ADS 468x60

02 January 2018

மீண்டும் எதற்கு வந்தீங்க! எம்மை ஆண்டு என்னத்த தந்தீங்க!

பாரு மகனே பாரு- இங்கு
பாழாப் போகுது ஊரு
வேறு ஒருவர் ஆழக் கொடுத்து
வேதனை தந்தது யாரு!
வேதனை தந்தது யாரு!

பேசிப் பேசி காலங்கழித்து
வீதியில் எறிந்த யாரு- எமை
பேதையாக்கி பாதையெல்லாம்
போதை வளர்த்த யாரு
மீண்டும் எதற்கு வந்தீங்க- எம்மை
ஆண்டு என்னத்த தந்தீங்க
கட்சி பார்த்து களைத்த எமக்கு என்றும்
காரியம் செய்திடும் ஆள்வேண்டும்


நம்பி நம்பியே பின் நடந்து
வெம்ப வைத்தது யாரு- இங்கு
நல்லவர் போல வேடம் போட்டு
நடிக்கும் கூட்டம் யாரு
துன்பம் மட்டும் எங்களுக்கா- நல்ல
இன்பம் எல்லாம் உங்களுக்கா
கடமை கடமை கடமை என்று
காரியம் செய்திடும் ஆள்வேண்டும்

நேர்மை வீரம் நெஞ்சில் ஈரம்
நிறையக் கொண்டவர் யாரு- நமை
ஆழும் ஆற்றல் தலைமைப் பண்புடன்
ஊருக் உழைத்த யாரு
உதவி செய்திட முன்னோடும்- பெரும்
பதவி என்றால்
பின்னோடும்
இந்தப் பண்பு அனைத்தும் கொண்டு நமக்கு
காரியம் செய்திடும் ஆள் வேண்டும்

0 comments:

Post a Comment