ADS 468x60

31 December 2021

நம்மையும் நாட்டையும் வளமாக்குவோம்!

வெள்ளிச்சரம் வாசகர்களுக்கு முதலில் 2022 நல்வாழ்த்துக்கள்!

எத்தனை ஆண்டுகளைக் கடந்தேன் ஆனால் சில வருடங்களை கடக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கின்றது வாழ்நாளில். ஆனால் இந்த 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்கள் எந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இல்லாத சபிக்கப்பட்ட ஆண்டுகளாகவே கழிந்துள்ளன. 

மாற்றங்கள் தேவைதான் அவை ஏமாற்றங்களாகவே சென்ற வருடங்களில் இருந்துள்ளது. வரும் ஆண்டு வெறும் ஆண்டாக இருக்கக்கூடாது என்பது உங்களைப்போல எனக்கும் இருக்கும் ஆதங்கம்! பல உலகநாடுகள் இந்தக் கொவிட்டுக்குப் பின்னர் படிப்படியாக மீண்டுகொண்டிருக்கும் வேளையில் எமது நாடுமட்டும் வாழ்க்கைச் சுமைகூடி மாண்டுகொண்டிருக்கிறது.

25 December 2021

2022 ஆம் ஆண்டின் துவக்கம் 2021 ஆண்டின் முடிவைவிட பயங்கரமானது.

என்னைப் பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான ஒரு வருடத்தை நாம் நெருங்குகிறோம். சோகமான மற்றும் கொடூரமான ஆண்டுகள் நாம் கடந்து வந்துள்ளோம் இருப்பினும் வரப்போகும் இந்த ஆண்டைப்போல் போல பயங்கரமானவை எதுவும் இல்லை என்றே பல பொருளாதார அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சந்தேகத்திற்கு இடமின்றி, வரும் ஆண்டு பொருளாதார ரீதியாக மோசமான ஆண்டாக இருக்கும் என பலர் ஆரூடம் கூறிவருகின்றனர். ஏன் எனில் நாம் கடன்பட்டு கடன்பட்டு கடனின் உச்சத்தில் இருக்கின்றோம்.

24 December 2021

நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி தீர்வுதான் என்ன?

 இந்த நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் இரண்டு முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி. மற்றையது பிக்ஸ் ரேட்டிங்ஸ் இலங்கையின் தரத்தை குறைத்துள்ளது. இந்த இரண்டு காரணிகளின் தாக்கம், வர்த்தகர்கள் முதல் சாதாரண குடிமக்கள்வரை அனைவருக்கும் இது சாதகமான ஒன்றல்ல. இது எல்லோரையும் மோசமாகப் பாதிக்கும் என்றே சொல்ல வேண்டும். தற்போது இலங்கை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினை டொலர் தட்டுப்பாடு என பரவலாக நம்பப்படுகிறது. ஏனெனில், 2019ஆம் ஆண்டின் இறுதியில் 7642 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 5664 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2021ஆம் ஆண்டளவில் மிகக் குறைந்த அளவான 1100 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறைந்துள்ளது.

19 December 2021

கல்வியை பாதித்துவரும் கொவிட்-19: சாதாரண நிலைக்கு கொண்டுவருவதில் உள்ள சவால்கள்

2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் உலகம் முழுவதையும் தாக்கி வரும் கொவிட்-19 தொற்றுநோய், உலகின் அனைத்து மக்களின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளை சீர்குலைத்து அதன் மறுபுறத்தில் அவற்றைப்  புரட்டிப்போட்டுள்ளது. நவம்பர் 2019 முதல் 2021  நவம்பர் வரையிலான இரண்டு வருட காலப்பகுதிக்குள், உலக மக்கள்தொகையில் 3% வீதம் அதாவது 271 மில்லியன் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றுக்கு ஆளாகி இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில், தொற்றுநோய் இன்னும் முழுமையாக இந்த உலகத்தை விட்டுச் செல்லவில்லை. இதற்கிடையே தடுப்பூசி திட்டத்தின் செயல்திறனை அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் வைரஸின் புதிய மாறுபாடுகள் வெளிப்பட்டுக்கொண்டிருப்பது நம்மை அச்சம்கொள்ளவைக்கின்றது. 

18 December 2021

மறதி ஒரு தேசிய வியாதி!


பெற்றோல் விலை ஏறினால் மறப்போம்
பால் மா இல்லை என்றாலும் மறப்போம்
கற்றார் பட்டம் தராட்டியும் மறப்போம்
காணாமற் போகும் தேசம் மறப்போம்

வங்கியில் அடித்த பணம் மறப்போம்
வாழக் கிடைக்கா காஸ் மறப்போம்
வாங்கிய மறை வரி மறப்போம்
வானுயரும் செலவு தானும் மறப்போம்

ஒவ்வொரு பாவமும் பனியாய்ப் போக பாலகன் பிறந்து வந்தான்!

