ADS 468x60

16 April 2018

பூரித்துப் போனோம்! அப்படி என்னதான் நடந்தது அங்கு?

 2500 ஆண்டுகால மட்டக்களப்பின் பாரம்பரியம் மனிதர்களாலோ கட்டிடங்களாலோ சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததினாலோ மட்டும் சிறப்புற்றுவிடவில்லை. அது நம் கலாச்சாரம், பழக்கவழக்கம், வீர விளையாட்டு, மைந்தர்களின் பாசம், மண்மீது நாம் கொண்ட நேசத்தின் விளைவாய் பிறப்புற்றது. அதை இங்கு தேத்தாத்தீவு மண்ணின் மைந்தர்கள் நிருபித்துக்காட்டியுள்ளனர்.


குளத்தினிடை மலர்கள் தொட்டு குளிரவைக்கும் காத்து, குழந்தைகளும் இழந்தாரிகளும் கூடி நிற்கிறார்கள் பாத்து, விதவிதமாய் புத்தாடை கொண்டு விடுப்பெடுக்கும் குமரிகள் இதற்குள் அங்கும் இங்கும் நின்று அழைக்கப்படும் அதிதிகள் என ஒரு வித பரபரப்பான மகிழ்ச்சியான சூழலை உணர்ந்தவனாக நின்றுகொண்டிருந்தேன். புத்தம் புதிய நாளில் ஒரு புதுவித எதிர்பார்ப்புடன், புதுவித ஆரம்பத்துக்காக அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தோம் ஆனால் அதையும் தாண்டி இப்படி மாறுதலாக இருக்கும் என எண்ணவில்லை ஆமாம்.

மாலை போட்டார்கள், பள்ளிப் பிள்ளளைகள் வரவேற்பிசை முழங்க மேடைக்குள் நுழைந்தோம், அழைத்தவர்களை வரவேற்க்க வரவேற்ப்பு நடனம் கண்ணை குளிர்ச்சிப்படுத்த தொடர்ந்து விளக்கினை ஏற்றிவைக்க வேதபாராயணம் ஒலித்தது பின் கொடியினை ஏற்றக்கூடி நின்றாங்கள் பெடிகள் பாருங்க அப்படியே ஆடிப்போயிற்றன், இரட்டிப்பு மகிழ்ச்சி ஏனென்டா கேட்கிறீங்க!

அத்தனை தம்பிமாரும் தமழினத்தின் பாரம்பரியம், கலாசாரம், மரபுவழி சொல்லும் மல்லுவேட்டி கட்டி எமை சூழ்ந்துநின்றார்கள் எனக்குள் ஆனந்தக் கண்ணீர் சொட்டி அகமகிழ்ந்தேன், ஆர்வம் கூடி நிமிந்து நின்றேன் என் தேனகத்தின் தம்பிமாரை நான் இப்படி எதிர்பார்க்கவில்லை இந்த மட்டு மண்ணுக்கே எடுத்துக்காட்டாக இவர்கள் இருந்து சாதனை படைத்துவிட்டார்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும் தம்பிமாரே!

காலையில் மரதன் ஓட்டத்துடன் களைகட்டியது விளையாட்டு. பின்னேரம், நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அழககாக தொடங்கி வைக்க இன்னும் பல சுவாரசியம் காத்து நின்றது. வெற்றி விநாயகர் விளையாட்டுகழகத்தினாின் புதுவருட விளையாட்டு விழா (15.04.2018) ஞாயிற்றுக்கிழமை கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகழகத்தின் தலைவர் ப.சந்திரு தலைமையில் இடம் பெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ம.உதயகுமார், முன்னால் நாடளுமன்ற உறுப்பினர் கோ.கருனாகரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இன்னும் பலர் சிறப்பு, விஷேட அதிதிகளாக கலந்து மகிழ்ச்சியில் திழைத்திருந்தனர்.

பாருங்க, அங்க இருந்த எமக்கு போத்தலில் அடைத்த குளிர்பானம் தரவில்லை மரத்தில் காய்த்த இழநீர் பருகத்தந்தனர், வாழையிளையில் வெண்பொங்கலும் பழமும், வழங்கினர் அத்தனையும் பழைய மரபுகளை சுமந்து வந்தன. வுpளையாட்டுக்களில் நெல்லுக்குத்துதல், நொங்கு வண்டி ஓட்டுதல், கிடுகு பின்னுதல் என அத்தனையும் எமது கலாசாரத்தினை எடுத்தேத்தும் நிகழ்வுகளாக அமைந்தன. 

இத்தனைக்கும் பின்னணியில் இந்த நிகழ்வுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து இத்தனை சிறப்புற உதவிய எமது சொந்தங்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன், எமது ஊரில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இன்னும் இதைவிட சிறப்பாக இருக்கும், அவற்றுக்கான நேரத்தினையும் சந்தர்ப்பத்தினையும் எமது இளைஞர்கள் கட்டாயம் ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் என்னையும் தொடர்ந்து ஒரு அதிதியாக அழைப்பதனையிட்டு மகிழ்சியினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.





0 comments:

Post a Comment