ADS 468x60

09 October 2017

பணத்தினை தகுந்த முறையில் கையாழும் திறனுள்ளவா்களா பெண்கள்!!

பெண்கள் நிதியை மாத்திரமல்ல அவா்களது மதியால் உலகத்தை ஆழுபவா்களையும் அவா்களே ஆழுகின்றனா். அவா்கள் பல விடயங்களுக்கு எமக்கு எல்லாம் எடுத்துக் காட்டாக இருக்கின்றனா். இருப்பினும், மாற்றங்கள் தினம் நடந்துகொண்டிருப்பினும், மனம் கசக்கிற வேளைகளில் ‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்ற வருத்தம் மட்டும் இன்னும் மாறவில்லை. பெரிய பதவி, சுய சம்பாத்தியம் என சமூகத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் பெண்களிடமும், இந்த வார்த்தைகளை அவ்வப்போது கேட்க முடிகிறது. ‘உண்மையில், ஆண்களைவிட பெண்கள் பல விதங்களிலும் பல விஷயங்களிலும் பெஸ்ட்’ என்கிறார் வாழ்வியல் மேம்பாட்டுத் துறை நிபுணர் அசோக் தாமோதரன். 
அந்தவகையில் குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டிலும் வெளியிலும் பணத்தைக் கையாள்வது, நிதி நிர்வாகக் கல்வி போன்றவை பெண் குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. ஆனால், பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை நிதி தொடர்பான கல்வி பள்ளியிலிருந்தே தரப்பட வேண்டும். ஏனெனில் அவா்களிடம் தான் அதிக குடும்பப்பொறுப்பு விட்டுவைக்கப்படுவதனை அவதானிக்கலாம்.

கல்வியறிவு பெற்ற பெண்கள் பணத்தைக் கையாள்வது தொடர்பாக அறிவை அதிகம் பெற்றிருப்பதாக நம்மிடையே ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், கிராமத்தில் வசிக்கும் கல்வியறிவற்ற பெண்களும் எங்களுடைய  பாட்டி போன்றவர்களும் நவீன கல்வி பெற்ற நகரப் பெண்களைவிட அதிக நிதியறிவைப் பெற்றுள்ளனர். கணவரின் குறைவான வருவாயிலிருந்து நிறையக் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அவர்களால் சேமிக்கவும் முடிந்திருக்கிறது. 

இந்த விஷயத்தில் அவர்களை நவீனப் பெண்கள் முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். நிதி தொடர்பான போதிய அறிவின்மையால் பெண்களின் பேரம் பேசும் சக்தியும் குறைகிறது. வாழ்க்கையின் சகல நிலைகளிலும் நிதி மேம்பாடு என்பது உளவியல்ரீதியாகப் பெண்களை நம்பிக்கையுள்ளவர்களாக வைத்திருக்கிறது. நல்லபடியாகப் பணத்தைக் கையாண்டால் நல்லபடியாக வாழ்க்கையையும் கையாள முடியும்.

வேலை பார்க்கும் பெண்கள்கூடத் தங்கள் ஓய்வு கால நிதித் தேவைகள் குறித்துப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாறும் சமூக நிலைகள், பொருளாதாரத்துக்கு ஏற்ப எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான ஆலோசனைகளையும் முன்மாதிாியானவா்கள் வழங்கவேண்டும்.

நடுத்தர குடும்பங்களில் நுகர்வுக் கலாசாரத்தின் தாக்குதலால், பலர் எது ஆடம்பரம், எது கருமித்தனம், எது சிக்கனம் என்று தெரிந்து கொள்ளாமல் வாழ்வில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்; எந்த திட்டமும் ஒழுங்கும் இல்லாமல் வாழ்க்கையைக் கடனிலும் கவலையிலும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ஆடம்பரம், சிக்கனம், கருமித்தனம் ஆகியவற்றை இப்படி கூறுவார்.

1. தேவைக்கு மேல் செலவு செய்வது ஆடம்பரம்.

2.தேவைக்குச் செலவு செய்யாதது கருமித்தனம்.

3. தேவையின் அளவு செலவு செய்வது சிக்கனம்.


ஆடம்பரம், கருமித்தனம், சிக்கனம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்துகொண்டு அதிகமான பெணிகள் செயற்படுவதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் களிநடம் புரிகிறது. அதுக்கு மாறாக ஆடம்பரமாக செலவளித்து குடும்பத்தையே தெருவுக்கு கொண்டுவருபவா்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள் இல்லையா?
ஆகவே சேமிப்பு பழக்கம் அதன் இலகு வழி பற்றி இவா்களுக்கு தெழிவுபடுத்தவேண்டும். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெண்கள் கூட்டம் ஒன்றில் அவர்களைப் பார்த்து கேட்டார்: “நீங்கள் எல்லோரும் பூ வச்சிருக்கீங்க. அதனாலேயே பெண்களுக்குப் பூவையர்னு பேரு. இந்தப் பூக்கள் எல்லாம் இன்னக்கி வச்சா நாளைக்குத் தூக்கி எறிய வேண்டிய பூக்கள். வாடாமல் வளரும் பூவே சிறந்த பூ. அது என்ன பூன்னு சொல்லுங்க?”
பலரும் விழித்தனர். ஒரு பெண்ணுக்குத் திடீர் என்று நினைவு வந்தது. கேட்பவர் நகைச்சுவை அரசர். ஆகையால் தைரியமாகச் “சிரிப்பூ” என்றார்.
கலைவாணர் சிரித்தார். சரியான விடை கூறிவிட்டதாகக் கருதி அந்தப் பெண்ணும் கூடச் சிரித்தார். கூட்டத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள்.

“பார்த்தீங்களா, இதுவும் ஓரளவுக்கு வளரும் பூதான். ஆனா தொடர்ந்து வளராது. இதோ இப்ப பேச ஆரம்பிச்சதும் நின்னிருச்சு. நிற்காம, தடைப்படாம, வளர்ந்துகிட்டே இருக்கிற பூ சேமிப்பூ தான். ஓரளவு நீங்க சேமிப்புச் செய்துவிட்டு அப்படியே விட்டுட்டாக்கூட வட்டியின் மூலம் அது வளர்ந்துகிட்டே இருக்கும். நீங்க தூங்கினாலும் அது தூங்காது. ஆகையால் சேமிப்பூ தான் சிறந்த பூ. பெண்களாகிய நீங்கள் சேமிக்கத் தொடங்கணும்கிறதை வற்புறுத்தத்தான் இந்தக் கூட்டம்” என்றார் கலைவாணர்.
சி.தணிகசீலன்

0 comments:

Post a Comment