ADS 468x60

26 December 2017

மறக்கவில்லை உன் வஞ்சக்குணத்தை!!

Image may contain: ocean, water, sky, outdoor and nature
கடல் நான் அறிந்த மட்டில்
நீதான் உலகின் முக்கால்
அறியாதவற்கு நீயே சிக்கல்
உன்னில் பயனித்தே நாடுகளைக் கண்டான்
உன்னை நம்பியே உணவுகளை உண்டான்
பவளமும், முத்தும் பரிசளித்தாய்
பசுபிக்கடலில் தீவுகள் தந்தாய்

நீ வண்ணமயமான கரைகளில்
மயங்க வைத்தாய்!
நாகரிகங்கள் நகர துறைகள் தந்தாய்!
இருந்தாலும்- நீ
தாகத்துக்கு உதவாத உப்பு!
நம்பியோரை அழித்தது தப்பு தப்பு.....
நீ ஒரு பலசாலி- ஒத்துக்கிறேன்,
எரிமலை வெடித்தும்,
விண் கற்களை எறிந்தும்
கண்டத்தட்டுகளை நகர்த்தியும்
பேரலைகள் கொண்டு
ஊரை அழிக்கும் பலசாலி...!!!
நீ சூரியக்குடும்பத்தில்
புவியைப் பற்றிய பாழி- இருந்தும்
மனிதனைத் தவிர
மற்றவைகள் வாழும் வெறும் ஆழி..
இந்த நாள்- நீ
எமதுமனிதங்களை- பலியெடுத்தநாள்!
நிலா வெளிச்சத்தையும்,
குருத்து மணலையும்,
கொஞ்சி விளையாட அலைகளையும்
கொடுத்தது உன்மைதான்...
அதற்கு முன்னறிவிப்பு
இல்லாத கடன்காரன்போல்
வட்டியும் முதலுமாய்
நாம் வளார்த்த குஞ்சுகளை
காவுகொண்ட இருட்டுநாள்!!!
மறக்கவில்லை உன் வஞ்சக்குணத்தை
உறக்கமில்லை இந் நெஞ்சக்கனத்தால்-நீ
பரசுராமன் உறையும் பள்ளி
பாமரர்கு வைக்கலாமா கொள்ளி!!
ஆண்டுகள் நகர்ந்து சென்றாலும்
மாண்டுபோன எமது சொந்தங்கள்
மீண்டு வருவதில்லை--
எச்சரிக்கிறேன் கடலே!
இத்தோடு நிறுத்திக்கொள்
இல்லாவிட்டால்
நம்பியோர் சாபம் உன்னை
நாதியில்லாதாக்கிவிடும்!
உருக்கமாக வேண்டுகிறேன்
இந்நாளில் காவுகொண்ட
உயிர்கள் அனைத்தும் இறைவனுள்
அடைக்கலமாகட்டும்!!!
சாந்தி சாந்தி சாந்தி!!!!!!

0 comments:

Post a Comment