ADS 468x60

21 October 2017

முகிலே முகிலே!

முகிலே முகிலே- மழை
மூட்டம் எங்கே
வெயிலே வெயிலே- பெரும்
வாட்டம் இங்கே
கடல் மூழ்கி நீயும்
நீரை அள்ளித் தரலாமே!
மழை கொண்டு வரலாமே!


முகிலே முகிலே- முகிலே முகிலே
வந்தோர் வாழும் நல்ல
பூமி இருக்கு- அது
சாமி நமக்கு
நீ நனைக்க நான் குளிர்வேன்
ஊர் நினைக்க பார் மகிழும்
கருணை மழையே வருவாய் உடனே
குளிராய் துளிராய் மிளிராய் மழையே படவா!

முகிலே முகிலே- மழை
மூட்டம் எங்கே
வெயிலே வெயிலே- பெரும்
வாட்டம் இங்கே
கடல் மூழ்கி நீயும்
நீரை அள்ளித் தரலாமே!
மழை கொண்டு வரலாமே!

0 comments:

Post a Comment