ADS 468x60

07 October 2017

மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் 
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மூக்குக்கண்ணாடி ஸ்தாபனத்தினால் இலவச கண்சிகிச்சை முகாம் 07.10.2017 அன்று, மண்டூர் கோட்டமுனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பயனாளிகள் சிலருக்கான மூக்குக் கண்ணாடிகள் கி.இ.ச.ச.அ.சபையினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மேற்படி  சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் என்னுடன், மட்டக்களப்பு மூக்குக் கண்ணாடி ஸ்தாபன ஊழியர்கள், மண்டூர் கோட்டமுனை இந்துசமய மறுமலர்ச்சி மன்றத் தலைவர் த.சௌந்தரராஜன், கணேசபுரம் கண்ணகி கலா மன்றத் தலைவர் ஜெயரெட்ணம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

பல்வேறு அனர்த்தங்களின் பின்பு எமது மக்கள் நலிவுற்று அடைய முடியாமல் சிரமப்படும் இரு முக்கிய விடயங்களில் ஒன்று கல்வி மற்றது சுகாதாரம், இவை இரண்டும் எமது நாட்டில் இலவசமாக வழங்கப்படினும் கிராமப்புறங்களில் அதிகஸ்ட்டப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இவற்றைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை நிவர்த்திக்கும் வகையில் அந்த மக்களின் காலடிக்கு சுகாதார சேவையை கொண்டு செல்லும் ஒரு நிகழ்வாக இதனை நாம் மக்களுக்கு வசதி செய்து கொடுத்துள்ளோம். 






0 comments:

Post a Comment