ADS 468x60

Showing posts with label ஒரு முறைப்பாடு.... Show all posts
Showing posts with label ஒரு முறைப்பாடு.... Show all posts

01 June 2026

பொருளாதாரக் கடலில் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எமது தேசத்தின் பொருளாதாரக் கப்பல்

"ஒரு கப்பல் துறைமுகத்தில் இருப்பது பாதுகாப்பானது என்றாலும், கப்பல்கள் வெறும் துறைமுகத்திலேயே தங்குவதற்காக உருவாக்கப்படவில்லை" என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் பொன்மொழியுடன் இன்றைய எமது உரையாடலைத் தொடங்க விழைகின்றேன். ஆம் உறவுகளே, கப்பல்கள் கடலில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டவை. அவ்வாறு அவை அலைகடலில் பயணம் செய்யும்போது, எதிர்பாராத பேரழிவுகளையும், கொடிய புயல்களையும் சந்திப்பது தவிர்க்க முடியாதது. உலகிலேயே மிக உன்னதமான அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் நிறைந்ததாக மார்தட்டிக்கொண்ட 'டைட்டானிக்' என்ற பிரம்மாண்டமான கப்பல் கூட, கடலின் நடுவே ஒரு பனிப்பாறையில் மோதி அடியாழத்திற்குள் மூழ்கிப் போனதை வரலாறு நமக்குக் கற்றுத்தந்துள்ளது. ஒரு maபெரும் கப்பலையே பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியாத தொழில்நுட்பம் எமக்குக் காட்டும் பாடம் என்னவென்றால், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும்போது, வெறும் வெற்றுப் புள்ளிவிபரங்களை மட்டும் நம்பியிருக்கக் கூடாது; மாறாக, நெருக்கடி முகாமைத்துவம் (Crisis Management) குறித்த மிகவும் ஆழமான புரிதலும், நுணுக்கமான கள ஆய்வும் எமக்கு இருக்க வேண்டும் என்பதுதான்!

08 May 2026

கால்நடை வளர்ப்பும் நிலப்பிரச்சினையும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் நெருக்கடியான யதார்த்தம்

2009 ஆம் ஆண்டு முடிவுற்ற உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார மீள்கட்டமைப்பு பற்றிய உரையாடல்கள் அரங்கேறிய அதேவேளை, வடக்கு-கிழக்கு மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்கள் புதிய முறையிலான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் நிகழ்ந்து வரும் மேய்ச்சல் நில மோதல்கள், வெறும் பொருளாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், நிலம், அடையாளம் மற்றும் அரசியல் அதிகாரம் தொடர்பான ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த ஆய்வுக் கட்டுரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடைப் பொருளாதாரத்தின் வரலாற்று முக்கியத்துவம், தற்போதைய நெருக்கடியின் பன்முக பரிமாணங்கள், அதன் சமூக-பொருளாதார விளைவுகள் மற்றும் நிலையான தீர்வுக்கான சாத்தியமான வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்கிறது.

25 August 2025

அபாகஸ் போட்டி: கனவும், கலக்கமும்

கல்விக்குத் தமிழ்ச் சமூகம் அளிக்கும் முக்கியத்துவம் அபாரமானது, ஆனால் அதனைச் சுரண்டும் நடைமுறைகள் கவலைக்குரியவை.

அபாகஸ் பயிற்சி குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதவுகிறது, ஆனால் அதன் போட்டிகள் ஒழுங்கமைப்பில் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

பிராந்திய மட்டத்தில் போட்டிகளை நடத்தி, தேசிய மட்டத்தில் விருது வழங்குவது கல்வி சமத்துவத்தை மேம்படுத்த ஒரு சிறந்த நடைமுறைத் தீர்வாகும்.

கல்விச் சந்தைப்படுத்தல், நடுத்தர மற்றும் வசதி குறைந்த குடும்பங்களின் கனவுகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.

கடந்த 23ஆம் திகதி, எனது மகளை அபாகஸ் போட்டி ஒன்றிற்காக, இலங்கையின் மிக உயர்ந்த இடமான பிரதமர் இல்லம், அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் வந்திருந்தனர். தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பல ஆயிரக்கணக்கான பணத்தையும், பல நாட்களையும் செலவு செய்து இப்போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் பார்த்து நான் வியந்தேன். 

