ADS 468x60

24 August 2011

கிறிஸ் மனிதன் ஒரு கேள்விக்குறியா?????

இன்று கிறிஸ் மனிதன் தொல்லை கடந்து வந்த பயங்கரவாத சூழலைவிடவும் மிகமோசமானதாக இருப்பதனை நடந்தேறுகின்ற நிகழ்வுகளை வைத்து சொல்லக்கூடியதாய் இருக்கின்றது. நெடுநாளாய் எழுதுவதற்கு உந்தியபோதும் கிடைப்பற்கரிய நேரம் போதாமையால் எழுதமுடியாமல் போய் விட்டது. இருப்பினும் இந்த திட்டமிடப்பட்ட நடவடிக்கை எவ்வாறான பாதிப்புகளை, அடக்குமுறைகளை கொண்டுவந்துள்ளது என்பதனை பார்க்கவேண்டியுள்ளது.


தமது பூர்வீக உத்தம இருப்புகளை, சந்தோசங்களை, சுயகௌரவத்தினை, பொருளாதாரம் கல்வி, கலாசாரம் என்பனவற்றையெல்லாம் இரண்டு தசாப்தகால யுத்தம், இயற்கை அனர்த்தம் என்பனவற்றினால் தொலைத்து, யுத்தம் முடிவுற்று சற்று பெருமூச்சு விட்ட சமுகத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்சுவதுபோல் கிறிஸ் மனிதன் பெண்களின் மார்பில் கத்திப பாய்சி கதறவைக்கும் அராஜகம் புரியாத புதிராகவே இன்றும் இருக்கின்றது.

வேதனை வேதனை, இது தவிர இலங்கை திருநாட்டில் பிறந்தோம் என்று பெற்றுக்கொண்ட சந்தோசம்தான் என்ன? யார் இந்த கிறிஸ் பூதம்? ஏதற்கு எம்மக்களை இவர்களை குறிவைக்கின்றனர்? என்ன விளைவை எதிர்பார்க்கின்றனர் இந்த சூழ்சியாளர்கள்? என்பதெல்லாம் அவர்களைப்போல் மர்மமாகத்தான் இருக்கிறது.

தமிழர்களின் செல்வம், வீரம் பறிபோன நிலையில் எஞ்சியிருந்தது கல்வி மட்டும் தான். அதையும் முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது இந்த பூதம். மாணவர்கள் கல்வியில், உயர்தரப் பரீட்சை, 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன முக்கிய மைற்க் கற்க்களாகும். அவை ஓகஸ்த்து மாதத்திலேயே நடப்பது வழமை. ஆனால் மாணவர்கள் இந்தப் பீதியினால் இறுதிக்கட்ட வினா விடை வகுப்புகளுக்கு கூட போகவில்லை, இரவு நேரங்களில் குழியலறை, கிணத்தடி, மரங்கள் என்று இந்த மர்ம மனிதன் தாக்குதல் இருந்ததனால் மாணவர்கள் சிறு நீர்களிக்க கூட முடியாத பாவம் செய்த சமுகமாக மாறிவிட்ட நிலையில் தழிழ் மாணவர்களின் முழுக்கல்வியும் அந்தோ என்று ஆகிப்போச்சி.

அதே போன்று தமிழர்கள் வாழ் இடங்கள் அநேக மாக விவசாய மீன்பிடி வழங்களைக் கொண்டு வாழ்கை நடத்தும் பாங்கு இருந்து வருகின்றது. இந்த கிறிஸ்ப் பூதத்தின் நடவடிக்கையால் வேறு இடங்களுக்கு தொழில் பார்க்க இயலாத நிலை தோன்றியுள்ளதுடன், அவர்கள் தங்கள் குடும்பங்களை தனியே விட்டு செல்ல முடியாத சூழல் தோன்றியுள்ளது. இதனால் அன்றாடம் கூலித் தொழில்புரியும் நிலை அந்தோ பரிதாபம். மிக மோசமான வருமான வீழ்சியால் குடும்பத்தில் பஞ்சம் அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பாக நலிவுற்றவர்களின் நிலை நோயால் பீடிக்கப்பட்டு கவலைக்கிடமாகியுள்ளது.

மருத்துவ மனையில் மனநோய்க்குட்பட்டு அநேகம் பேர் சிகிச்சை பெற வருகின்றனர் என சிலர் கூறுகின்றனா.; இவர்கள் அச்சம் அதிகரித்தமையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா, விரக்தியடைந்துள்ளனர். இருப்பினும் ஆஸ்பத்திரிகளில் பொதுவாக நோயளர்களின் வருகை குறைவடைந்துள்ளது. இதனால் குறிப்பாக மகப்பேற்று சிகிச்சைக்கு வருவோர் குறைவடைந்துள்ளது, இது அவர்களின் பிறக்க இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கேள்விக்குறியாக்கும் என்கின்ற கருத்து நிலவுகிறது.

தவிரவும் இந்த மர்ம மனிதன் பீதியில் சமீப காலமாக சிவில் பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இருந்து வந்த சிறிது அன்யோன்யமும் விரிசலடைந்த நிலையில் டயர் எரிப்புகள், கைதுகள், கடையடைப்புகள் மற்றும் கல்லெறிகள் என பல கலவர சூழ்நிலை மக்களின் இயல்பு நிலையை பாதிப்படைய வைத்துள்ளது.

குறிப்பாக இவ்வாறான பீதியில் யாரை நம்புவது, யாரிடம் தஞ்சம் புகுவது என்கின்ற விடைகாண முடியாத கேள்விகளுடன் மக்கள் பீதியில் இருக்கும் இந்த வேளை மக்களிடையே இவை தொடர்பான சந்தேகங்களுக்கு துன்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் மிக்க அமைப்புகள் அரசியல், சமய, இனபேதங்களுக்கு அப்பால் மக்களை சந்தித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி அவர்களை காப்பாற்றும் வழி செய்யமாட்டார்களா? என்கின்ற அவாவுக்கு அப்பால் எதுவித பலமும் இல்லாமல்போய்விட்டனர் எம் சமுகம். என்னை பொறுத்த மட்டில் ஆண்டவனை தவிர வேற யாரையும் நம்ப முடியவில்லை.

2 comments:

Unknown said...

கவலையான விஷயம்!!

S.T.Seelan (S.Thanigaseelan) said...

அதை விட என்ன பண்ணலாம் பா??

Post a Comment