ADS 468x60

04 August 2017

எங்கும் ஒலி எங்கே ஒளிப்பது?

எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
மனிதன் இயந்திரமாக்கப்பட்டுள்ளான்
அதனால் பல முறை
மனிதத்தை துலைத்துவிடுகிறோம்..
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
உண்ணும் வேளை
உறங்கும் வேளை
களிவறைக்குள்
குளியலறைக்குள்
குழந்தையுடன் இருக்கும் வேளை
குதூகலத்தில் இருக்கும் வேளை
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?

ஒட்டுக் கேட்க
ஓட்டுப் போட
கட்டுக் கதை சொல்ல
கலவரம் உருவாக்க
நாட்டுக்குள்ளும்- சொந்த
வீட்டுக்குள்ளும்
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
தண்ணி அடிக்கும்போது- தவறி
கன்னியோடணையும் போது
தேவனிடம் போகிறேன் -என
தேவியிடம் போயிருக்கையில்
கண்ணி வைத்துப் பிடிக்குதையா
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
பரீட்சை முடிவு வரும்வேளை
பழக்கமில்லாதோர் அழைக்கும் வேளை
காதல் முடிவு வரும் வேளை
கடன்காரன் அழைக்கும் வேளை
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
நல்லவற்றுக்காக நல்லனவற்றை 
நல்லவாறாய் உபயோகிப்போம்...

0 comments:

Post a Comment