ADS 468x60

28 October 2018

தனது தலையில் நெருப்பு வைக்கும் சமுகம்!

Image may contain: tree, plant, outdoor and natureபறவைகளும், மிருகங்களும் பாம்பும் பல்லியும் குரவையிடும் நாரைகளும் குரங்கும் குயிலும் படுத்துறங்கி பழமுண்டு காதுக்கினிய கதைபேசும் இயற்றையை அழிக்க எப்படிடா உங்களுக்கு மனம் வருது? பயம் இல்லாமல் செய்கின்றேர்களேயடா இந்தப் பாதகச் செயலை, உங்களைப் பேசி ஒன்றுமில்லை இவற்றுக்குடந்தையாக உள்ளவரை சொல்லவேண்டும். ஒரு மரம் வளர எத்தனை வரும் வேண்டும் தெரியுமாடா? ஒரு நாளிலையே ஒட்டுமொத்தமாய் கொழுத்தும் நீங்கள் உருப்படுவீர்களா? பல மரங்கள் இவைபோல் நெருப்பு வைக்கப்படுவதனை கண்ணுற்றேன், கவலைப்பட்டேன். தடுக்கயாரும் முன்வரவில்லை அதனால் எடுத்து வைக்கின்றேன் ஏற்றுக்கொண்டு ஏற்ற நடவடிக்கை எடுப்பீர்களென் நம்புகின்றேன். இவை ஒன்றிரண்டே பார்தேன் கேள்விப்பட்டேன் குடியிருப்புப் பகுதியிலும் நாகதம்பிரான் கட்டினிலும் மல்லாந்து கிடக்கும் மரங்களின் நிலையை. சென்று பாருங்கள் புரியும்.

24 October 2018

கேவலமா அரசே ஓடுதாமாம்!

செல்ல அத்தான் சேதி தெரிஞ்ச அத்தான் ஒரு சாங்கமாத்தான் அரச பேசிராங்க இங்க சாமான் வில கூடி ஏசிராங்க சின்னப் பொண்ணு விசயம் தெரிஞ்ச பொண்ணு கேள்விப்பட்டன் ஒண்ணொண்ணா கூடுதாமாம்- அட கேவலமா அரசே ஓடுதாமாம்..

19 October 2018

இது தெரியாமல் எத்தனை பேரடா இருக்கிறீர்கள்?

Image may contain: one or more people, people standing, tree, sky, plant, outdoor and natureவாகம் பூக்களும்
வயல் கீற்றும்
தாவும் மந்தியும்
தங்கிச்செல்லும் பறவையும்
மேவ ஒரு இடமுண்டோ
வானோர் தங்குமிடமோ
என மெச்சும் தேனுர்
இது எங்க ஊரு....

14 October 2018

நீயே உனக்கு என்றும் நிகரானவள்!

Image result for கண்ணீர் அஞ்சலி
மனசு உடைஞ்சு போனது
மாதா மறைந்த சேதி கேட்டு
கல்லை உடைத்து உடைத்து
சிலைகள் படைத்து படைத்து
கற்பக் கிரகங்களில் காட்சி
கரங்கள் குவிக்க வைப்பதில்லையா!

நீயும் ஒரு அழகிய சிலை!

வேதனம் மலிந்து வேதனை அதிகரிக்கும் தேயிலை தொழிலாழர்களுக்கான போராட்டங்கள்!

எமது நாட்டில் 150 வருடம் பழமை வாய்ந்த இந்த தேயிலை தொழிற்துறையானது. வருடா வருடம் அதன் ஏற்றுமதித்துறைசார்ந்து உலகளவில் அதற்கான கேள்வி வளர்ச்சி கண்டே வந்துள்ளது. உலகில் உள்ள 50 நாடுகள் இந்த தேயிலை உற்பத்தியினை செய்து வந்தாலும், அதில் பத்து நாடுகளே 90 விகிதமான தேயிலையினை உலகிற்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த பத்து நாடுகளில் சைனா, இந்தியா, கென்யா, இலங்கை, டேர்க்கி, ஈரான், இந்தோனேசியா, ஆர்ஜென்ரீனா மற்றும் ஜப்பான் ஆகியன உள்ளடங்கும். இவ்வாறு முன்னணியில் நிற்கும் தொழிற்துறையை ஏற்றிவைக்கும் தொழிலாழிகள் மட்டும் பின்னிலையில் இருக்கின்றமை பலர் மத்தியில் விழிப்பினை இன்று ஏற்படுத்தி, அவர்களது விடிவுக்கான அகிம்சைப் போராட்டங்கள் ஆங்காங்கே தோன்றியுள்ளமையினை அவதானிக்கின்றோம்.

எமது எதிர்கால விவசாயத்தின் அபிவிருத்தித்தேவை!

