ADS 468x60

05 August 2017

வாய்ப்பேச்சில் வீரனாய் இருப்பவர்களை நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறோம்!

எல்லா பெரியவர்களும் உட்காந்து இருக்கும் மகா சபையில் வீஸ்மர், துரோணாச்சாரியார் உட்பட எல்லாம் கொதிச்சுப்போய் பெண் பாலியல் துஸ்ப்பிரயோகம் கண்முன் நடக்கும் போது அதற்கு எதிராக அந்த மகா சபையில் என்ன செய்தார்கள்? சும்மா பாா்த்துக்கொண்டு இருந்தாா்கள். வீஸ்மர் அல்லது துரோணர் போன்ற மாமேதைகளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கணுமா! படித்த மேதாவிகள்தானே! இல்லப்பா இல்லை, அவர்கள் எல்லாரும் (fair weather good people) தட்பவெட்ப சூழ்நிலைகள் நன்னறாக இருக்கும் பொழுது கண்ணுக்கு முன் அபாயம் இல்லாது இருக்கும் பொழுது மாத்திரம் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவ்வாறு எல்லாராலயும் நல்லவனா இருக்கமுடியும் அது ஒன்றும் பொியவிடயமல்ல தானே.

இப்படிப்பட்ட சொல்லிக்கொள்ளும் நல்லவனத்தூக்கி கடுமையான ஒரு சூழ்நிலையில் போடுங்க பார்க்கலாம் இயலாமல் வெளிறிப்போனான் என்றால் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் இல்லாதவன் என வௌியில் தூக்கி வீசிடுங்க. #அறம்சார் #நன்மை என்று ஒன்றுண்டு அந்த அறம்சார் நன்மை செய்யக்கூடியவங்க, வல்லவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி பத்திரிகைகளில் வரவேண்டியவனோ, மேடைகளில் பதவி கிடைத்ததும் மட்டும் மற்றவர்கள் அறிந்துகொள்ளவேண்டியவனும் இல்லை, மாறாக நீங்களும் நானும் பாதையில் நடக்கும்போது இடர்படும் கல்லை பிறருக்கு இது ஏற்றபடக்கூடாதென்று எடுத்து வீசுகின்ற யாரோ பெத்த, முகவரி தெரியாத, முகமே தெரியாத மீண்டும் பார்பதற்குகூட வாய்ப்பு கிடையாத மனிதர்கள் இருக்கும் வரை கண்டிப்பா மழைபெய்யும்.

ஆனால் நம்ம தளபதிகள் பிரச்சினை என்னு ஒன்று வரும்போது எங்கோ போய் ஒளிந்துகொள்ளுகிறார்கள், நா வறண்டுபோய் நிற்கிறார்கள், பிறழ்வான வார்த்தைகளை தட்டுத்தடுமாறிப் பேசுகிறார்கள். இவர்கள் எமது மக்களுக்கு கடுமையாக சூழ்ந்நிலை நேரும்போது கொழும்பில் போய் அக்கறையாய் வேலை பார்க்கிறார்களாம். இவர்களுக்கு எப்படிப்பா ஐ.எஸ்.ஓ சான்று கொடுத்தீர்கள்! ஒரு பா.ம உறுப்பினர் சொன்னார், தனக்கு பிரதமர் வந்தது தெரியாதாம், தான் கொழும்பில் நின்றுவிட்டாராம், ஐயா நான் ஒரு பாமரன், உங்க அளவுக்கு நீங்கள் சொல்லுவதுபோல் படித்தவனோ, பெரிய அதிகாரியோ கிடையாது இருந்தும் பிரதமர் வருகிறாராம் என்பதை பல பேர் வாயிலாக, ஊடகங்கள் வாயிலாக அவா் வருவதற்கு முன்னமே அறிந்துகொண்டேன் என்றால், நீங்கள் என்ன மோட்டை பார்த்துக்கொண்டா இருந்தீர்கள்! அவர் இங்கு வரமுன் உங்களுக்கு அழைப்பு வழங்கப்படவில்லையே! என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் ஐ.எஸ்.ஓ தந்திருக்கலாம்.

