ADS 468x60

25 April 2024

இலங்கையில் ICT துறையிலும் அரசியல் தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு

இன்று இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தல்கள் பற்றியே கவனம் செலுத்துகின்றனர். எந்த தேர்தல், எப்போது நடக்கும் அல்லது நடக்காதா என்பது பற்றியே விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பாலின சமத்துவம் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதனை மறந்துவிடுகின்றோம். குறிப்பாக, வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்தக்காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் வளர்ச்சியில் இது மிக முக்கிய பங்கு வகிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்து 'தலைமைத்துவம்' (Leadership) ஆகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் வலுவான பெண் முன்னோடி மாதிரிகள் அவசியம் என்பதையே இது வலியுறுத்துகிறது.

23 April 2024

கடன் மறுசீரமைப்புடன் சேர்த்து அரசியல் மறுசீரமைப்பும் அவசியம்.

இன்றயளவில் நலன்புரி அல்லது பிற மானியங்களை நம்பியிருக்கும் 40 வீத மக்கள் வாழும் நாடு இலங்கையாகும். உலக வங்கியின் கூற்றுப்படி, வறுமை 24 வீதமாக ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச கடன் வழங்குபவர்கள் அத்தகைய நாட்டிலிருந்து 9.75 வீத வட்டி விகிதத்தை எதிர்பார்க்கிறார்கள். 9.5 வீத வட்டி தர அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாம் திட்டமிடுவதற்கும் அவர்கள் கேட்பதற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி உள்ளது. ஆனால் இன்னும் கடன் கொடுத்தவர்களுடன் அந்த உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்க அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அறிக்கைகளை இரண்டரை வருடங்களாகக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அந்தத் தொகை இறையாண்மைப் பத்திரங்களுக்குச் செலுத்தப்பட வேண்டும். இருதரப்புக் கடன்களுடன் சேர்த்து, நிலுவையில் உள்ள கடனின் மொத்தத் தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.

21 April 2024

நாட்டில் சிறைச்சாலைகள் இல்லாதொழிக்க என்னவழி?

ஒருவன் குற்றம் செய்தால், அவன் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டனையின் இறுதி இலக்கு குற்றவாளியை சமூகத்தில் சரியாக மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டு அதிகாரிகள் அதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தினார்கள் என்பதில் திருப்தி அடைய முடியாது. சில சமயங்களில், தவறு செய்தவர்கள் இந்த சூழ்நிலையால் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஒரு நாடாகிய நாம் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் பார்த்தால், சிறைச்சாலைகளில் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்க முடியாது. சிறைகள் நாளுக்கு நாள் ஒரு நாட்டில் மூடப்பட வேண்டும்.

யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக சிறைக்குச் செல்கிறார். ஆனால் நம் நாட்டில் குற்றம் சுமத்தப்படாமல் தவறு செய்பவர்கள் எண்ணற்றவர்கள். அரசியல்வாதிகளால் இன்று நமது நாடு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது;. நமது நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளையடித்தார்கள். நாடு பெற்ற வெளிநாட்டு திட்டங்களில் இருந்து கமிஷன் பெற்றனர். கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பாலம்ஈ பாதைகள் மற்றும் மற்றும் மதகுகளை கூட சுரண்டினார்கள். 

18 April 2024

பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை.

இன்றைய உலகில், சமூகத்தின் வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் முக்கியத்துவம் எப்போதையும் விட அதிகமாக உள்ளது. வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அவை அறிவு படைப்பு, திறன் வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு, சமூக நீதிக்கான போராட்டம் மற்றும் கலாச்சார வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முக்கிய சக்திகளாகும்.

எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்தின் அடிப்படை நோக்கமும் வெறும் தகவல்களைப் பரப்புவது மட்டுமல்ல, ஒன்றை ஆய்ந்து கேள்விகேட்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதும், நடைமுறையில் உள்ள சித்தாந்தங்களை சவால் செய்வதும், சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் ஆகும். ஆயினும்கூட, நாம் சுற்றிப் பார்க்கும்போது, ஆராய்ச்சி மற்றும் கற்றுக்கொள்ளுதலின் திசையை சந்தைப்படுத்தும் ஒனற்hக மாறி வருவதனைக் காண்கிறோம், இதனால் நமது பல்கலைக்கழகங்களின் உண்மையான நோக்கத்தினையே சிதைக்கிறோம்.