27 April 2025

வட்டுக்கோட்டை தொல்புரம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் சமூகத்தின் பொறுப்பும்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை மூன்று ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குறித்த சிறுமி நீண்ட காலமாக இவ்வாறு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என ஒரு செய்தியை தினகரனில் பார்த்து அதிர்ந்துபோனேன்.

24 April 2025

தலைக்கவசத்துடன் நடமாடினால் எந்தக்கதையும் இல்லை அதிரடி சோதனை


இலங்கை பொலிஸ் தலைமையகம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டளை, பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்திருக்கும் சந்தேக நபர்களை சோதனை செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸாரின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அண்மையில்நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் மற்றும் கொலைகள் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பெரும்பாலும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது.

மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு- கண்டி சம்பவமும் இலங்கை சமூகத்தில் பெருகும் குடும்ப வன்முறையும்

கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி, இலங்கை சமூகத்தில் பெருகிவரும் குடும்ப வன்முறையின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், தனிப்பட்ட வன்முறைச் செயலாக மட்டுமின்றி, சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்பின்மை தொடர்பான கவலைகளை எழுப்புகிறது. இந்த செய்தி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் குடும்ப வன்முறையின் பரவல், காரணங்கள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து விமர்சன ரீதியாக ஆராய்வது அவசியமாகிறது.

05 April 2025

என்னதான் நடக்கிறது? பெற்றோா்களும் ஆசிாியா்களும் பாவம்!

 பெற்றோர்கள், சமுதாயத் தலைவர்கள், பாடசாலைகள், மசூதி, கோயில், தேவாலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், மற்றும் அனைத்து சமூக அமைப்புகளுக்கும் இந்த அறிவுரை உரியது.

இன்றைய சமூகத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சிக்கல் — ஒழுக்கக்கேடு. இது பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் அபாயகரமான நோயாக மாறியுள்ளது. சமூகத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய நபர்கள் — பெற்றோர், ஆசிரியர்கள், சமூகவியல் அமைப்புகள் — இப்போது கையைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒழுக்கமும் இல்லாத வளர்ப்பு

தொடரும் சம்பவங்களை நாம் நாள்தோறும் கேட்கிறோம். அண்மையில் ஹோமாகம பகுதியில் 15 வயது மாணவி, சக மாணவர்களும் காதலனாலும் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவம், சமூகத்தின் கண்ணை விழிக்க வைக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக உள்ளது.

16 March 2025

மதுபோதையால் வெல்லாவெளியில் உயிரிழப்பு: இலங்கையில் தொடரும் விபத்துக்கள், தகராறுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியில் ஒருவர் மதுவழித்தகராறில் உயிரிழந்துள்ளார் என்பதும், அவருடன் மது அருந்திய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் சமூகத்தில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வா? அல்லது இலங்கையில் ஒரு நிலையான சமூக பிரச்சினையாக மது தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கிறதா?

15 March 2025

பெண்கள் பாதுகாப்பா? தொடரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சமூகத்தின் பேரச்சம்

இன்று இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் மீதான வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருகோணமலை மூதூரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், சமீபத்திய அதிர்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாகும்.

நமது நாட்டில் பெண்களுக்கு சமத்துவ உரிமை வழங்கப்படும், மாதம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் என்று நாம் பேசுகிறோம். ஆனால், அதே சமயம் பெண்கள் வீட்டிலேயே கொல்லப்படுகின்றனர், குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகின்றனர், சமூகத்தில் அச்சம் நிலவுகிறது. இது எங்கு முடியும்? இது எங்கே செல்லும்?

இந்த கொடூரமான சம்பவங்கள் எதற்காக நடக்கின்றன? யாருக்கு பொறுப்பு? இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எங்கே?

13 March 2025

தேற்றாத்தீவுக் கிராமம் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது?

