ADS 468x60

06 September 2017

பொருளாதார விருத்திக்கான திறன்கள் மற்றும் போட்டித்தன்மையை கட்டியெழுப்புதல்.

இன்று ஒரு நண்பருடன் மிக நீண்ட சேரம் உரையாடக் கிடைத்தது. அருமை எமது பிரதேசம் எப்படிடா முன்னேறும் என்று கேட்டார். ஏன் அதற்கு என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் பாருங்க, 'வைத்தியருக்கு படித்தவரை மேசன் வேலை பார்க்க வைக்கலாமா!' புரியலவே என்றேன்.
எமது மாவட்டத்தில் வேலைத்தளங்களில் பல்கலைக்கழகங்களில் உதாரணத்திற்கு நாடகம் பாடத்தில் பட்டத்தை முடித்தவர்கள் மொழி பெயர்பாளர்களாகவும், நுகர்வோர் உற்பத்தி அதிகாரிகளாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இருக்க, விவசாயப்பட்டதாரிகள் ஆரம்ப பாடசாலை ஆசிரியராகவும், வங்கி கணக்காளராகவும், நிருவாக உத்தியோகத்தராகவும் அமர்த்தப்பட்டுள்ள கொடுமை எங்குமே பார்க்க முடியாதுங்க. இங்கு மட்டும்தான்..

உலக வங்கியின் “Building the Skills for Economic Growth and Competitiveness in Sri Lanka” என்கின்ற ஆய்வு சொல்லும் தரவுகளுக்கு ஏற்ப்ப வேலை தருணர்களின் (Employer) எதிர்பார்ப்புக்கமைவாக 56% விகிதத்தினர் உ. தரம் சித்திபெற்ற உயர் திறன் (high-skilled workers ) கொண்ட ஊழியர்களாக இருக்கவேண்டும் எனவும், அதே போன்று 70% விகிதம் தொழில் தருணர்களின் எதிர்பார்ப்பு திறன் குறைந்த ஊழியர்கள் (low-skilled workers) குறைந்தது சா.தரம் சித்திபெற்றிருக்கவேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர் என அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் உன்மை நிலவரம் முற்றிலும் மாறுபட்டது, 20 வயதுக்கு மேலுள்ளவர்களில் வெறும் 17% விகிதத்தினர் உ.தரச் சித்தியும் அதே 17% விகிதத்தினர் மாத்திரம் அந்த வயதில் சா.தரச் சித்தியும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய கருத்து என்னவெனில், சந்தை கேள்வியை நிரம்பல் செய்யும் திறன் உள்ளவர்கள் இந்த அடைவுமட்டத்தினை சந்திக்கமுடியாத பாரிய இடைவெளியையே காட்டி நிற்கிறது.
அருகிலுள்ள அட்டவணையில் எந்தக் கல்வி பயில்வதிலும் பங்குபற்றாதவா்களே அதிகம் கொண்டுள்ளமையினை அவதானிக்கலாம்.

அதுபோல் இன்று வேகமான மென் திறனுக்கான(Soft Skills) கேள்வி அதிலும் விஷேடமாக ஆங்கில மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறைகளில் அதிகரித்துக் காணப்படுகின்றது. தனிப்பட்டவர்களுக்கு இருக்கும் ஆங்கிலத்திறமை அவரை அவரது உள்நாட்டுத் தொழில் துறையில் மேன்நிலைக்கு நல்ல சம்பளத்துடனான மற்றும் வசதிகளுடன் கூடிய வேலையில் இட்டுச் செல்லுவதனைப் பார்க்கின்றோம்.. இவ் ஆய்வின் படி பார்ப்போமானால், 80 விகிதமான வேலை தருனர்கள் உயர் திறன் கொண்ட ஊழியர்கள் நிச்சயம் ஆங்கில அறிவினைக் கொண்டிருக்கவேண்டும் எனவும், 78 விகிதமான தொழில் தருனர்கள் அதே திறன் மட்டமுள்ளவர்கள் கணணி அறிவினைப் பெற்றிருக்கவேண்டும் எனவும், அதுபோல் 38 விகிதமான தொழில் தருனர்கள் சமமான மென் திறனை  குறை திறன் கொண்டவர்கள் பெற்றிருக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தேவையை ப.கழகங்கள், மற்றும் தொ.நு. கல்லூரிகள் கருத்தில் எடுத்து, எதிர்கால இளைஞர்களின் கனவை நனவாக்குமா என்கின்ற கேள்வியை இதே நேர்கோட்டில் சிந்திப்பவர்களிடம் மாத்திரமே வினவமுடியும்.

