ADS 468x60

15 November 2022

நேற்றய வட்ஜெட் யாரைத் திருப்திப்படுத்தியுள்ளது?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி, 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ரூ. 2,404 பில்லியன்.

அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவு ரூ. 5,819 பில்லியன் (19.2%) மற்றும் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் ரூ. 3,415 பில்லியன் (11.3%).

அரசு தனது வருவாயை பெருக்குவது போல், பொருளாதாரத்தின் முழுச் சுமையையும் பொதுத்துறையே சுமக்க வேண்டும் என்பது நவீன உலகத்துக்கு ஒத்துப்போகாத தோல்வி அம்சமாகும்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் மூழ்கியது, கோவிட்-19 தொற்றுநோயால் சுற்றுலா வருவாயை இழந்தது மற்றும் பல ஆண்டுகளாக பொருளாதார தவறான நிர்வாகம் கடுமையான டொலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

12 November 2022

வெட்கத்தின் காரணமாக உண்மையை மறைக்கக்கூடாது

பசி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிந்தைய மனவுளைச்சல் சீர்கேடு பசியின் காரணமாக குழந்தைகளுக்கு பொதுவானதாக இருந்துவிடுகின்றது

பாடசாலைகளில் பல சிறுவர்கள் பட்டினியால் பாடசாலை செல்வதை நிறுத்திவிட்டதாக பல செய்திகள் நாளிதழில் வெளியாகியுள்ளது. எனினும் இது உண்மைக்குப் புறம்பானவை என சிலர் தெரிவித்துள்ளனர். 

அது உண்மையா பொய்யா என்பதை ஊர் மக்களிடம் விட்டுவிடுவோம். இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் சரியாக சாப்பிடாமல் விலை அதிகரிப்பினால் உணவை புறக்கணித்து வருவதாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வெளியான செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

பாடசாலைக்கு வரும் குழந்தைகள் பசியால் மயங்கி விழுவது போன்ற செய்திகளும் சமீப நாட்களில் நாளிதழ்களில் வந்தன. ஆசிரியர்களின் கூற்றும் இதை உறுதிப்படுத்தியது. இந்நாட்டு மக்களின் பட்டினியைப் போக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை உலக உணவு அமைப்பு கோரியுள்ளது. நாம் வெட்கத்தின் காரணமாக உண்மையை மறைக்கக்கூடாது, ஏனென்றால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் பசியின் பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும்.

07 November 2022

அரசியல் திருப்புமுனை இன்றேல் சமுக நெருக்கடி தீவிரமடையலாம்.

தொடர்ச்சியான நிதி நெருக்கடி 2022 இல் வறுமையை 25.6 வீதமாக உயர்த்தக்கூடும்.

2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏழைகளாகி, நாட்டின் வறுமையை 2009 ஆம் ஆண்டின் நிலைக்குத் தள்ளுவார்கள் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக எமது நாட்டில் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும், மக்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் (DCS) ஒவ்வொரு குடியுரிமையாளரதும் வருமானம்; மற்றும் செலவினை மதிப்பிடுவதற்கு குடும்ப வருமானம் மற்றும் செலவின கணக்கெடுப்பைப்பைப் (he Household Income and Expenditure Survey) பயன்படுத்துகிறது.

'அடிப்படை தேவை அணுகுமுறைக்கான செலவு' என அறியப்படும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையைப் 'பயன்படுத்தி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம்- DCS நாட்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் உத்தியோக பூர்வ வறுமைக் கோட்டை கணக்கிடுகிறது. 

06 November 2022

அரசு மக்கள் மீது பாரத்தினை போடுதல் பொருளாதார நெருக்கடிக்குப் பயன்தராது

அரசின் திட்டங்கள் சிலவற்றால் பொருட்களின் விலைகள் படிப்படியாகக் குறைந்தாலும், பொதுமக்களின், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வயிற்றில் அடிப்பது ஒருவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்னும் நீடிககின்றது. பிள்ளைகளுக்காக பால் மாவினைப் பெற்றுக் கொள்வதற்காகப் செல்லும் பெற்றோர் வெறுங்கையுடன் வீடு திரும்புவது முதல், மண்ணெண்ணெய் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டதால், எரிபொருள் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து ஏற்பட்ட மரணங்கள், எரிவாயுவுக்காக நீண்ட வரிசையில் நிற்பது போன்றவற்றைப் பார்த்தோம். 

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு இன்னும் மீண்டு வருகிறது, இருந்தாலும் மேலும் உணவுப் பணவீக்கம் 70-75 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இன்றும் அன்றாடம் வாழ்கைக்காகப் ஒரு நாளைக்கு ஒரு உணவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன.

எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம்.

  • நாம் செலுத்தவேண்டிய மொத்த பொதுக் கடன் சுமார் 80 பில்லியன் டொலர்கள்.
  • ஆனால் எங்களுக்கு முன்மொழியப்பட்ட கடன் தொகை 2.9 பில்லியன் டொலர்கள் ஆகும்
இந்த நாடு பல இடர்களை கண்டு வந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் அதன் பொருளாதாரம் அவ்வளவு ஆட்டம் காணவில்லை. அது 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்தான் இந்தப் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு சுத்தமாக இல்லாமற்போனது, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் விநியோகம் தடைபட்டது. தினசரி சமையலுக்கு எரிவாயு கூட வழங்க முடியாத நிலை தோன்றியது. இவை அனைத்தும் சேர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயரக் காரணமானது. இதனால் தொல்லை தாங்க முடியாத மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு பலராலும் என்ன வியாக்கியானங்கள் கூறப்பட்டாலும், நாட்டின் அரசியல் தலைமை மாற்றப்பட்டது அந்த மாற்றத்தின் பின்னர் அது நிறுத்தப்பட்டது.