  • இதுவரை ஒரு எம்பியை உருவாக்கமுடியாத கிராமம்
  • இதுவரை ஒரு பிரதேசசபைத் தவிசாளரைக்கூட உருவாக்கமுடியாத கிராமம்
  • இதுவரை ஒரு மாகாணசபை உறுப்பினரைக்கூட உருவாக்கமுடியாத கிராமம்
  • இதுவரை ஒரு முக்கிய அங்கத்துவத்தினைக்கூட எந்த பிரதான அரசியல் கட்சியும் ஈந்தளிக்க நினைத்துப்பார்க முடியாத கிராமம். 

நான் சில்லறைக் கட்சிகளையோ மக்கள் விரும்பாத கட்சிகளையோ இங்கு சொல்லவில்லை. ஆனால் எல்லா அரசியல்வாதிக்கும் கோயில் மேடையையும் கூட்டத்தை ஒழுங்கமைத்து நடாத்தும் கூலிப்படை இருக்கும் மட்டும் இதனை எமது மக்கள் சிந்திக்க இடம் தரமாட்டார்கள் இல்லையா?

அனுராதபுரம் பெண் வைத்தியர் பாலியல் வண்புணர்வு! எதைச் சொல்லுகின்றது?


அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பணியினை முடித்துவிட்டு, மருத்துவ விடுதிக்குள் நுழையும் போது தாக்கி, வன்மமாகக் கட்டாயப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் மனிதாபிமானத்தையும், சட்டத்தின் பலவீனத்தையும் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.

தனது கடமையை முடித்து விடுதிக்கு திரும்பிய பெண் மருத்துவர் சுமார் இரவு 7 மணியளவில் தனது உத்தியோகப்பூர்வ விடுதிக்கு நுழைந்தபோது, முன்பே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் முன்பு ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, கத்தி வைத்துத் தாக்கி அவரை கட்டாயமாக உள்ளே இழுத்து, கைகளையும் கண்களையும் கட்டி பாலியல் வன்முறையை மேற்கொண்டு, அவரது கைப்பேசியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.

09 March 2025

இலங்கையில் மதுபான பாவனையின் தாக்கம்- பெண்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்


(மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துரை)

முன்னுரை

இலங்கையில் மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொருளாதாரம், சமூக அமைதி, மக்களின் உடல் மற்றும் மனநிலையை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக, பெண்கள் நேரடியாக மதுசார பாவனையாளர்களாக இல்லாவிட்டாலும், மற்றவர்களின் பாவனையால் அவர்களும் பலவிதமான இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சமீபத்தில் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்ட 1000 பெண்களில் 54% பெண்கள் மதுசார பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 69% பெண்கள் பொது இடங்களில் அசௌகரியங்களை சந்திக்கின்றனர், எனவே இது ஒரு தீவிர பிரச்சினையாக மாறியுள்ளது.

06 February 2025

இலங்கை அரசின் பொது சேவைகள் மற்றும் நிர்வாக செயல்முறை - சரிபார்ப்புக்கு நேரம்


இலங்கையில் அரசின் பொதுசேவைகள் மற்றும் நிர்வாகம் பலமுறை அதன் ஊசலான நடவடிக்கைகள் மற்றும் அலட்சியத்திற்காக பரிச்சயமாக உள்ளது. பணிகளை நிறைவேற்றுவதற்கான கடுமையான ஒத்திகைகள், சிரமங்களைத் தாண்டி ஒவ்வொரு கட்டத்திலும் நேரத்தை வீணாக  செலவழிப்பது, அதிகாரிகளின் கோப முகங்களையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்வது இது பொதுவாக உணர்த்தப்படும் அரசு தரப்பு அவதானமான யதார்த்தமாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுச் சேவைகள் மற்றும் நிர்வாக செயல்முறை எவ்வாறாயினும், தனியார் துறையைப் போல எளிதாகவும் திறமையான முறையிலான செயல்பாட்டைப் பெற முடியவில்லை என்பது இலங்கைக்கு மட்டுமின்றி உலகில் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்ட விஷயம் அல்ல. எனினும், இலங்கை அரசு சேவையில் தொழில்நுட்பம், சேவை தரம் மற்றும் திறன் பற்றிய குறைகள் மற்ற நாடுகளைவிட சிறந்தவையாக தென்படுகின்றன.

