ADS 468x60

29 September 2017

எமது சிறுவர்களே எதிர்கால சமுகத்தின் முண்டுகோல்!

  உலகநாடுகளில் வாழுகின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொதுநலத் திட்டங்களுக்கும் செயல்வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக, 1954ம் திகதி ஒக்டோபர் முதலாம் திகதியை உலக சிறுவர் தினமாகப் பிரகடனப்படுத்தியது. 'இன்றய சிறுவர்களே நாளைய தலைவர்கள்', நாளைய எதிர்காலம் நன்றாய் அமைய இன்றய சிறுவர்கள் நல்ல பிரஜையாக உருவாக்கப் படவேண்டியது மிக அவசியமானதொன்றாகும். 

#கிளிநொச்சி #செஞ்சோலை #சிறுவர்களுடன் அளவலாவி அவர்களை மகிழ்வித்த தருணத்தில் பதிவான புகைப்படங்கள் இவை. இச்சிறுவா் இல்லம் பற்றி பலா் கேள்விப்பட்டு இருப்பீா்கள், ஆகவே அதுபற்றி அதிகம் சொல்லவில்லை.


ஏன்கின்ற மகிட வாசகங்களுக்கமைய எமது சிறுவர்கள் மீதான கருசனைகள் அதிகரிக்கும் வழிவகைகளை உறுதியாகச் செய்யவேண்டும் எனபதில் அனைவரும் செயற்ப்படவேண்டும். சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள், பெட்டிக்கடையில் இருந்து பெரிய இடங்கள் வரைக்கும் நடந்தேறிக்கொண்டிர கொண்டிருக்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். குறிப்பாக எமது பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எமது சிறுவர்கள் பல்வேறு துஸ்ப்பிரயோகங்களுக்கு ஆளாகிவருவதுடன், மேலும் பாடசாலை இடைவிலகல், வறுமை, போஷாக்கின்மை, பாலியல் கொடுமை எனப் பட்டியல் நீள்கின்றது.

இன்று வறுமை காரணமாக சிறுவர்களை விட்டுவிட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்லுவதனால், சிறுவர்கள் அந்நியரால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

போதைப் பொருள் பாவனை, விற்பனை அல்லது அதனைப் பாவிப்பதில் இருந்து அவர்ககள்; விலகி இருப்பதற்க்கான உரிமை சிறுவர்களுக்கு உண்டு. அதுபோல் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல், அல்லது தூண்டப்படுதல், மற்றும் சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தல், அல்லது தவறாக சிறார்களைப் பிரயோகப்படித்துதல் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு. இருப்பினும் அவை பாதுகாக்கப்படுகின்றனவா அல்லது நடவடிக்கை எடுக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குரியதே! ஆகவே சிறுவர்கள் குறித்தான விழிப்புணர்வினை அனைத்து மட்டங்களிலும் வேண்டும்.கொள்கையளவில் வெற்றுப் கடதாசியில் உள்ளவற்றை நடைமுறையில் அமுல்படுத்தப்படவேண்டும்.

சிறுவர்களின் மனதை அறிந்துக் கொண்டு அவர்களை அன்பாக கவனித்து சமூகம் மற்றும் குடும்பத்தின் ஊடாக சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பபை வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கான பாதுகாப்பானது பெற்றோர் ஆசிரியர் மிதியவர்கள் மற்றும் சமூகத்திடமிருந்து கிடைக்க வேண்டும் .மேலும் சிறுவர் தினத்தில் மாத்திரமில்லாது வருடத்தின் அனைத்து நாட்களிலும் பிள்ளைகள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவர்கள் எதிர்பார்க்கின்ற வாழ்க்கையை பாதுகாத்து கொடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

0 comments:

Post a Comment