 ஒவ்வொரு உயிரும் வருந்தும் வேளை
ஆண்டவர் வருகின்றார்
ஒவ்வொரு அடியவர் நினைக்கும் வேளை
எம்முடன் இருக்கின்றார் - இருந்து
ஏற்றங்கள் அருள்கின்றார்
இயேசுவே! இயேசுவே! இயேசுவே! இயேசுவே!

06 December 2021

புவிவெப்பமடைதல் மக்கள் மத்தியில் அதிக உயர்வுதாழ்வை ஏற்படுத்தி வருகின்றது.

இன்று உலகம் பல முக்கிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவல் ஏற்கனவே உலகளவில் 269 மில்லியன் நோய்த்தொற்றாளர்களுக்கு வழிவகுத்தது, இதன் காரணமாக கடந்த ஆண்டில் 5.3 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக பருவநிலை மாற்றத்தால் நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலை அதிகரித்து, ஏழை நாடுகளில் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளிப்பட்டும், சில பணக்கார நாடுகளின் வளமை மேம்பட்டும் உள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

05 December 2021

நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டானதாக இருக்கவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மதிக்கப்படுகின்றனர். இவர்களை மக்கள் அதிகம் பின்பற்றுகின்றனர். இவர்கள் மக்களின் நிலையினை, கஸ்ட நஸ்டங்களை உணர்ந்து அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய குரல் எழுப்பினால் மாத்திரம் போதாது, அவற்றை செயலிலும் காட்டவேண்டும். 

இவர்கள் எல்லா விடயங்களில் அறிவு திறன் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதுடன் மக்களுக்கு பாரபட்சமின்றி சேவை செய்ய தம்மை அர்பணிக்கும் ஒருவராக இருக்கவேண்டும். ஆனால் இப்போது இவர்களில் பலரைப்பற்றி மக்கள் மாறுபட்ட அபிப்பிராயத்தினைக் கொண்டுள்ளமையானது, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் போலித்தனமான பற்றை, குணத்தினை காட்டுகின்றது. இவற்றில் சில விடயங்களை நான் இங்கு ஆராய்கின்றேன். இக்கட்டுரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகவும் எழுதப்பட்டது அல்ல. நமது சிந்தனைகளில் உள்ள பிழைகளை ஆராய்ந்து, புதிய மாறுபட்ட கருத்துக்களை விதைப்பதுதான் எனது எண்ணம்.

04 December 2021

அந்நியவருமானம் ஈட்ட பெண் தொழிலாளர்களின் தேவை- சுற்றுலாத்துறை ஒரு எதிர்காலக் கணிப்பு!

இலங்கையில் இன்று நெருக்கடிகள் ஒன்றின் மேல் ஒன்றாக வருவதற்குக் காரணம் அதன் அந்நியவருமான மூலங்கள் கொவிட் மூலம் ஆடிப்போயிருப்பதாகும். நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் இது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வேலையின்மை, வருமானமின்மை என்பனவாறான பிரதிகூலங்களை இவை தோற்றுவித்துள்ளது. இந்த நிலை குறிப்பாக பெண்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அத்துடன் அந்நிய வருவாயினை கொட்டித்தந்த சுற்றுலாத்துறை கொவிட் காரணமாக ஏனைய அனைத்துத் துறைகளுக்குள்ளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனை மீளக்கட்டியமைக்க பெண்களின் பங்கேற்ப்பு அதிகமாக வேண்டப்படுகின்றது. எனவே இந்த ஆய்வுக்கட்டுரையில் பெண்கள் இத்துறையில் பங்களிப்பதற்கு இருக்கும் தடைகள் மற்றும் அவற்றை மீட்டெடுக்க முன்மொழியவேண்டிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. 

02 December 2021

பேரிடியாக வந்துள்ள எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புக்கள்! யார் பொறுப்பு!

தற்போதைய விளைவு

இன்று நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் விசனம்கொள்ளும்படியான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. அதில் இன்று முக்கிய அச்சப்படும்படியான பேசுபொருளாக இருப்பது எரிவாயு சிலிண்டர்கள் வீடுகள் மற்றும் உணவகங்களின் சமையலறைகளில் தொடர் வெடிப்புகளாகும். தற்செயலாக அடிக்கடி நிகழும் சம்பவங்களால் ஏற்படும் அச்சத்தினைப் போக்க அரச மற்றும் இறக்குமதியாளர்கள் சார்பில் அவற்றுக்கு பதிலளிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து நவம்பர் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான உள்நாட்டு எரிவாயு பாவனையாளர்களிடையே மிகுந்த அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.