ADS 468x60

24 July 2019

இளைஞர்களே இது இருந்தால் வேலை நிட்சயம்: தயாராகுங்கள்

இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! நீங்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற காலங்களில் உங்களை மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் கைகோர்த்துக்கொள்ளுதல் முக்கியமானதாகும் இதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.

நேற்று நான் ஒரு வேலைக்காக அப்பிளிக்கேசன் போடுவதற்காக சென்றபோது, அவர்கள் ஒன்லைன் அப்ளிக்கேசன் போடச் சொன்னதும், அங்கு சென்று அதை திறந்து ஒவ்வொன்றாக நிரப்பத் துவங்கினேன். குறிப்பாக லிங்டிங் லிங்கை இணைக்கும்படி ஒரு இடைவெளியும், ஏனைய எமது சொந்த வுளக்ஸ்பொட், யூரியுப் ஆகியவற்றினை இணைக்கச் சொல்லி இன்னும் ஒரு இடைவெளியுமாக இருப்பதைப் பார்த்தேன்.

23 July 2019

கறுத்த நாள்!

மனித முகத்துடன் 
மிருகங்கள் நுழைந்த நாள்
வெள்ளையுள்ளம் கொண்டவர்களை
வெட்டி வீசி
கறுப்பாக்கிய நாள்!




முடியாதவர்களால்
முடிந்தவர்களை முழையோடு 
கிள்ளி எறிந்த நாள்!

வர்த்தகம் எல்லாம்
வழித்து எறியப்பட்ட நாள்!

வாசகங்கள் இடமாறிய நாள்!
நிராயுதபாணிகளின் குருதிகுடிக்க
வெலிக்கடைச் சிறையில் 
வேலிகளே பயிரை மேய்ந்த நாள்!

இளைஞர்களின் நெஞ்சில்
இறுமாப்பை விதைத்த நாள்!

18 July 2019

நரகமாக மாறும் நாட்டுபப்புற கடற்கரைகள்.


நான் கவலையுடன் ஒரு விடயத்தினை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். சென்ற ஞாயிறு எனது தேத்தாத்தீவு கிராமத்தில் உள்ள கடற்கரைக்கு மருமக்களுடன் வழமைபோல் சென்றேன். 
அது கடற்கரையாக அல்ல குப்பைக்கரையாக காட்சியளித்தது. பார்க்கும்போது எனக்கு ஒரு நரகலோக வெறுப்பை உண்டு பண்ணியது. செல்லும் வழியெல்லாம் உடைந்த போத்தல்களின் பீங்கான் துகள்களும், சொப்பின், பிளாஸ்ட்டிக் கழிவுகளும் பரந்து மணல் இடையே மறைந்தும் மறையாமலும் கரை நெடிகிலும் கண்டு கவலையடைந்தேன்.

14 July 2019

தேர்தல் என்றால் தெருத் தெருவாக வருவாரே!

நாங்கள் எல்லாம் காலா காலமாக தமிழரசிக்கட்சி, அதன் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அரசியலில் ஏதோ இவர்களுக்கு மாத்திரம் ஆதரவாக ஒரு வகையில் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றோம். தெரியாதவர்கள்கூட இந்தக் கட்சியில் கேட்டாலும், அவர்களுக்கு வாக்களித்து வழியனுப்புவதுதான் எமது வழக்கமாக இருந்து வருகின்றது.


இது இந்தக் கட்சியில் நிற்பவர்களுக்கான பெரிய செல்வாக்கில் அவர்களை தேர்வு செய்த காலம் மலையேறி இன்று கட்சிக்காக கிடைத்த வாக்கில் கரைசேந்தவர்களே அதிகம் அதிகம். இதை யாரும் மறுக்க முடியுமா?

07 July 2019

கதிர்காம பாதயாத்திரை: முருகன் அழைத்தால்தான் போகலாம்!-01

காலைப் பொழுது 'பில் பில்' என விடியத்துவங்கியதும், 'கரார் கரார்' என வீட்டின் வெளியே ஒரே சத்தம்.  வானொலிப் பெட்டி வெளியில் பக்திகானங்களை ஒலித்த வண்ணம் இருந்தது. 

'இஞ்சே உரிச்ச தேங்காயெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு சும்மா பாத்திட்டு இருக்காம அதுக்கு முடிகூட்டி எடுங்க பாப்பம்' என அம்மா அப்பாவுக்கு கட்டளை இடுவதுமாக ஒரே பரபரப்பாக இருப்பதை உணர்ந்து, நானும் நேரகாலத்துக்கு எழும்பி வெளியில் வந்தேன்.

06 July 2019

விடுதலைக்காய்!

மனிதாபிமானம்- அது
மனுக்குலத்துக்கு அவமானம்
மனச்சாட்சி இல்லாமல்
மன்றில் உரைக்கின்றீரே
கடத்தப்பட்டு காணாமல் போன
தடுக்கப்பட்டு சிறையில் உள்ள
எம் இனத்துக்கு மாத்திரம்
தடைச் சட்டமா!
சரண் புகுந்தோர்கு அங்கு
கொலைப் பட்டமா!
உண்மையை கண்டறிய
ஒன்பது வருடம் தேவையா!
நல்லாட்சி என்றால்
இல்லாதார்க்கு நீதி எங்கே!!
எல்லோரும் பிரார்த்திப்போம்!
எம்மினத்தின் விடுதலைக்காய்!