ADS 468x60

22 October 2017

மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது

கிட்டத்தட்ட 58000 ஏக்கர் வயல் நிலங்களை தன்னகத்தே கொண்டு அன்னமளிக்கும் எமது தமிழ் மண்ணின் மட்டு நிலம் நெல்லை மட்டும் விளைவிக்கவில்லை கூடவே அங்கு ஈடுபடும் குழந்தைகள் இருந்து முதியோர் வரைக்கும் சந்தோசத்தினையும் விளைவித்து இருந்தது. ஆட்டம் பாட்டு, கொண்டாட்டம் எல்லாம் உழவில் ஆரைம்பித்து நெல்லை அறுவடை செய்து வீடுவரை கொண்டு சேர்க்குமட்டும் மகிழ்சியாகவே இருந்தது. அன்று மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவன் அனுபவித்துவந்த அகத்தூண்டும் இன்பம் அழிந்தே விட்டது.

எது எப்படி இருப்பினும் 'பழயன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு. அதனால், வளர்த்தலும், சில வசதியை இழத்தலும் இயல்பே' என்பதை புரிந்து கொண்டு வாழலாமே! என வயலில் பழய சந்தோசத்தை இழந்து ஆதங்கப்பட்டவரின் மனதை ஆற்றுப்படுத்த எடுத்துச் சொன்னேன் அதுவும் சரி என ஒத்துக்கொண்டு நிலத்தை நின்று கொத்தத் துவங்கினார். 

பண்பாடு கலாசாரம் என்பன எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றது. நமது அம்மம்மாவின் அம்மா யக்கட் போடாமல்தான் சாறி அணிந்திருந்தா. அது அன்றய தமிழ் நாகரிகம். நமக்கு வெள்ளக்காரன் வந்துதான் முழுசா ஆடை அணிய சொல்லிபோனான். ஆனால் அம்மம்மா கொண்டிருந்ததை நாகரிகமாகக் கொள்ளலாமா அதையே எமது பழம்பெரும் நாகரிகம் எனப் பின்பற்றலாமா? இல்லை. இதைத்தான் காலத்துக்கு ஏற்ற ஏற்புடைய மாற்றம் என அழைக்கலாம்.

ஆனால் புரட்சிகள் இருக்கத்தான் வேண்டும் அவற்றுள் நாம் பின்பற்றி வந்த மகிழ்ச்சிகளையும் கலந்து அவற்றை கடைப்பிடிப்போமானால் அதுவே எமது பண்பாட்டின் உறுதி, போற்றுதல்ஈ பின்பற்றுதல் என்கின்ற நிலையில் வைத்திருக்கும்.

0 comments:

Post a Comment