ADS 468x60

28 April 2019

அசம்பாவிதங்கள் தமிழ் வாடிக்கையாளர்களை அடுத்தபக்கம் திருப்பியுள்ளது.

இன்றய நிலை
இன்று எதிர்பார்க்கப்படாத, துரதிஸ்ட்டவசமான பல மாறுதல்கள் மட்டக்களப்பில் ஏற்பட்;டு இருக்கின்றது. எமது மக்கள் வெளிப்படையாகச் சொல்லப்போனால் தற்பொழுது உள்ள சூழலில் எமது மக்கள் முஸ்லிம் ககோதரர்களின் பகுதிகளிலுள்ள கடைகளுக்கு செல்ல பயப்படுகின்றார்கள். இதனால் தமிழ் கடைகளை தற்காலிகமாக நாடிவருகின்றனர். ஆனால் பல முறைப்பாடுகள் எழுகின்றன, அவர்கள் கண்ணைப்பொத்தி இந்த மக்களை கறக்கப்பார்கிறார்கள் என கடிந்துகொள்ளுகின்றனர் எல்லோருமல்ல. நமது மக்கள் இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற இந்த நிலையில் அவர்களுக்கு சேவை மனப்பாங்கில் உதவ முன்வர வேணடியது அனைவரது கடமையுமாகும்.

27 April 2019

வாருங்கோ இது வைகாசி மாதம்!

வாருங்கோ இது வைகாசி மாதம்
வந்துவிட்டால் மனம் மகிழ்சியில் மோதும்
சேருங்கோ கோலம் செய்திடக் கூடி
செல்லுங்கோ தோழில் காவடி ஆடி

வேப்பிலை மஞ்சள் மணங் கமழ
வெற்றிலை பாழை பழம் மணக்க
காப்பிட்டு கல்யானக் காலும் இட்டு
கூப்பிட வந்திடும் கோ மகளே!

20 April 2019

எல்லைக் குழந்தைகளை எடுத்தேத்தும் செற்பாடு.

மட்டக்களப்பின் பல பகுதிகள் இன்னும் நலிவுற்ற தன்மையில் இருக்கின்றன என்பதற்கு இன்னும் எமது மக்கள் வறுமையிலும் தொழில் இன்றியும் இருக்கின்ற தரவுகள் சாட்சியாக இருக்கின்றன. இவற்றுக்கான நிவாரணங்கள் மாத்திரம் போதாது, அவர்களை இந்த நிலையில் இருந்து எடுத்தேத்தவும் தேவை இருக்கின்றது. அந்த வகையில் மக்களுடன் இணைந்து கண்ணபுரம் நாராயணன் பாலர் பாசாலை, கிழக்கின் ஒளி பாலர்பாடசாலை மாலையர்கட்டு மற்றும் பாமுருகன் பாலர்பாடசாலை திக்கோடை ஆகிய பாடசாலை குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சத்துணவுத்திட்டத்தின் கீழ் ஒரு தொகை நெஸ்ட்டமோல்ட் பால்மாவினை நிக் அன்ட் நெல்லியின் வேண்டுகோளுக்கிணங்க கனடாவில் வசிக்கும் பிரியன் மற்றும் நிலானி ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்

17 April 2019

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய ராகசாகரம் இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோடசவத்தினை முன்னிட்டு என்னால்; கொம்புச்சந்தி பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டாவது இ
றுவட்டான 'கொம்புச்சந்தி ராகசாகரம்' தழிழ் சிங்களப்புத்தாண்டு தினத்தில் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவர் த.விமலானந்தராசாவின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

07 April 2019

மட்டக்களப்பில் பின்தங்கிய முன்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத் திட்டம்.

மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வுடன் அவர்களுக்கான வைத்திய சிகிச்சை முகாமும் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினரால் (கி.இ.ச.ச.அ.ச) நிக் அன்ட் நெல்லி பௌண்டேசன் நிதி அனுசரணையில் போரதீவு பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் கி.இ.ச.ச.அ.சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.