ADS 468x60

30 October 2017

கிராமப்புறங்களில் துளிர்விடும் மட்டக்களப்பு மாண்மீகம்.

தமிழும் சமயமும் இரு கண்கள் என்பதை என்பதை நாவலர் சொன்னதன் பின் நேரில் அதிகம் கண்டுகொள்ளும் பாக்கியத்தினை கடந்துவந்த தடம்பிரண்ட பாதைகளில் அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் வலு இழக்கச் செய்யப்பட்டோம். இருந்தும் ஸ்த்தாபிக்கப்பட்ட பெயரளவான நிறுவனங்களின் இயங்கு நிலை 'முருங்கையில் வேதாளமாய்' பெயரளவில்; மட்டும் இருந்து துரும்புக்கும் உதவாமல் இருப்பது மட்டக்களப்பின் நிலை. இவ்வாறான பாதைகளில் இந்த தேவைகளிளை நிரப்பிக்கொண்டு தமிழ், அதன் செல்வாக்கு, எமது பாரம்பரியம், நடைமுறை, வாழ்வியல் போன்றவற்றை பறைசாற்றும் பல படிநிலைகளை வெற்றிகரமாக கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினர் எடுத்தேத்தி வருகின்றனர்.


அந்த வகையில் யாரும் கவனிப்பாரற்று பின்தங்கி கிடக்கும் மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் இருக்கும் எமது சொந்தங்களின் திறமை, கலாசாரம், தமிழ் வேட்கை என்பவற்றினை எழுச்சி கொள்ள வைக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வொன்றாக, 29 நவம்பர் 2017 அன்று போரதீவுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அறநெறிப்பாடசாலைகளிடையே வெல்லாவெளிப் பிரதேச செயலகத்துடனும், போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் உதவியுடன், நிக் அன்ட் நெல்லி அணுசரணையில், வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட பண்ணிசைப்போட்டி காட்டி நிற்கிறது.

இந்த நிகழ்வுக்கு த.துஷ்யந்தன் தலைமைதாங்க அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கல்வித்துறைசார் அதிகாரிகள் நடுவனம் வகிக்க இந்த நிகழ்வினை செவ்வனே நடாத்தி முடித்தனர். இந்த நிகழ்வில் என்னுடன், கலாசார உத்தியோகத்தர் உதயமலர், ஆசிரியர் வே.குகதாசன், சமுர்த்தி உத்தியோகத்தர் செ.நவரெட்ணம், பதவிநிலை உத்தியோகத்தர் பேரின்பராசா, ஆகியோருடன் நடுவர்களாக துறைதேர்ந்த ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு மூலம் மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் பண்பாடடியல் சார்ந்த கலைவடிவங்களை மக்கள் மத்தியில் அழியவிடமால் கட்டிக்காப்பது, பாடசாலை மாணவர்களிடையே இவற்றை தெழிவுபடுத்தி மறு சந்ததிக்கு அதை எடுத்துச் செல்வது, எமது மண்வாசணையை கட்டியங்கூறுவது போன்ற நல்ல பல நோக்கங்களை அடைந்துகொள்ளும் நோக்குடன் இந்தப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் தெரிவு செய்யப்படும் வெற்றிபெறும் போட்டியாளர்கள் எதிர்வரும் 12ம் திகதி நொவம்பரில் மட்டக்களப்பில் நடக்கவிருக்கும் 'கிழக்கு இந்து எழுச்சி விழா- 2017' இல் வைத்து பாராட்டிக் கௌரவிக்கப்படுவார்கள். 

'இந்த நிகழ்வுக்கு என்னையும் ஒரு அதிதியாக அழைத்தமையினால் மட்டக்களப்பு எங்கு வாழுகின்றதென்பதனை அறியக்கிடைத்த மகிழ்ச்சி என்னை திக்கு முக்காட வைத்துள்ளது. #ஒழுக்கம், #கடமை மற்றும் #ஈகை என்கின்ற வரையறைகளைக் கொண்டு நடாத்தப்பட்ட அறநெறிகள் ஒரு காலத்தில் மனிதர்களைப் பண்படுத்தியது, ஆனால் அவை இன்று குறிப்பாக எமது மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் கவனிப்பாரற்று இல்லாமற் போகும் நிலையில் அதை கைத்தடி கொடுத்து காப்பாற்றிவரும் கைங்கரியம் பாராட்டத்தக்கது. 

அத்துடன் நகர்ப் புறங்களில் காணக்கிடைக்காத எமது பொக்கிஷமான நாகரிக பண்பாட்டு மோகத்தை, மட்டு தமிழ் மண்வாசணையை அன்போடு அரவணைக்கும் சமுகத்தினர் இந்தக் கிராமப்புறங்களில் இருப்பதனால் இந்த மாவட்டத்தின் சொந்தங்கொண்டாடும் உரிமை பெற்ற உரித்துக்காரர்களாகவே இப்பிள்ளைகளைப் பார்க்கிறேன். 

அதுவே இன்றய நவீன வேகமான உலகில் கூட எம்மினத்தின் பாரம்பரிய ஈரம் குறையாமல் காக்கும் இப்போர்ந்த நிகழ்வுகள் தொன்றுதொட்டு எடுத்துவரப்படவேண்டும்.

இவ்வாறு காலையில் ஆரம்பமான போட்டி ஒன்றன் பின் ஒன்றாக நடந்து இனிதே முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவ மணிகள் மற்றும் பெற்றார்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தமையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.





0 comments:

Post a Comment