எமது எதிர்கால விவசாய அபிவிருத்தியின் தேவை, அவற்றில் ஏற்படும் மாற்றம் அவற்றுக்கான தந்திரோபாயங்கள் என்பன பற்றிய எனது உரையாடல் ஒலி ஒளிப் பதிவொன்று.

10 October 2018

சாரல் மழை ஒரு பக்கம் காரல் மழை மறுபக்கம்


இப்பொழுது மட்டு மண்ணின் கரையோரங்களில் உள்ள கரைவலை பாடுகள் உள்ள ஊர்களில் சிறியரக மீன்கள் அள்ளா கொள்ளையாக பட்டு நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. மக்கள் அவற்றை  உண்ணுவதற்கு வாய்ப்பாக உள்ளது, ஏனெனில் பெரிய மீன்கள் பட்டால் பொரியலுக்கும் கிடைக்காமல் அவ்வளவு மீன்களையும் மாற்றான் உண்டுமகிழ ஏற்றிவிடும் நடைமுறை, எமது வளத்தைப் பயன்படுத்தி நாம் நிறைவு காணமுன் ஏற்றுமதி செய்யும் நிலை நிறுத்தப்படனும். 

07 October 2018

அனர்த்தங்களில் நலிவுறும் நிலையை முகாமை செய்வதே வறுமைக் குறைப்புக்கான மூலோபாயம்.


Image result for disaster resilience people sri lankaஇன்று எமது நாட்டினைப் பொறுத்தளவில் பொருளாதாரச் சவால்கள் பல காரணங்களால் மிகப்பெரிய அபாயமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் பேரனர்த்தங்கள் அவற்றை தாங்கக்கூடிய திறனை பல அனுபவங்களினூடாகவும், விழிப்புணர்வுகள் மூலமாகவும் இன்று எமது மக்கள் வளர்த்துக்கொண்டுள்ளனர்.

உண்மையில் நாட்டின் மக்கள், தங்கள் தங்கள் வருமான உறுதிப்பாட்டினை கொண்டுள்ள தருணத்தினில், ஓர் அனர்த்தம் ஏற்படுமானால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பலத்தினைக் அவர்கள் கொண்டிருப்பதுடன் ஏனையவர்க்கும் அவற்றைக் கொண்டு நேரத்துக்கு உதவும் ஒரு திறனைக் கொண்டிருப்பர். இந்த திறன் நாட்டின் அபிவிருத்திக்கான உந்து சக்தியாகவும் அதேபோல் வறுமைக்கு எதிராக போராடும் திறனாகவும் பார்க்கப்படுகின்றது.

05 October 2018

மனதுள்ள ஆசான் வழிகாட்டும் ஈசன்


என்னை ஏற்றிய எல்லா குருமாருக்கும் ஆசிாியா் தின வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------
நல்ல வழியை காட்டி வளர்க்கும் தெய்வங்களே! -இந்த
நாட்டில் கல்விச் செல்வம் பெருக நாளும் உழைக்கும் தேவர்களே!
கடல் போன்ற அறிவை- சிறு
குறல் போல புகட்டி
மலை போன்ற திறனை - குறுஞ்
சிலை போல ஊட்டி
ஒளியூட்டும் குருமாரை தெழிவாகப் பணிந்தால்
உருவாகும் நல்ல எதிர்காலம் நமக்கு!

04 October 2018

பேருக்கு ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் பேராசிரியர்களாக சிலரே இருக்கின்றனர்.

Image result for kids under teacher' salary indiaதன்னம்பிக்கை, பண்பு, ஆற்றல், ஒழுக்கம், ஊக்கம், விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை 'ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளை இந்த நாளில் கொண்டாடுகின்றனர்.

குறைந்து வரும் நாணய மதிப்பும் குழம்பிக்கிடக்கும் குடிமக்களும்- ஒரு சமகால ஆய்வு


Image result for money depreciation sri lankan peopleஇலங்கை நாணயமதிப்பு தேய்வு பற்றி அண்மையில் எழுந்துள்ள சந்தேகங்கள் பற்றி பல அரசியல் பொருளாதார நோக்கர்கள் பலரும் பல கருத்துக்களை ஆதரவாகவும் எதிராகவும் வைத்துவருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி பல சந்தர்பங்களில் குறைவடைந்து வந்துள்ளது. இது யூன் 11ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் 161.17 ஆக அதிகரித்து இன்று 170.56 ஆக வேகமாக அதன் பெறுமதி குறைவடைந்து வந்துள்ளதனை அவதானிக்கின்றோம். இவை பொதுமக்களிடையே மற்றும் பொருளாதார, அரசியல் ஆர்வலர்களிடையே ஏற்படுத்திய குழப்பங்கள் அவற்றுக்கான காரணங்கள் என்பன பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.