ADS 468x60

17 June 2018

'சூழலை பேணி இடர்தணிப்போம்' பிரதேச செயலமர்வு- வெல்லாவெளி.

செந்நெல்லும்  பாலும் தேனும், தீந்தமிழ் சுவையும் கலையும், வாவிமகள் போல் வற்றாது ஓடும் மீன்பாடும் தேநாடு, வளநாடு என்று போற்றுகின்றோம் எம் தென்தமிழீழ வளநாட்டை, மகிழ்ச்சிதான். இருந்தும் வயலை நம்பியே வாழ்க்கை என்ற மக்களின் வயிற்றிலடிக்கிறது இயற்கை, வெள்ளமாக, வறட்சியாக இன்னும் பலப்பல வடிவங்களில். காரணம், இயற்கைக்கு மனிதர்கள் செய்யும் இடர்தான் வேறில்லை. இந்த இடர் வரக்காரணங்கள் என்ன? இதனால் என்ன தீய விளைவுகளை எல்லாம் நாம் எதிர்கொள்ளுகின்றோம்? அவற்றை எவ்வாறு வெற்றிகொள்ளலாம்? ஏன்பன பற்றி எல்லாம் வெல்லாவெளி கலாசார மண்டபத்தினில் சங்கமித்த விவசாயிகள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், அனர்த்த முன்னாயத்த குழுக்களின் உறுப்பினர்கள், அபிவிருத்தி மற்றும் கிரா உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்பூட்டும் செயலமர்வினை 13.06.2018 அன்று பிரதேச செயலகததுடன் இணைந்து சக்தி உதவும் கரங்கள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதேச செயலாளர் செயளாளர் செல்வி இ.ராகுலநாயகி, சமூகவியல் மற்றும் சூழலியல் தொடர்பான ஆய்வாளரும், வளவாரரும் ஆகிய திரு.எஸ்.ரமேஸ்வரன்,  ஆகியோருடன் நானும், மற்றும்  சக்தி உதவும் கரங்கள் அமைப்பின் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தோம்..

'காலநிலை மாறிப்போச்சு என்கிறானுங்கோ அதுக்கு காரணமே நம்மதானே அறியவில்லையா? மார்கழியில் மழையடிக்கும் அந்தக்காலங்கோ இப்போது மாறிப்போச்சு காலநிலை இந்தக்காலங்கோ. எனத் துவங்கிய நான் , மேலும் கூறுகையில்,  முறைகேடான அபிவிருத்தி, சட்டரீதியற்ற வளச்சுரண்டல், அரசியல் அராஜகம் மற்றும் சூழல் பற்றிய தெழிவின்மை ஆகியன சோலையான எம்பிரதேசங்களை பாலையாக மாற்றிவிடும். 
சூழல் கெடுதலுக்கும் அது சிறப்பதற்கும் மனிதனே காரணம். 

எல்லா வகையான அனர்த்தங்களிலும் பட்டுத்தேறியவர்கள் நாம், அதனால் அனர்த்தங்களின் மூலம் உண்டாகும் இடர்கள் பற்றி நன்கறிவோம். ஆகவே எதிர்காலத்தில் அனர்த்தங்களை தணிப்பதற்கு இயற்கையை மதித்து எமது சூழலை பாதுகாக்கவேண்டும். இயற்கை என்பது ஐம்பூதங்களினால் ஆனது ஆனால் அது எமது முறைகேடான செயற்பாட்டினால் நிலம், நீர், காற்று, ஆகாயம் என்பன மாசுபட்டு மனிதனையே ஆரோக்கியம் இல்லாத ஒருவனாக மாற்றிவிடுகின்றது' என்றேன்.

மேலும் கூறுகையில் 'சுமார் 23 மில்லியன் சனத் தொகையுடனான தீவு நாடான இலங்கையில் சீரற்ற நிலப் பயன்பாட்டு முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உட்பட பல்வேறு இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்துக்கு உட்படும் சாத்தியப்பாடு உள்ளதுடன் அது பல்வேறு சிரமங்களுடன் அடைந்த அபிவிருத்தியை அபாயத்துக்கு உட்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாகவும் அமையலாம்.' என்றேன்..

'இன்று மண் அகழ்தல், மரங்களை இல்லாதொழித்தல் காரணமாக வளமான மண்ணை நாங்கள் இழந்துகொண்டிருக்கின்றோம் அதுபோல் முறையற்ற திட்டமிடல்கள் மூலமாக அனர்த்த இடரின் அதிகரித்த தன்மையினை பரவலாக்கிக்கொண்டிருக்கின்றோம், அவற்றில் இருந்துவிடுபட நாங்கள் விழிப்படையவேண்டும் அத்துடன் இன்று நிலக்கீழ் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டு போகின்றது காரணம் பயிர்ச்செய்கை என்ற பேரில் அந்த நீர் உறிஞ்சப்பட்டுக்கொண்டிருப்பதுடன் அந்த இடைவெளியினை நிரப்ப கடல் நீர் உட்புகுந்து குடிநீரையும் உப்பாக்கும் சாத்தியத்தினை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் எனவும்,  காப்பு முறையியல் மற்றும் செயற் திட்டங்கள் ஊடாக இயற்கை அனர்த்தங்கள் மூலம் ஏற்படும் அபாயங்களின் பாதிப்பைக் குறைப்பதை அனர்த்த இடர் குறைப்பு  இலக்காகக் கொண்டுள்ளது. அரச கொள்கைகளாக, நாம் எவ்வாறு எமது உணவுப் பயிர்களை பயிரிடுகின்றோம்? எங்கு எவ்வாறு நாம் எமது வீடுகள், நகரங்கள். மாநகரங்களை நிர்மாணிக்கின்றோம?. என்கின்ற ஒவ்வொன்றுக்கும் எடுக்கும் பிழையான தீர்மானம் எம்மை அனர்த்தத்துக்கு வழிவகுக்கின்றது. சார்பான தீர்மானங்கள் பாதுகாக்கின்றது. எனவே அனர்த்த இடர் குறைப்பு  என்பது முழுமையாகவே தெரிவுகள் பற்றிய தாகும்.' என எஸ்.இரமேஸவரன் எடுத்துக்கூறினார்.

பிரதேச செயலர் குறிப்பிடுகையில் 'இதுபோன்ற விழிப்பூட்டும் நிகழ்வுகள் பிரதேச, கிராம மற்றும் பாடசாலை மட்டங்களில் கொண்டு செல்லப்படவேண்டும் எனவும் இதற்கு அனைவரும் உதவ முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.'





0 comments:

Post a Comment