உண்மையைச் சொல்லுங்கள் பார்க்கலாம் எங்களுக்கும் ரான்ஸ்பேரன்சி தேவை நீங்கள் சொல்லும் அந்த ஆங்கில வாா்த்தைக்கு பாராட்டுகள், நீங்கள் ஒருக்கால், பிரதமரை சந்தித்து இருந்தால் (மட்டக்களப்பில்) என்ன வகையான அபிவிருத்தி திட்டங்களை செய்வதன் மூலம், எமது எல்லாவகையிலும் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தலாம் என பரிந்துரைத்திருப்பீர்கள்? சுற்றி வளைக்காமல் சொல்லவேண்டும்.

அது எந்த எந்த துறையாக இருக்க வேண்டும்? எந்த மக்களை அது குறிப்பாக பிரதிபலிக்க வேண்டும்? அதன் நீண்ட குறுங்கால வெளியீடு என்னவாக இருக்கும்? இதனால் எத்தனை விகிதமான வறுமை தற்போதுள்ள கிட்டத்தட்ட 15வீதத்தில் இருந்து குறைவடையும்?, இதனை அமுல்படுத்துவதனால் போசாக்கு மட்டம் குழந்தைகளிடையே எத்தனை விகிதத்தினால் உயர்வடையும்?, மாணவர் இடைவிலகல் எத்தனை பேரினால் குறைவடையும்?, உற்பத்தித் திறன் எவ்வாறு மேன்மையடையும்?, உயர்கல்வி மட்டம் எவ்வாறு எந்தெந்த வலயத்தில் எத்தனை விகிதத்தினால் கூடும்?, சமுக பொருளாதார உட்கட்டுமான வசதிகள் எவ்வாறு, எங்கெங்கு எதற்காக அபிவிருத்தி செய்யவேண்டும்? அதனால் எம் தமிழ் சமுகத்தின் வாழ்க்கைத்தரம் எங்கு உயர்ச்சியடையும்? எந்தெந்த ஆண்டில் இவை சாத்தியமாகலாம்? என்று சொல்ல முடியுமா? கௌரவ பெரிய படித்தவர்களே.

சும்மா யார விரட்டுகிறீர்கள்! உங்களால முடியலயா முடிஞ்சவங்கள அழைச்சி அவங்கட ஆலோசனையைப்பெற்று பிரதமருக்கு மாத்திரமல்ல ஐனாதிபதி, மந்திரிமார், பன்னநாட்டு தூதுவராலயங்கள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐஎவ்சி இன்னும் யு.என் போன்றோாிடம் போனீங்களா? அவர்களிடம் இவ்வாறு உரிய காரணங்களுடன் உருவாக்கிய திட்ட வரைபுகளைக் கொடுத்தீர்களா?, அதை கொடுத்த பின் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என கேட்டு பின் தொடர்ந்தீர்களா?! இல்லை என்றே பதில் வரும். இதெல்லாம் சாதார வேலை இல்லை ஆனால் அது ஒரு பாராளு மன்ற உறுப்பினருக்கோ அல்லது மா.ச.உறுப்பினருக்கோ ரொக்கட் சயன்சும் இல்லை.

நீங்கள் எத்தனைபேர் பா.ம ஓவர்சைட் மீற்றிங்கில் பங்குகொள்ளுகிறீர்கள! சொல்லுங்கள் பார்க்கலாம்!! அவற்றை எங்கு மக்களுக்கு அறியப்படுத்தியிருக்கிறீா்கள், அங்கு எல்லா அமைச்சுக்களும் தங்களது செயலாற்று அறிக்கையை சமர்ப்பிக்கும் போது எமது மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளை தட்டிக்கேட்க நீங்கள் யாரும் போகின்றீர்களா, தட்டிக்கேட்கின்றீர்களா அல்லது அங்கு சென்று அங்கு தருகின்ற வெறும் ரீயை குடித்துவிட்டு அவர்கள் டச்சுபுஸ்சு என ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு விட்டு திரும்புகிறீர்களா! வெளிப்படைத்தன்மை எங்களுக்கு வேண்டும். சும்மா எடுத்ததுக்கெல்லாம், பதின்மூன்று பன்ரெண்டு ஐயா இது இங்குள்ள 97விகிதமான அடிமட்ட மக்களுக்கு இந்த அரசியல் உண்மையில் தெரியாது. அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை.

