ADS 468x60

26 August 2017

எங்கதம்பி மட்டக்களப்பு

இன்று சிங்கள நண்பி ஒருவர், பத்திாிகையில் வௌிவந்த எனது மாலையிட்டு பொட்டுவைத்த படத்துடன் கூடய ஆக்கம் ஒன்றினைப் பார்த்துவிட்டுக் கேட்டார் 'சீலன் எங்க #யாழ்பாணத்திற்கு #போய் #ஏதும் #புரோக்கிறாம் #செய்த#நீங்களா?' என. எனக்கு அப்போது தான் மிகத்தெழிவாகத் விளங்கத்தொடங்கியது மட்டக்களப்பை, அவர்களது கலாசாரத்தினை, தமிழ்ப் பண்பாட்டை யாருக்கும் தெரியாதவாறு அறவே குழிதோண்டிப் புதைத்து அதை ஏனைய சமுகத்தினரின் மனங்களில் இருந்து யாழ்ப்பாணத்தினர் அடங்கலாக அகற்றி விட்டனர் என்பதை நினைத்து மிகவும் வேதனையடைந்தேன். அவர்களுக்கு மட்டக்களப்பார், தமிழ்ர் என்பது காட்டப்படவில்லை, அவர்களது கலாசாரம் பூர்வீகம்வாய்ந்தது என எடுத்துச் செல்லப்படவில்லை.


நிலத்தை விற்றீர்கள், நீரை விற்றீர்கள், அதிகாரத்தை விற்றீர்கள், கல்வியை விற்றீர்கள் மற்றும் மக்களை விற்றீர்கள், அதெல்லாம் விடுங்க அடேய் எமக்கென சொல்லிக்கொள்ள மிஞ்சியிருந்த எமது அடையாளத்தையும் விற்று போட்டீங்களேப்பா! நெஞ்சி பொறுக்கவில்லையடா உங்களையெல்லாம் வரவைத்து வரவைத்து உள்ளதையெல்லாம் போகவைத்துவிட்டோமே. நான் சொல்லுவது மிகச் சின்ன விடயமாகத் தெரியலாம் ஆனால் அதன் பின்னால் உள்ள விளைவுகளை விரைவில் அனைத்து மட்டக்களப்பாரும் அனுபவிப்பர். எங்கே தமிழ் உள்ளது என ஏனையோர் தேடும் ஒரு நாதியில்லாத நகராமாகும் செயற்பாட்டை நம்ம தலைவர்கள் செய்துகொண்டு இருக்கின்றனரா என எண்ணத்தோன்றுகின்றது.

எமது 2500ம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் நாகரிகத்தினை எடுத்துச் செல்ல முதுகெலும்பில்லாதவர்கள் எம்மையெல்லாம் வழிநடத்த நெற்றியில் பட்டையும் களுத்தில் கொட்டையும் இடுப்பில் வேட்டியும் கட்டினால் போதாது செய்து காட்டவேண்டும், இருப்பை உறுதிப்படுத்த உலகை மட்டக்களப்புக்கு அழைத்துவரவேண்டும், சர்வதேச தமழ் காலாசார மாநாட்டு நிகழ்வுகளை கிழக்கின் தமிழ் தாயகமான எமது அழகு தமிழ் மீன்பாடும் தேனகரில் அரங்கேற்றி அவற்றை பறையவேண்டும். மீடியா நண்பா்கள் அதற்கு உதவவேண்டும், ஆக்கபூா்வமான பத்திாிகைகள், சஞ்சிகைகள் வௌிவரவேண்டும், கலை நிகழ்வுகள் அரங்கேற்ற வேண்டும். கண்களில் நீர்மல்க இதை கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். நான் உங்களுடன் சேவகனாய்ப பயணிக்க தயாராக இருக்கின்றேன் மட்டக்களப்பின் மட்டில்லாத தமிழ் கலாசாரம் வலிமை குன்றா நாகரிகம் என்று ஒன்றுண்டு என்பதை செயலில் காட்ட ஒன்றிணைவோம் உள்ளதையாவது ஒற்றுமையால் கட்டிக்காப்போம்.
சி.தணிகசீலன், S.Thanigaseelan

0 comments:

Post a Comment