ADS 468x60

04 January 2018

மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா மனசு மகிழ்ந்து போங்க!!


வாவி வளைந்து ஓட
வரும் மீன்கள் விளையாடி
கூவி குரவைபோட்டு
கூடி நல்ல பாட்டிசைக்கும்
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

கௌக்கு வெளிக்குதப்பா
கீழ் வானம் செவக்குதப்பா
உழவர்கள் ஏருபூட்ட
ஊரெல்லாம் பால் பொங்கும்
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

தையும் பொறந்ததப்பா
தரித்திரமும் பறந்ததப்பா
மெய்யும் உருக கூத்து
மேல கிழம்பி ஆடும்-நம்ம
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

படுவான் கரையினிலே
பச்சை வயலு ஆடுதப்பா
கொடுவா மடுவோரம்
கூவும் குயிலு பாடுதப்பா
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

மாட புடிச்சி நாங்க
மேட எல்லாம் ஒழவி- வயல்
காடு கல கலக்க
வீடு மனை நெறயும் இந்த
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

தென்னையில கள்ளிருக்கு
தேனிருக்கு பாலிருக்கு
என்னயில்ல எங்களுக்கு
ஏரிறங்கும் நிலமிருக்கு
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

பாயோட ஒட்ட வைக்க
பரிமாறும் பரம்பரங்க
தாயோட சேய்போல
வந்தவங்கள வாழவைக்கும்
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

0 comments:

Post a Comment