ADS 468x60

17 April 2019

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய ராகசாகரம் இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோடசவத்தினை முன்னிட்டு என்னால்; கொம்புச்சந்தி பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டாவது இ
றுவட்டான 'கொம்புச்சந்தி ராகசாகரம்' தழிழ் சிங்களப்புத்தாண்டு தினத்தில் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவர் த.விமலானந்தராசாவின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.



இந்த இறுவட்டில் கொம்புச்சந்திப்பிள்ளையாரின் புகழ்பாடும் ஐந்து பாடல்கள் அடங்கியிருக்கின்றது. இப்பாடல்கள் அனைத்தும் செல்வன் சி.ஜீவனாத் அவர்கள் ஒலிப்பதிவு உதவியில்; செல்வன் லி.விதுஷன், செல்வன் த.லுகர்சன் மற்றும் செல்வி கி.பிரணவி ஆகியோரினால் பாடப்பட்டுள்ளன.

இந்த வெளியீட்டு நிகழ்வில் ஆலயத்தின் பிரதம குரு ஆசியுடன் ஆரம்பமானது. இதன்போது ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.க.பாலச்சந்திரன் மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஷ்ணப்பிள்ளை உடபட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்மீகம் சார்ந்த பணியும் எமது இனமீட்சிக்கான ஆதாரமாகக் கொள்ளவேண்டு;ம ஏனெனில் அவையும் முக்கியமான அடையாளங்களில் ஒன்று.


0 comments:

Post a Comment