ADS 468x60

30 September 2018

எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் முயற்சியாண்மை விஸ்த்தரிப்பின் தேவையும்.


Image result for entrepreneurship sri lankaஇன்றய இலங்கையில், நிதி அமைச்சின் கருத்துக்களின் படி கடந்த காலங்களில் ஏறத்தாள 22,000 வணிக கடன்களை வழங்கியுள்ளதாகவும் இது ஒரு முக்கியமான படியாக இருப்பினும், இளைஞர்களை தொழிற்கயிற்சி சார்ந்து ஈர்ப்பதும் அவர்களிற்கு மாற்று வாழ்வாதாரங்களை கண்டு பிடிக்க உதவுவதும் மிகவும் சவாலானதாக உள்ளது. ஆனால், இது மிகவும் செலவீனமானதும் அதே வேளையில் அவர்கள் வருமானமீட்ட மிக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் கணிக்கப்படுகிறது.

24 September 2018

மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது

Related imageஜனநாயகத்துக்கான பலம் எப்பொழுதும் மக்களினாலே உருவாக்கப்படுகின்றது. இதுதான் யார் தமக்கான தலைவன் தீர்மானிப்பதுடன், நாம் என்ன வகையான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் அதுபோல் எந்தெந்த கொள்கைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பனவற்றினை நிர்ணயனம் செய்கின்றன. இவையெல்லாம் இருந்தும் ஒரு ஜனநாயக நாட்டில் அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு பலமான பக்கச்சார்பற்ற நிறுவனம், யாவரையும் உள்வாங்கும் ஒரு நடைமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லையெனில அவை நல்லாட்சியல்ல அது மக்களின் ஒருங்கிணைந்த பலமும் அல்ல. மாறாக  மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது.

23 September 2018

வயது முதிர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளின் நிழலில் வாழவே விரும்புகின்றனர்.

உன்னைப்போல் பிறரை நேசி என்பதற்கிணங்க, பிறரால் நேசிக்கப்படாமல் விடப்பட்டவர்களை நோக்கி ஒரு அன்புப் பயணத்தினை எனது மனைவியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மேற்கொண்ட போது!. முதியோர் வாரம் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்வினை அவர்களுடன் இணைந்து மகிழ்ந்துகொண்ட தருணம் மறக்கமுடியாதது.

22 September 2018

இலங்கை தற்கொலை செய்து இறப்பவர்களின் நாடுகளின் பட்டியலில் முன்னணியில்


உலகின் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் முக்கால்வாசி தற்கொலைகள் அல்லது அதற்கான முயற்சிகள் நடுத்தர அல்லது ஆகக்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே இடம் பெற்று வருகின்றது. அவை கிட்டத்தட்ட ஆண்டொன்றுக்கு 800,000 என உலக சுகாதார நிறுவகம் தெரிவித்துள்ளது. இது மொத்தமாக வேறு காரணங்களால் இறக்கின்றவர்களில் இருந்து 1.4 விகிதமாகும். இலங்கையின் சமுக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மூலமான செய்திகளினடிப்படையில் இந்த தற்கொலை அல்லது அதற்கான முயற்சி அதிகரித்துக்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

13 September 2018

அடிப்படை மக்களை ஆக்கிரமிக்கும் எரிபொருள் விலைச் சூத்திரம்!


Image result for fuel price cartoon in sri lankaமக்களே நீங்கள் ஆத்திரமடைவது புரிகின்றது. மாசத்துக்கு மாசம் அதிகரிக்கும் சூத்திரத்தினால் ஆத்திரமடைந்து காத்திரமான முடிவெடுக்க முடியாமல் உழசை;சலுக்கு பாத்திரமாகும் மக்களின் நிலை அந்தோ பரிதாபம்.
நமது அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு பொருளாக இந்த எரிபொருட்கள் இரண்டறக்கலந்துள்ளன அதனால் இவை இல்லாத வாழ்க்கையினை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. இது எமது நாளாந்த  வாழ்வில் உபயோகிக்கும் அனைத்து விடயங்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்பது வெளிப்படை. நாளாந்தம் கடினமாக வேலை செய்து அன்றாட உணவுக்காக உழகை;கும் மக்களின் நிலையினை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், நிச்சயம் ஏற்கனவே நலிவுற்ற மக்களை இன்னும் ஒரு படி மேலாக சென்று வலுவிழக்கச் செய்யும் என்பதில் இல்லை ஐயம்.

11 September 2018

மாற நினைத்தால் மாறலாம்!


Image result for jealous at home india
பாருடா இவன, இப்ப நல்ல வேலை ஒன்று கிடைச்சிருக்காமே!, ம்ம்ம்ம் இவர் கிடந்த கிடை எங்களுக்கு தெரியாதா! அந்தக் காலத்தில கழிசன் போடயும் காசில்லாம கெடுடந்ததுகளுக்கெல்லாம் டை கோட்ஸ் வேற, அப்பாக்கா கறல்புடிச்ச சயிக்கிளில திரிஞ்சதுகளுக்கு காறு ஒரு கொற, கிடுகு மட்டைக்க கிடந்தவங்களுக்கு ஓட்டு வீடு ஒரு கேடு, கொலர்சிப் பாசிபண்ண வைச்சி என்னத்த புடுங்கப்போறாவோ ஏதோ அவ ஏதோ படிச்சிக் கிழிச்ச மாதிரி.

