ADS 468x60

28 October 2015

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே -நமைக் 
காட்டிக் கொடுப்போர் காலடி என்றும் நாடாதே- வெறும்
பேச்சைக் கேட்டு பொம்மைகள் போல ஆடாதே- பொழுது
புலரும் கிழக்கில் வெற்றியின் முழக்கம் வாடாதே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

27 October 2015

நல்லாட்சியில் கிடைத்த மழையோ!

மடை உடைக்கும் வெள்ளம்
நிரம்பியது பள்ளம்
நாட்டிலேதோ பிழை
நாளெல்லாம் மழை
கூழுக்கும் இல்லை வழி
கூறுவது யாரைப் பழி
மறுகாமறுகா பெய்யிது காட்டில்
மக்களெல்லாம் முடங்கினர் வீட்டில்
ஒரே இதுதான் வேலையாப் போச்சி
ஒழிப்பது எப்படி வறுமையை ஆச்சி
தோட்டமும் தொரவும் எங்களுக்கு ஆதாரம்
கிடைக்குமா வெள்ளத்தில் போன சேதாரம்
நாங்களும் நினைத்தோம் இது
நல்லாட்சியில் கிடைத்த மழையோ என்று
முள்ளிவாய்க்கால் முற்றுகைபோல்
அள்ளி வருகிறது ஆத்துவெள்ளம்
தவிர்க்க முடியாத ஒன்று
தவிக்கும் மக்களை நாம்தான் பார்க்கனும்
நேர்த்தியான தகவல் தேவை- அது
நேர்மையாய் உதவி அளிக்கும்

சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு சுமைகள் தெரிவது இல்லை!

தமிழாய் பிறக்கவைத்தான்- தெருவில்
தனிமையில் நடக்கவைத்தான்
உறவை மறக்கவைத்து- எங்களை
ஊர் ஊராய் திரியவைத்தான்

அணைக்கும் அம்மா ஆருயிர் அப்பா
அனைத்தும் இழந்தே போனோம்!
உணவிடக் கூட உறவுகள் இழந்து
ஊனமாய் வாழ்க்கையில் ஆனோம்!!

வீடுகளெல்லாம் காடுகளாச்சி
வெளியே வாழ்க்கை போச்சி
சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு
சுமைகள் தெரிவது இல்லை

பள்ளிக்கு செல்ல பார்ப்பவர் இல்ல
படிக்கிற நெலமையும் இல்ல
பசியில வாடிடும் நேரத்தில் கூட
பக்கத்தில் உறவுகள் இல்ல!!

நான் மானல்ல ஓட!













இந்தா வந்திட்டன் பொறுமா
இறங்கி வடிச்சி வாறன்
இறால்க் கூனி சுங்கான்
வறால் கெழுத்தி செல்வன்

மூத்த பிள்ளை நான்தான்
முழுதும் சுமக்கும் பெண்தான்
வீட்டுக்குள்ள இருந்தா
வெறும் பானை சோறிடுமா?

அச்சம் காட்டி என்னை
அறைக்கு உள்ளே பூட்டாதே
பயந்து போகும் மானைத்தான்
பாய்ந்து பிடிக்கும் புலி
நான் மானல்ல ஓட
மறுபடியும் பாயும் வேங்கை