ஆனால் நடைமுறையில் பாா்த்தோமானால், எப்படிங்க பைனாட்ஸ் காரங்க நாடக அரங்கேற்றம் கூத்து போன்ற கலை வளா்ப்பதை பற்றி சிந்திப்பதை விடுத்து வேறொன்றை பற்றி சிந்திப்பது சாத்தியமாகும்? இப்படி எல்லாரும் எல்லா வகையான வேலைகளையும் செய்யலாம் எனில் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைவருக்கும் ஒரு பட்டத்தினை வழங்கி வையுங்கள்!. ஆங்கில அறிவு சற்றும் இல்லாத பட்டதாரிகளை மொழிபெயர்ப்பாளராக நியமித்துள்ளதனை நினைத்து நினைத்து அழத்தோணுது.

அதே போன்று இவா்களை உருவாக்கும் ஆசான்களை கேட்கவிரும்புகிறேன் குறிப்பாக உலகப் பொதுமொழியான ஆங்கில அறிவு இல்லாதவா்கள் இன்னொரு வளர்ந்த நாட்டின் அனுபவங்களை, புதிய புதிய விடயங்களை அந்த நூல்களை படிக்கும் திறன் அறிவில்லாது, உங்களது மாணவர்களுக்கு எப்படி அவற்றை பரிமாறிக் கொள்ள இயலும்!!? அந்த மாணவர்களை வெறும் குறுகிய வட்டத்துக்குள் வைத்து வளா்த்து அவர்களது வாழ்க்கையை வெளியில் வந்ததும் மந்தைகள் போல் யாருக்கும் வேண்டப்படாத பண்டங்களாக்காதீர்கள்!!

நீங்கள் தேடி அவர்களையும் தேட வையுங்கள். புதிய சந்தைக்கு தயார்படுத்துங்கள், சந்தையில் என்ன கேள்வி இருக்கிறதோ அதை நிரம்பல் செய்யுங்கள். நம்மட பாசையில சொன்னா வெண்டி பயிரிட்டால் எல்லோரும் வெண்டியைப் பயிரிட்டு மலினமாக்கி அந்த பொருளுக்கு மார்கட் இல்லாமல் செய்து விடுகின்றனர், ஆனால் வெங்காயம், மிளகாய் அதிகமாக தேவைப்பட்டாலும் அதை உற்பத்தி செய்து கொடுப்பதில்லை.

இதே மனோ நிலை தான் தங்களை மாற்றிக்கொள்ளாத ஆசிரிய சமுகத்திடம் நிரம்பி வழிகிறது. தயவு செய்து புதிய பாதை, புதிய விடயங்கள், புதிய தேடல்களை மாணவர்களிடம் தூண்டி அவர்களை எதிர்கால சந்தைக்கு உருவாக்குங்கள். மாறாக உங்களது எதிர்காலத்துக்கு அவர்களை பயன்படுத்தாதீர்கள்.

நாடகம் படித்தவனை நாடகம் போடுற வேலைக்கு விடுங்க அவன் கலையை வளா்க்கட்டும்இ விவசாயம் படித்தவனை விவசாயத்தை முன்னேற்ற தயார்படுத்துங்கள். பொருத்தமில்லாத வேலைக்கு அல்லாது லாயக்கில்லாத வேலைக்கு விடுவதனால் ஒட்டு மொத்த உற்பத்தியும் வினைத்திறன் இல்லாது போவதுடன்இ மக்களுக்கான சேவையை சரியான முறையில் இவர்களால் செய்ய முடியாது அவர்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ஒரு கூட்டத்தை வைத்திருந்து சமுகத்துக்கு பயனற்றவா்களை சம்பளம் கொடுத்து வைத்துள்ளீா்கள். இந்த பொருத்தமற்ற செயற்பாட்டை கொள்கை ரீதியில் மாற்ற வேண்டும. பல்கலைக்கழகத்தில் செலவிடும் நான்கு வருடங்களில் அதற்கான சரியான பலனை அறுவடை செய்யும் வெளியீடுகளை இந்தப் போட்டிச் சந்தைக்கு தயார்படுத்துங்கள், இல்லாது விடின் 'கச்சானை நாட்டி கள்ளியை அறுவடை செய்வது போலாகிவிடும்'
சி.தணிகசீலன், S.Thanigaseelan

0 comments:

Post a Comment