ADS 468x60

31 August 2014

நல்லூர் கந்தன் சந்நிதானம்

நல்லூர் கந்தன் சந்நிதானம்
பார்த்தேன் குலைந்தது எந்நிதானம்
ஈக்கூட நுழையாத இடைவெளி
பார்கும் இடமெலாம் அழைக்கும் கடைவெளி
மக்கள் முகத்தினில் சந்தோசம் கண்டேன்
அகத்தினில் எந்தோசம் கொண்டேன்.

30 August 2014

இது முல்லை வேளை


தங்கம் கலந்த மணல்- அருகே
தாலாட்டும் வங்கப் புனல்
கூட்டமாய் வரும் மீன்கள்- அதை
நோட்டமிடும் மீனவர் கண்கள்
மயிலிறகாய் வருடும் தென்றல்- இது
வருவோர்க்கு வாய்த்த முன்றல்
சூரியனைக் குழைத்து எறிந்த வானம்
நீள் பனைகள் ஒட்டடை துடைக்க
நிலா வருகைகண்டு
உலாவும் பறவைகள் கானம்
இந்த வேளை நமக்கெல்லாம்
பொது உடமைதான்
ஆனாலும் மாற்றான் வீட்டு
மல்லிகைப்போல் இன்னும்
வேலிகள் கடந்து நிற்கும்
வேரற்ற எம்மக்கள்.

23 August 2014

நீ மட்டும் ஏன் கோபிக்கிறாய்!

மழைமேகம் நீரள்ள கடலுக்கு கோபமா
மலைமுகடு கூந்தல் காய காற்றுக்கு கோபமா
உலைமூட்ட எரிவதனால் நெருப்புக்கு கோபமா
மதிவளர்ந்து எறிக்கிறதே வானமே கோவமா
மரமூன்றி வேர்விட்டால் ம
ண்ணுக்கு கோபமா
மனம்மயங்கி இடங்கேட்டால் பெண்ணுக்கு கோபமோ!

மூடுவதால் கண்ணுக்கு கோபமா!
பாடுவதால் இசைக்கு கோவமா!
ஆடுவதால் காலுக்கு கோபமா!
ஓடுவதால் கங்கைக்கு கோபமா!

மலர்ந்து மலர்ந்து மணந்து மணந்து
உலர்ந்து போகுதே மலருக்கு கோவமா!
வானத்தில் திங்கள் வந்தால்
இரவுக்கு கோவமா!
வார்தையில் பங்கம் வந்தால்
வாய்கு கோவமா!
நீயும் நானும் சண்டையிட்டால்
காலத்தின் கோபமா!!!, சாபமா இல்லை பாவமா!!!!