10 September 2018

வறுமையில் அம்மணமாகும் மட்டக்களப்பு மக்கள்

வறுமையில் அம்மணமாகும் எமது சமுகத்தினைப் பார்த்தால், எமது மக்களுக்கான உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்களா? இல்லை அரசாங்கத்தின் சிஸ்ட்டத்தில் வேலை இல்லையா? ஒன்றுமே புரியவில்லை! எங்கோ தப்பு நடக்குது பாருங்க. நான் ஒரு தடைவ #வாகரையில் உள்ள #மதுரங்குளம்பக்கம் சென்றேன் அங்கு பல குடும்பங்களை சென்று நேரில் பார்க்கக்கிடைத்தது. இங்குள்ள குடும்பங்கள் வறுமையின் இலக்கணத்துக்கு சற்றும் பிசகாத உதாரணமாகத் திகழ்கின்றனர்.

05 September 2018

தண்ணீரை வணிகப் பொருளாக மாற்றி எம்மை வரலாற்றின் கொடிய பற்றாக்குறைக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் தனியார் முதலைகள்!

எமது பகுதியில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால்  ' நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவரின் வாக்கு அடிக்கடி சொல்லப்படுகிறது. இங்கு சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அந்த நன்நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது. இவ்வாறு ஒரு முக்கிய வளம் எமக்கு கிடைத்த ஒரு சொத்து அந்த வளத்தின்மேல் பிறருக்கு உள்ள அக்கறை, அதன்மூலம் எதிர்கொள்ள இருக்கும் பாதக விளைவுகள் மற்றும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகள் என்பனபற்றி இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

04 September 2018

கேட்டால் தருவோம் பிடுங்காதே!

Image result for rights for water
அருமை உயிர்களே வந்து சேருங்களேன் வெற்றி நமதே சொந்த தேசம் நமதே! உணர்வுகள் ஒன்றி அனைவரும் ஒன்றாய் உரிமைகள் வெல்ல ஓர் வழி நின்றால் வெற்றி நமதே! குரோதங்கள் மறந்து மனங்களைத் திறந்து வளங்களைக் காக்க கைகளைத் கோர்த்தால் வெற்றி நமதே!

02 September 2018

மேசன் வேலைக்கு படித்துவிட்டு வைத்திய தொழில் புரியலாமா!

Image result for agriculture officersஇன்று ஒரு நண்பருடன் மிக நீண்ட சேரம் உரையாடக் கிடைத்தது. அருமை எமது பிரதேசம் எப்படிடா முன்னேறும் என்று கேட்டார். ஏன் அதற்கு என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் பாருங்க, "வைத்தியருக்கு படித்தவரை மேசன் வேலை பார்க்க வைக்கிறார்கள்!" புரியலவே என்றேன்.
எமது மாவட்டத்தில் வேலைத்தளங்களில் பல்கலைக்கழகங்களில் உதாரணத்திற்கு நாடகம் பாடத்தில் பட்டத்தை முடித்தவர்கள் மொழி பெயர்பாளர்களாகவும், நுகர்வோர் உற்பத்தி அதிகாரிகளாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இருக்க, விவசாயப்பட்டதாரிகள் ஆரம்ம பாடசாலை ஆசிரியராகவும், வங்கி கணக்காளராகவும், நிருவாக உத்தியோகத்தராகவும் அமர்த்தப்பட்டுள்ள கொடுமை எங்குமே பார்க்க முடியாதுங்க.

01 September 2018

மனித மாற்றத்தை ஏற்படுத்துங்கள் மதமாற்றத்தினை தடுக்கலாம்.


Image result for religious convert
தலைப்புக்கு வருவதற்கு முன் ஒரு சிறிய விளக்கத்தினை தரலாம் என நினைக்கின்றேன். இந்துக்கள் எல்லோரும் கையில் ஆயுதம் வைத்திருப்பதில்லை. ஆனால் இந்து மத கடவுள்களின் கையில் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. மற்ற மதக் கடவுள்களின் ஆயுதங்கள் இல்லை. ஆனால் ஆயுதத்தினை மற்ற மதத்தினர் கையில் வைத்துள்ளனர். மனிதர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று இந்துக்கள் நினைப்பதாலேயே இந்து மதக் கடவுளின் கைகளில் ஆயுதம் உள்ளது. கடவுளை நாம்தான் காப்பாற்ற வேண்டும என்று நினைப்பதாலேலே மற்ற மதத்தவர் கையில் ஆயுதங்கள் உள்ளது. என கண்ணதாசன் கூறியிருப்பது இன்றய நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வைத்துள்ளது.