24 January 2025

வடக்கின் காற்றாலைகள்: சவால்களும் சாத்தியங்களும்

 ஆதிகாலம் தொடக்கம் இன்றுவரை சக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மனித இனம் பல்வேறு வழிகளை கையாண்டு வந்துள்ளது. இந்த தேடல், இன்றைய சூழலில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது, காரணமாக சூழல் மாசுபடுதலை தவிர்த்து பசுமை சக்தி உற்பத்தி செய்வதற்கான அவசியம் அதிகம் உணரப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக காற்றாலை மூலம் மின்சாரம் பிறப்பிக்கும் திட்டங்கள் உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், காற்றாலை திட்டங்கள் நடப்பில் உள்ளன. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சமூக-சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் அவசியமாகின்றன.

13 June 2024

இல்லத்தின் பாதுகாப்பு: விழிப்புணர்வும் கட்டுப்பாடும் அவசியம்

அண்மைய  நிகழ்வுகளில், 17 வயது பாடசாலை மாணவி ஒருவர், மின்சார தைக்கும் இயந்திரத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்குவதற்கு முயற்சித்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயர சம்பவம், வீட்டுப் பாதுகாப்பு மற்றும் பொதுவான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த மாணவி, மின்சார தைக்கும் இயந்திரத்தின் மோட்டார் கம்பிகளை சுவரில் உள்ள சுவிட்ச் சொக்கெட்டில் இணைக்க முயற்சித்து தோல்வியடைந்தார். பின்னர், மின்சாரக் கம்பிகளை வெட்டி, கம்பிகளை நேரடியாக சொக்கெட்டில் செருகுவதன் மூலம் இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

07 June 2024

குழந்தைகளை இப்படியா துன்புறுத்துவது?

எல்லாருக்கும் வணக்கம்!

இன்று உங்களோட பேசுற விஷயம், நம்ம மனசாட்சியையே உறுத்தும் ஒன்னு. அது, குழந்தை துன்புறுத்தல். இலங்கையில் இப்போ இந்த பிரச்சனை ரொம்ப கவலைக்கிடமா மாறிஇருக்கு.

கடந்த வருஷம் ஜனவரி முதல் அக்டோபர் வரை 8,000 குழந்தை துன்புறுத்தல் கேஸ்கள் ரிப்போர்ட் பண்ணப்பட்டிருக்கு. இது 2022ல 10,500 ஆகவும், 2021ல 11,200 ஆகவும் உயர்ந்திருக்கு. இது வெறும் கணக்குகள் இல்லை. இது, அப்பாவி குழந்தைகளோட கஷ்டமும், வலியும் துன்புறுத்தலும். இதில, பெரும்பாலான கேஸ்கள் கொழும்பு மாவட்டத்துல இருந்து ரிப்போர்ட் பண்ணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

05 April 2024

களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுமா?

 அறிமுகம்

முன்னேற்றப் பாதையிலே மனசு வச்சி முழுமூச்சா அதற்காக தினம் உழசை;சி பாடுபடுற விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற நிலையில் கிழக்கு விவசாயிகள் நாதியற்றுக்கிடப்பதனை ஜீரணிக்க முடியவில்லை. யாரங்கே யாரங்கே இதற்கொல்லாம் வரமாட்டார்கள். நாம் இன்று பிரயோசனமற்றுக்கிடக்கும் முற்றுப்பெற்ற களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் பற்றிப்பார்க்கப்போகின்றோம்.

தலைவர்களாக..... கணேசமூர்தி வந்தாரு! காதர்மஸ்தான் வந்தாரு!, அமல்சேர் வந்தாரு! அமீர்அலி வந்தாரு! அதிகாரிகளாக... கருணாகரன் வந்தாரு! கலாவதி வந்தாரு! ஒண்ணும் திறக்க முடியல

சாராய வார் திறக்கிறண்டா வேணாம்னடாலும் ஓடி ஓடி திறக்கறாணுகள் ஆனா வாழ்வழிக்கும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்த பரிபூரணமா முடிச்சிம் இத்தன அக்கப்போர் எதற்கு? ஏதோ உள்ளே இருக்குப்போல வாங்க பார்க்கலாம்!

28 March 2024

புதுக்குடியிருப்பு- களுதாவளை வரையான கிராமத்தில் ATM-ஏரிஎம்மின் அவசியம்!

