ADS 468x60

13 February 2020

கிழக்கு மாகாணமே இணையத் திறனறிவில் கடைசியாக உள்ளமை வேலையற்ற இளைஞர்களுக்கு பஞ்சமில்லாதாக்கியுள்ளது.

நம் நாடு பல பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்து வருகின்றது.  2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறை அல்லது துண்டுவிழும் தொகை 7 வீதம் என மதிப்பிடப்பட்ட ஒரு சவாலான பொது நிதி நிலைமையில் அது ஆக்கப்பட்டுள்ளது. அத்தோடு இது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாயில் அதிகூடிய குறைப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதனால் அதற்கான பல ஊக்கத்தொகைகளை தயார்பண்ணவேண்டிய ஒரு சங்கடத்தில் இருந்து வருகின்றது எமது நாடு. இத்தனை பிரச்சினைகளுக்கும் அப்பால் புதிதாக வந்துள்ள அரசு 150,000 பேரினை அரச துறையில் இணைத்துக்கொள்ளவும் எத்தணித்து வருவது  எமது திறைசேரி அல்லது கஜானாவில் உள்ள பணத்தொகையுடன் ஒப்பிடும்போது பாரிய சவாலாகவும் தலையிடியாகவும் அரசுக்கு மாறி இருக்கின்றது இன்று. 

12 February 2020

அரச ஊழியர்களின் சேவைகள் சுதந்திரமானதாக வழங்க இடமளிக்கவேண்டும்.

எமது நாட்டில் அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன, அதனால்தான் அவற்றைச் செய்வதற்கு அவர்களின் நேர்மை மிக முக்கியமானது. இன்று ஒரு பொது அதிகாரி பொது நலனுக்காக எழுந்து நின்று அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதும், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தாவுக்கு பதிலளிப்பதும் இந்த வாரம் சமுக ஊடகங்கள் முழுவதும் வைரலாகியது. இது அடிக்கோடிட்டுக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் எடுக்கும் கேள்விக்குரிய முடிவுகளையும் கொள்கைகளையும் எதிர்கொள்வதற்கும், இந்த நிலைமையை மாற்ற வேண்டியதன் அவசியத்திற்கும் இந்த நாட்டில் பொது அதிகாரியின் அதிகாரங்கள் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதனையே.

09 February 2020

இலங்கை 2030 அளவில் எதிர்கொள்ள இருக்கும் பொருளாதார நெருக்கடிகள்.

இனிவரும் அடுத்த பத்து வருடங்கள் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கப்போகின்றது என நினைத்துப்பார்தால் அது ஆபத்தானது என பல பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதற்கு பல அகப் புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தியும், செலுத்தப்பட்டும், செலுத்தப்பட இருப்பதும் கருத்தில் கொள்ளவேண்டும். மாறிவரும் காலநிலை அதனால் ஏற்படும் அனர்த்த இழப்புகள், சனத்தொகை வளர்சி, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, திறனுடைய தொழில்நுட்பமாற்றம், திடீர் திடீர் என ஏற்படும் வைரஸ் அச்சுறுத்தல்கள், சர்வதேச பொருளாதாரப் போட்டிகள் என்பன பாரிய அழுத்தங்களை எமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தாமல் இல்லை.

இவற்றுக்கு அப்பால் குறிப்பாக பின்வரும் காரணிகளின்  மாற்றம் எந்த வகையில் தாக்கத்தினைக் கொண்டுவரும் என்பதனை நாம் கருத்தில் கொள்ளவேண்டிய தருணம் இது.

04 February 2020

நாம் பூரண சுதந்திரம் பெற்றவர்களா?


இன்று எமது நாட்டில் 72வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. இற்றைக்கு 72 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டை தம்வசப்படுத்தி, எம்மையெல்லாம் அடக்கி அடிமைகளாக, ஒடுக்கி ஒன்றுமில்லாதவர்களாக தமது ஆட்சிக்கு கீழ் ஆங்கிலேயர்கள் எம்மைக் கட்டி ஆண்டு வந்தனர். அந்த அடிமை விலங்கை உடைக்க அல்லும் பகலும் போராடி பல உயித்தியாகங்களை செய்து நமது முன்னோர்கள் பின்னர் எமது நாட்டை நாங்களே ஆள திருப்பி சுதந்திரமாகப் பெற்றுக்கொண்ட தினம்.     இருப்பினும், நம்மில் பலர் இன்று தமக்கு தாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி, சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது? என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு விழாவாகவே கடைபிடிக்கப்பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப்போல் இதுவும் ஒரு விடுமுறைநாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.

01 February 2020

ஈர அருவி ஓடும் இனிமையான தேசம்!

ஈர அருவி ஓடும்- ஒரு
இனிமையான தேசம்
மலையோரம் குளிர் வீச
வயல்கள் ஆடும் வீடு

கூடி அலைகள் மோதும்- கடல்
கோடி அழகு சேர்க்கும்
தமிழ் அன்னை அரசாண்ட
தலைமை கொண்ட நாடு

உயிரிலும் மேலான தமிழை வளர்த்த தாய்
உறவுகள் சீராக உயிரைக் கொடுத்த தால்
ஈகை பெருகும் ஈழமண்