ஏனென்றால் கடந்த யுத்தத்துக்கு உயிா் கொடுத்து , உடமைகளைக் கொடுத்து, போடிமாரை இழந்து, பொருளாதாரத்தினை இழந்து, அரச வசதிகள் பறக்கணிக்கப்பட்டு அரையும் குறையுமாக உயிரோடு மட்டும் ஊசலாடுகின்ற, எங்கட சனத்தை அவங்கட நிலைமையை உங்களுக்கு தொியவே தொியாதா? இந்த மக்கள் வயிற்று பசியால் வாடும் போது, தங்களுடைய குமர்பிள்ளைகள் வீட்டிற்குள் படிக்க முடியாமல், அதனால் வேலையில்லாமல், அதனால் மாப்பிள்ளை இல்லாமல், அதனால் கடன்பெற்று கடன்பெற்று கடன் கட்ட முடியாமல், அரபு நாடுகளுக்கு இந்தப் பெண்பிள்ளைகள் சென்று அங்கு அடியும் உதையும் வாங்கி திரும்ப நாடுவந்து தீண்டத்தகாத முத்திரை குத்தப்பட்டவா்களாக, கடன்தொல்லை தாழாமல் தூக்கில் தொங்கி தொங்கியே உயிரை இழக்கும் எம்மக்களுக்கு உங்கட முட்டாள் பேச்சி, கையாலாகாத தனம் தேவையில்லை. பதின்மூன்றை அல்லது என்னவோ தீர்வாம் அதை சம்பந்தன் ஐயா, சுமந்திரன் போன்றவர்கள் பார்க்கட்டும். அல்லது அந்த வேலையில் ஈடுபட எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கூறுங்கள்!.

ந்த மக்களின் மனநிலையை நீங்கள் சரிவரப் புரிந்துகொள்ளாததினால்தான்,
  • 100 விகிதம் தனித்தமிழ் உள்ள பட்டிருப்புத் தொகுதியில் ஒருத்தர் கூட பா.ம.தேர்தலில் எடுபடவில்லை.
  • வெறும் 50 விகிதத்துக்கும் குறைந்த மக்களின் விருப்பமற்ற வாக்களிப்பு.
  • மாற்றுக்கட்சியினரை விரட்டி அடித்து தனக்கென தனியிடம் வைத்திருந்த தமிழரசிக்கட்சியின் கோட்டையில் விழுந்த ஓட்டை.
  • முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் வாக்களித்துள்ளமை
  • மக்களிடையே அரசியல்வாதிகளுக்கு குறைந்துவரும் செல்வாக்கு.
  • திட்டமிட்டு இங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு அவர்களைப் புறக்கணித்தல்
  • படித்தவர்களுக்கும் இவர்களுக்குமான இடைவெளி அதிகாிப்பு.

போன்றவற்றினை அடுக்கிக்கொண்டே போகலாம். ஐயா வல்லவனுக்கு புல்லுமாயுதம் ஆனால் உங்களுக்கு அரசியல் பவர் எனும் பெரிரிரிரிரிரிய ஆயுதம் கையில் இருந்தும் ஒன்றுமில்லாதவர்களை வாய்ப்பேச்சில் வீரனாய் இருப்பவர்களை நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறோம் சீரியசாய் பார்க்க மடியல்ல.

சரி இந்த மக்களுக்கு எவ்வாறான அரசியல்வாதியாக இருந்தால் இவற்றை சீர்செய்யலாம் என நீங்கள் கேட்கலாம்! அதை நான் சொல்லுவதனை விட உங்களுக்கு முடிந்தால் உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள். இதனை யாரையும் குறைத்து மதிப்பிடனும் என்று எழுதவில்லை என்னால் இவர்களைப் பார்த்து பொறுக்க முடியவில்லை அதனால்த்தான் இதைப் பதிவிடுகிறேன். மற்றவர்களை குறைகூறுவதை விடுத்து உங்களுடைய சக்தியை இருக்கும் காலத்தில் பயன்படுத்தி ஏதாவது பண்ணலாமா என பாருங்கள்.

சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு”
(குறள்.384)

0 comments:

Post a Comment