ADS 468x60

13 November 2017

கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்திய தமிழ் இந்து எழிச்சி விழா 2017.

இருமருங்கும் குளங்கள் எங்கு சென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்து போகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வு, நல்ல மனிதர்கள் வாழ்ந்து நாட்டுக்கு தொண்டு செய்த வெல்லாவெளியில் இனிதே எழுச்சியுடன் நடந்தேறியது.

கிழக்கில் தொன்றுதொட்டு இந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உலகறியச் செய்வதனையும், எமது கலாசார விழுமியங்கள், கலை, பாரம்பரியங்கள் என்பனவற்றினை உலகறியச் செய்வதனையும் நோக்கமாகக் கொண்டு, உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின், போராதீவுப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில், நிக் அன்ட் நெல்லி ஸ்த்தாபனத்தாரின் அனுசரணையில் கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினால் 'கிழக்கின் இந்து எழுச்சி விழா 2017' கார்த்திகை 12ம் திகதி வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலயங்களின் பிரதம குருமார்கள், கல்விப்புல புத்திஜீவிகள், அரச திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமய மற்றும் சமுகத் தலைவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து இந்நிகழ்வை எழுச்சியுற வைத்தமை கிழக்கில் ஒரு வரலாற்று பதிவாகப் பார்க்கப்படுகின்றது.

 'இந்து, இந்துவேதம், இந்து இலக்கியம் மற்றும் பண்பாடு, இந்து வாழ்க்கை முறை, தமிழ் மொழி,  என்பவையெல்லாம்..... மாற்று மதத்தினராலும், மாற்று இனத்தினராலும், வேற்று நாட்டவரினாலும் பல்வேறு வகையாகத் தாக்கி! தகர்த்துத் தகர்த்து, கணிசமான அளவு தவிடுபொடியாக்கிவிட்டு, தரையோடு தரமட்டமாக்கிக் கொண்டு இன்னும் சிறிது காலத்தில் இருந்த இடமே இல்லாமல் போய்விடும் என்ற நிலை வளர்ந்து, வளர்த்து, வளக்கப்பட்டு, வளப்பட்டு, வலிமைப்பட்டு அடக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலே இந்த நிகழ்வு பற்றிய எண்ணம் எம்மிடையே ஊற்றுப்பெற்றது.' என இச்சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 'எமது சபை பல சமுக சமயத்திட்டங்களை எமது பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களது ஆதரவுடன் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். சுகாதாரத்திட்டம், போசாக்கு உணவு வழங்கும் திட்டம், ஆண்மீக தரிசனங்கள், வலதுகுறைந்தவர்களுக்கான உதவிகள், வாழ்வாதார உதவிகள், மரநடுகை, அறநெறி மேம்பாட்டுத்திட்டம், கல்வி, டெங்கு ஒழிப்பு என எமது சேவைகள் எண்ணற்றவகையில் நீண்டுகொண்டு போவதனை நான் இங்கு குறிப்பிடவேண்டும். இதற்கு அனுசரணை ஆதரவு ஒத்துளைப்பு வழங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் நாங்கள் இங்கு நினைவு கூர்ந்து பாராட்டுகின்றோம். என்றார்

எமது பிரதேசத்தின் பெரும்பாலான சமுதாய வாதிகளும், அரசியல்வாதிகளும் பல்வேறு வகையான காரண காரியங்களால் இந்து தர்மத்தினை, நம்பிக்கையினை மதிக்கமுடியாதவர்களாக, போற்றி பேணிப்பாதுகாக்க முடியாதவர்களாக மாறியுள்ள காரணத்தினால் இந்துக்களின் உரிமைகளும், பெருமைகளும், ஒப்புயர்வற்ற தனித்தன்மைகளும், ஏனைய இனத்தினரால் சிதைக்கப்பட்டு சிதையவும், சிறுமைப்படுத்தப்பட்டு சிறுமையுறவும், கொடுமைப்படுத்தப்பட்டு நலிந்து மெலியவும் நேரிட்டுள்ளது!.

