ADS 468x60

18 October 2017

தீபாவளியில் ஒரு பொய்யான கருத்தை நாம் வைத்திருக்கிறோம்.

இந்து மதத்தில் கூறப்படுகின்ற ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களிடையே பண்பாடுகளை நெறிப்படுத்துகின்றன. நாம் வாழ்வாங்கு வாழ்வதனை வெளிப்படுத்துவதோடு ஓர் இனத்தின், மதத்தின், சமுகத்தின் கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கு செம்மைப்படுத்தி அதன் உட்கருத்துக்களும் பாரம்பரியங்களும் வரலாறுகளும் கடத்தப்பட வேண்டிய பொறுப்பு இப்பண்டிகைகளுக்கு உண்டு.


'ஆக இந்தத்தீபாவளி ஒரு தெய்வீகம் நிறைந்த நாள் ஆனால் நாம் பொதுவாக ஒரு பொய்மையான கருத்தை வைத்திருக்கிறோம் அது என்னவென்றால்' என காந்தன் ஐயா சொல்லும் கருத்தை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். அதற்கு இங்குள்ள ஓடியோ வூமை அழுத்தவும்.


அஞ்ஞானம் மறைந்து மெஞ்ஞானம் உருவான இந்நாளை அர்த்தமுள்ள களியாட்டங்களுடன் கொண்டாடி மகிழ்வதை விடுத்து இன்று அர்த்தமற்ற களியாட்டங்களால் பிற சமயத்தவரின் கேளிக்கைகளுக்கு உள்ளாக்குவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. இந்து மக்கள் தமக்கென ஒரு வீடு இல்லாத போதும் கடவுளுக்கு கோயில்களைக் கட்டி சமயத்தினை வளர்த்தனர். ஒரு இனத்தின் வரலாற்றயும், இருப்பினையும் நீண்ட ஆயுளினையும் மீட்டிப்பார்ப்பதற்கு சமயங்கள் அதன் வழிபாடுகள்  மற்றும் பண்டிகைகள் ஆகியன முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. என தொடரும் பேச்சினை செவிமடுக்க இங்குள்ள ஓடியோ வூம் வட்டனை அழுத்தவும்


இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசிசதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலானஆண்டுகளில் தீபாவளி ஐப்பசி அமாவாசை தினத்தன்றே வரும்.கிரகொரியின் நாட்காட்டிபடி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமைதலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.

0 comments:

Post a Comment