நாம் இன்று தொழில்நுட்ப வளர்சிபெற்ற ஒரு உலகில் வாழுகின்றோம். இந்த வகையில் பல துறை அபார வளர்சிபெற்று தத்தமது சேவைகளை பட்டிதொட்டி எங்கு விஸ்தரித்து வருகின்றது. இருப்பினும், கிராமப்புறங்களில் வங்கிச் சேவைகளை அணுகுவது எப்போதும் ஒரு சவாலாக இருந்து வருகிறது. பணம் எடுப்பது, வைப்பு செய்வது, கணக்கு நிலுவைத் தொகை சரிபார்க்கவது போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக கூட கிலோமீட்டர் கணக்கில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரம் வீணாவதுடன், போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கிறது.

பிரச்சனை

அதிக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் அரச தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் அதிகம் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள், முயற்சியாளர்கள் எனப் பலர் வாழும் எமது பிரதேசத்தில் தமது பணப்புழக்கத்தினை செய்ய நீண்ட தூரம் பிரயாணம் செய்து களுவாஞ்சிகுடிக்கே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு துவங்கி களுதாவளை வரையிலான பகுதியில் சுமார் 10,000 வங்கி வாடிக்கையாளர்கள்  ஏறத்தாள வசிக்கின்றனர். ஆனாலும் இங்கு எந்த ஒரு ஏடிஎம் வசதியும் இல்லை. இதனால், அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பல கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவாஞ்சிகுடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

10 March 2024

எமது பட்டிருப்புத் தொகுதி தரிசு வயல்கள்: புத்துயிர் பெறுவதற்கான அழைப்பு

ஏறக்குறய 600 ஏக்கர் வயல் நிலம் செய்கை பண்ணப்படாமல் இருக்கின்றது,

ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ நெல் விளையக்கூடிய நிலம். ஆக மொத்தத்தில் 900,000 கிலோ நெல் விளைச்சலை ஒவ்வொரு வருடமும் இழக்கின்றோம். 

அதுபோல இந்த வயல் நிலங்களில் ஒரு ஏக்கரினை செய்கை பண்ண 10 வேலையாட்கள் தேவை அப்படியானால் இக்கிராமங்களில் உள்ள 6000 வேலையாட்கள் ஒரு சீசனுக்கு உழைப்பினை இழக்கின்றனர்  இல்லையா.

எமது பிரதேசத்துக்கு வளமான விவசாய வரலாறு இருந்தபோதிலும், உணவுப் பாதுகாப்பிற்கு இலங்கை அதிகரித்து வரும் சவாலை எதிர்கொள்கிறது. இவ்வாக்கம் தரிசு நிலங்கள், கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத வளமான வயல்களின் அதிகரிப்பு பற்றி ஆராய்கிறது. குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையான பிரதேசத்தை ஒரு ஆய்வாகக் கவனத்தில் கொண்டு, புறக்கணிக்கப்பட்ட இந்தக் காணிகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் உணவு உற்பத்தி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பரந்த சாத்தியக்கூறுகளை கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. 

இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான பயிர்செய்யும் நிலங்கள் பாழடைந்து தருசு நிலமாக மாறிவருவதனைக் காணலாம். குறிப்பாக குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையுள்ள பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலம் பாழடைந்து கிடக்கின்றது.

20 November 2023

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வேண்டாம் என்று கூறும் மக்கள், மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

பிபிசி சிங்களச் சேவை, இலங்கையில் உள்ள மருத்துவமனைகள் பற்றிய செய்தியை அண்மையில் தெரிவித்திருந்தது. அதாவது பிரித்தானிய சுகாதார சேவையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வைத்தியர்கள் இணைந்திருக்கும் 5 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது. 

இன்றய இலங்கை நோயாளிகளின் தலைவிதிக்காக நாங்கள் வருந்துகிறோம். இலவசக் கல்வியை அதிகபட்சமாகப் பயன்படுத்தி இலங்கைக்கு டாடா சொல்வது யார்? வரியை உயர்த்துவது அவர்களுக்கு பிரச்சனையா? லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும் வரி கட்ட வேண்டும் தாNனு இல்லையா? அதன் வரிகளை ஏய்க்க முடியுமா?.