இவற்றில் இருந்து எழுச்சி பெறவே இந்த நிகழ்வு காலத்தின், இனத்தின் தேவை கருதி ஒழுங்கு செய்யப்பட்டது என்ற செய்தி இங்கு அனைவரினாலும் அறைகூவப்பட்டது. இவற்றால் இனிமேல் நாத்திகரும், பகுத்தறி வாதிகளும், சீர்திருத்தவாதிகளும், கண்மூடித்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும், தமிழ் இந்து மதத்தினையும், இந்துக்களின் வாழ்வியலையும், இழித்தும் பழித்தும், நகைத்தும், பகைத்தும், கிண்டல் செய்தும் கேலி பேசியும், பேசித்திரிவது, தடுக்கப்பட்டு விட்டது என நம்பிக்கை கொள்ளலாம்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் துறைத்தலைவருமான சோ.ஜெகநாதன், கோட்டைக்கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற பு.பாலச்சந்திரன், அத்துடன் முன்னால் மாகாணசபை உறுப்பினர், நா.கிருஷ்ணபிள்ளை ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு நிகழ்வுகளாக இச்சபையினரால் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக நடாத்தப்பட்ட இலவச கல்விக் கருத்தரங்கில் சித்திபெற்ற மாணவர்கள், அவர்களுக்கான அதிபர் ஆசிரியவர்கள், வளவாளர்கள், பெற்றோர்கள் பாராட்டி வைக்கப்பட்டனர். அதுபோல் 15 அறநெறிப்பாடசாலைகளை தேர்ந்து அவர்களுக்கான பண்ணிசைப் போட்டி வைக்கப்பட்டு அதில் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பாராட்டி பரிசு வளங்கும் நிகழவும் நடைபெற்றது.

அத்துடன் பு.பாலச்சந்திரன் உதவிக்கல்விப் பணிப்பாளர் அவரது சேவையை மெச்சி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமையும் அங்கு முக்கியமாக இடம்பெற்றதுடன், இங்கு இந்துக் கலையூடாக எமது பாரம்பரியம், நம்பிக்கை, வாழ்க்கைமுறை, வழிபாட்டுமுறை என்பன வற்றினை பரதம், காவடி, செம்புநடனம், கரகம், கூத்து என கிராமத்து கலைகளுக்கு மூச்சுக்கொடுத்த எழுச்சி விழாவாகவும், இந்த மாணவர்கள், இளைஞர்களின் மண்டிக்கிடந்த திறமைகளை மன்றத்தில் ஏற்றிய உற்சாக எழுச்சிவிழாவாகவும் இதனைப் பார்கலாம். இந்த நிகழ்வுகள் பலவற்றை போராதீவுப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கு மேலாக அதிதிகள் உரையில் எழுச்சி தொனிக்கும் வகையில் 'நாமார்க்கும் குடியல்லோம் நரகத்தில் இடர்படோம் நமனை அஞ்சோம்' என அப்பர் கூற்றை அடியொற்றி நாங்கள் நரகத்தில் இடர்பட்டது போதும், அதில் இருந்து எழுச்சிப் பெறும் சரியான தருணம் இது என்று தொடங்கிய எனது உரை மேலும், அவர்கள்  மேலும், 'இங்கு இந்து மதம்(நம்பிக்கை) தான் உலகம் பூராகவும் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுக்கு முன்னமே இருந்திருக்கிறது, என்பதற்கான சான்றாதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எமது மதம் சனாதன தர்மம் என அழைக்கப்படுகின்றது. ஏனெனில் அது ஆதியும், அந்தமும் இல்லாத ஒன்று. அதற்கு பெயர்கூட இருக்கவில்லை ஆரம்பத்தில். ஆனால் பின்நாளில் திரிபு பெற்று பல மதங்கள் தோற்றம் பெற்றதன் பின்னர்தான், அவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்ட இந்துக்கள் என அழைக்கலாயினர்.' எனத்தொடா்ந்தேன்.

