ADS 468x60

04 November 2017

ஒரு பச்சை சமிக்சையாக பார்க்கப்படும் பெரும்பான்மை இன அமைச்சர்களின் உரை.

'ஓற்றை நாடு என்ற கொள்கைக்குள் பௌத்த மதத்தினை முன்னுரிமை அளித்துக்கொண்டு விட்டுக்கொடுப்போடு ஒரு தீர்வுத்திட்டத்துக்கு ஒத்துவரும் ஒரு தமிழ் மக்களின் தலைவரான திரு சம்பந்தன் அவர்களது காலத்துக்குள் நாம் ஒரு தீர்வினை வளங்காவிடின், ஒரு போதும் அது சாத்தியமாகாது' என அமைச்சர் டிலான் மன்றில் நின்று உரத்துரைத்தது சிங்கள மக்களிடையே சம்பந்தரை இன்று ஒரு கீரோவாக தூக்கி நிறுத்தியுள்ளது எனச்சொல்லாம்.


ஆகவே இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அதை நழுவவிடாமல் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். என அமைச்சார் டிலான் குறிப்பிட்டு இருப்பது ஒரு பச்சை சமிக்சையாக பார்க்கப்படும் அதே நேரத்தில் இனவாதமாகப் பேசினால்தான் தமழ் பிரதேசங்களில் கீரோவாகலாம் என்பதை கையில் எடுத்து இனவிரிசல்களை உண்டாக்குபவர்களும் இல்லாமல் இல்லை.

ஆனால் சம்பந்தன் மற்றும் சுமேந்திரன் போன்றவர்கள் இனவாதம் பற்றி எங்கும் பேசாமல் இனப்பிரச்சினைக்கான பேச்சினையே முன்னெடுத்து வருகின்றனர் என புகழாரம் சூட்டப்பட்டு வருவது பெரும்பான்மை மக்களிடையே ஆதரவினைக் கூட் இருக்கிறது என ஊடகங்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது அதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்கின்ற ஒரு ஐனாதிபதி இருக்கவில்லை மாறாக இப்போது எல்லா மக்களையும் அரவணைத்துக்கொண்டு போகும் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும என நாட்டமுள்ள ஒரு ஐனாதிபதி நாட்டில் உள்ளார் அவர் மூலம் நாம் இந்த பாரிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஒரு யதார்த்தமான கருத்தை முன்வைத்துள்ளமை. ஒரு வகை சிறிய ஆறுதலை தருகின்றது. இதுபோன்று மங்கள சமரவீர போன்றவர்களும் நல்ல பல விடயங்களை நேற்றய நாளில் சுட்டிடிக்காட்டி இருந்தார்.

0 comments:

Post a Comment