோ
வீடை அமைத்தோம்
வீடையமைத்தல்லோ
பீடை வளர்த்தோம்
பீடைவளர்த்தல்லோ
கோடை ஆக்கினோம்
கோடைவந்தல்லோ
மழையை இழந்தோம்
மழையை இழந்தல்லோ
குழைகள் தொலைத்தோம்
குழைகள்வரண்டல்லோ
உணவை இழந்தோம்
உணவை இழந்தல்லோ
உண்டி வரண்டோம்
உண்டிவரண்டும்
உருவாக்கினானா காட்டை
இல்லை

உப்பூறல் கிராமத்தை பாா்த்து உடைந்துபோனோம்.

ஆறுகள், கடல்கள், காடுகள், மலைகள், வயல்கள், வாய்க்கால்கள் போன்ற வளமார்ந்த நிலபுலம் கடந்து போய்க்கொண்ருந்தோம். அங்கு சென்றதன்பின் இப்படி ஒரு துயரத்தினை பார்த்ததில்லை, கேட்டதில்லை அதனால் வேர்த்துபோனோம். அங்கு வந்திருந்த குழந்தைகளின் நிலையினைக் கண்டு ஏதோ வேற்று சமுகத்தினரை பார்ப்பதுபோல இருந்தது. சீவாத முடி, சிதைந்த உடை, பசியில் வாடிய முகங்கள் ஆனால் பார்ப்பதற்கு நல்ல அகங்கள். ஆம், சூரியன் உதிக்கும் கிழக்குப் பெருமலை, இராவணன் துதித்த திருமலை  இதன் தென்பால் மூதூர் பகுதியில் கடலும், மலையும், குளமும், வயலும், காடும், மேடும் என ஐந்நில வளமும் கொண்ட ஆரோக்கிய பூமியில் அடிமைகளாய், சொந்த நிலத்தில் கூலித்தொழில் செய்யும் ஒரு சமுகத்தினை தரிசிக்கக் கிடைத்தது உப்பூறல் என்னுமிடத்தில். இது மிகவும் பின்தங்கிய கிராமம், அடிப்படை வசதிகளைக் கூட அனுபவிக்கமுடியாத வறியவர்கள் அதிகம் வாழும் ஒரு கிராமம். ஆனால் அவர்களது நிலத்தினிலேயே இன்னொருவருக்கு கூலிவேலை செய்யும் துர்ப்பாக்கியமான குடும்பங்களை அதிகமாகக்கொண்ட மிகப் பின்தங்கிய கிராமம் இது. சுனாமியாலும், யுத்தத்தினாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மிக நலிவுற்ற மக்கள் இவர்கள்.

எங்கும் ஒலி எங்கே ஒளிப்பது?

எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
மனிதன் இயந்திரமாக்கப்பட்டுள்ளான்
அதனால் பல முறை
மனிதத்தை துலைத்துவிடுகிறோம்..
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
உண்ணும் வேளை
உறங்கும் வேளை
களிவறைக்குள்
குளியலறைக்குள்
குழந்தையுடன் இருக்கும் வேளை
குதூகலத்தில் இருக்கும் வேளை
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?

03 August 2017

மட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்!

நீரோடும் நாட்டில் மீன்பாடக் கேட்டு நெல்லாடும் பூமியிது.
மட்டக்களப்பு தமிழகத்தின் தமிழர்களை தமிழால் தமிழில் தமிழ்போற்றி அன்றய எமுத்தாளர்கள் பனையோலை, செப்புத்தகடு, ஆணி இவற்றின் துணைகொண்டு எமது மட்டக்களப்பு தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, பூர்வீகம் கொண்ட வரலாற்றுப்பதிவுகளை காலத்துக்கு காலம் எழுதிவைத்துள்ளனர். இவற்றையெல்லாம் மகாவித்துவான் அவர்கள் தேடி பொறுக்கி மான்மியத்தை எழுதி பறைசாற்றியது அந்தக்காலம்.