அத்துடன் நான் கூறினேன் "இந்த மதம் தான் உலகம் பூராகவும் பரவி இருந்திருக்கிறது. அதெப்படி! சாத்தியமாகலாம், அதற்குதான் நாகர் சுவாமிகள் கல்வெட்டு சரித்திர சான்றுகள் எல்லாம் சொல்லி இருக்கிறார். எகிப்தில் ஒரு ஒப்பந்தத்தில் "மித்திர வர்ண சாட்சியாக" என அந்த மன்னன் கி.மு 1300க்கு முன்  கையொப்பம் இட்டுள்ள ஆதாரம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மெச்சிக்கோவில் இன்றும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. அதுபோல் அவுஸ்த்திரேலிய பழங்குடியினர் இன்றும் சிவா டான்ஸ் என ஒரு நிகழ்வை நிகழ்த்தி வருகின்றனர். இப்படி தொலைத் தொடர்பு, போக்குவரத்து வளராத காலத்திலேயே இந்து மதம் அங்கெல்லாம் இருந்திருக்கிறது, எனில் உலகில் ஒரு மதம்தான் இருந்திருக்கிறது என அறிஞர்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளவேண்டியதே. ஆகவே நாங்கள் இந்த வம்சத்தின் சொந்தக்காரர்கள். அதை நினைத்து பெருமை கொள்ளவேண்டும். எமது இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும், ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையாக இருக்கவேண்டும், சுயநலமற்ற பொதுத்தொண்டில் இளைஞர்கள் அதிக அதிகம் ஈடுபட்டு, எமது பண்பாட்டை இயன்றவரை கட்டிக்காக்கவேண்டும்" என.

'எமது இந்துக் கலாசாரம் ஆலயங்களில், பாடசாலைகளில் மற்றும் குடும்பங்களில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். அத்துடன் ஏனைய மதத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை செம்மைப்படுத்த கட்டுப்படுத்த பொதுச்சபைகள் இருப்பதுபோல் எமது மதத்தில் இல்லை, அவ்வாறான ஒரு உறுதிவாய்ந்த அமைப்பினை கட்டியெழுப்பவேண்டும்.' என சிரேஸ்ட்ட விரிவுரையாளர் சோ.ஜெகநாதன் குறிப்பிட்டார்.

'நாம் பண்பாட்டின் தாயும் தகப்பனுமாக இருப்பது எமது மொழி, நம்பிக்கை என்பன பலரை கவர்ந்து அவர்கள் பின்பற்றுகின்ற வேளை நாம்  அவற்றை மறந்து வருகின்றோம்;. ஓற்றுமை குலைந்துள்ளது. பாரம்பரியம் குலைந்து வருகின்றது. ஆனால் அதை தூக்கி நிறுத்தும் இந்த சபையினரின் செயற்பாடு பெரிய ஆறுதலை தந்துள்ளது. இவர்கள் சமயத்தோடு கல்வியை, சமயத்தோடு வாழ்வாதாரத்தை, கலையை, ஒற்றுமையை பல கோணத்தில் கட்டியெழுப்பி வருவது பெருமைப்படுத்தவேண்டியது.' ஏன பு.பாலச்சந்திரன் ஓய்வுபெற்ற கோட்டைக்கல்வி அதிகாரி குறிப்பிட்டார்.

ஆக குறைகளைச் சுட்டிக்காட்டி நிறைவடையச் செய்யும் செயற்பாட்டாளர்களை, துறைசார் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் எதிர்கால வளர்ச்சிக்காக அறைகூவிய எழுச்சி, உலகத்தவரே போற்றும் எமது இந்து தமிழ் பண்பாட்டை பட்டி தொட்டி எங்கும் தூசி தட்டிய எழுச்சி, அருகிப் போகும் அருமருந்த பண்பாட்டை மீட்டெடுப்பதற்கான எழுச்சியாக இந்த ஒட்டு மொத்த நிகழ்வு அமைந்திருந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது.

'எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்மின்' சுவாமி விவேகானந்தர்.































0 comments:

Post a Comment