17 April 2024

அரசாங்கம் எதற்குத் தேவை

இரு நாட்கள் முன்; ஒரு நாளில் மட்டும் 11 இறப்புகள் பதிவாகியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த ஆண்டின் முதல் 100 நாட்களில் மட்டும் 600 பேர் உயிரிழந்துள்ளனர். அப்படியானால், இந்த நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக அகால மரணங்களின் எண்ணிக்கை சுமார் 6 ஆகும். இந்த சராசரி எண்ணிக்கை கடந்த ஆண்டு 11 ஆக அதிகரித்து இருந்தது. இந்நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவை இவ்விடயத்தில் சில பொறுப்பை ஏற்க வேண்டும். முறையான போக்குவரத்து வசதிகள் இருந்தால், தனியார் வாகனங்களுக்குப் பதிலாக பொது வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் இருப்பார்கள் இல்லையா. ஆனால், பேருந்துகள் மற்றும் ரயில்களில் தேவையில்லாமல் அடைத்து அவதிப்படுவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்?

பாலித்த தேவரப்பெரும அரசியலில் ஒரு எடுத்துக்காட்டு

நம் நாட்டு மக்கள் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது பெரிய வெறுப்போடு இருக்கின்றனர். அந்தளவுக்கு நம் நாட்டு அரசியல் சீரழிந்து விட்டது. கடனில் மூழ்கியிருந்த சாமானிய மக்கள் மீள முடியாத அளவிற்கு எமது நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்சென்றவர்கள் இந்நாட்டு அரசியல்வாதிகள். இவ்வாறான பின்னணியில் தான் கடந்த காலங்களில் பெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்று பாராளுமன்றத்தில் 225 பேரையும் நிராகரிக்க வேண்டும் என்ற கருத்து மக்களிடையே நிலவியது. 

12 April 2024

நுகர்வோருக்கு எச்சரிக்கை! 90% உணவுப் பொருட்கள் பாவனைக்கு தகுதியற்றவை

இலங்கை சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் 90% க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் பாவனைக்கு தகுதியற்றவை என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க.

அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட நாம் தினமும் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனங்களை கலப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், வெண்ணெய் கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்குகளில் வெண்ணெய் தவிர முட்டைகள் எதுவும் இல்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

09 April 2024

எதை நாம் புத்தாண்டில் விட்டுவிடுகின்றோம்?

தமிழ்ப் புத்தாண்டு சம்பிரதாயங்கள் எந்தவொரு அரசாங்கத்தாலும் விதிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஒன்று அல்ல, மாறாக அந்த சமூகத்தால் பேணப்படும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சுற்றுச்சூழலை விட்டும், சடங்குகளை விட்டும், உறவுகளை விட்டும் விலகி வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் உச்ச நிலைக்கு நம் சமூகம் இன்று வந்துவிட்டது. இன்று நெருக்கடி பொருளாதாரத்தில் மாத்திரம் இல்லை நமது சிந்தனையில் உள்ளது.

கடந்துவந்த நமது வாழ்க்கையின் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களைத் திரும்பிப் பார்ப்பது, கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட்டதா என்று சிந்திப்பது, அதுபோல இன்னும் முன்னே உள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுக்குத் தயாராக ஆசிகளைப் பெறுவதையும்; புத்தாண்டின் சாராம்சம் என்று அழைக்கலாம். 

05 April 2024

களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுமா?

 அறிமுகம்

முன்னேற்றப் பாதையிலே மனசு வச்சி முழுமூச்சா அதற்காக தினம் உழசை;சி பாடுபடுற விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற நிலையில் கிழக்கு விவசாயிகள் நாதியற்றுக்கிடப்பதனை ஜீரணிக்க முடியவில்லை. யாரங்கே யாரங்கே இதற்கொல்லாம் வரமாட்டார்கள். நாம் இன்று பிரயோசனமற்றுக்கிடக்கும் முற்றுப்பெற்ற களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் பற்றிப்பார்க்கப்போகின்றோம்.

தலைவர்களாக..... கணேசமூர்தி வந்தாரு! காதர்மஸ்தான் வந்தாரு!, அமல்சேர் வந்தாரு! அமீர்அலி வந்தாரு! அதிகாரிகளாக... கருணாகரன் வந்தாரு! கலாவதி வந்தாரு! ஒண்ணும் திறக்க முடியல

சாராய வார் திறக்கிறண்டா வேணாம்னடாலும் ஓடி ஓடி திறக்கறாணுகள் ஆனா வாழ்வழிக்கும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்த பரிபூரணமா முடிச்சிம் இத்தன அக்கப்போர் எதற்கு? ஏதோ உள்ளே இருக்குப்போல வாங்க பார்க்கலாம்!

03 April 2024

சித்திரை வருட வோணஸ்: மூன்றுவேளை உணவு

பல விடயங்கள் நமக்கு பழக்கப்படுத்த வேண்டியிருக்கு. இலங்கை வரலாற்றில் ஒரு கிலோ பம்பாய் வெங்காயம் ரூ. 600க்கு விற்கும் முதல் சித்திரை வருடம் இதுவாகும். அத்துடன் இலங்கை வரலாற்றில் இலங்கையர்கள் அதிகளவு மின்சாரக் கட்டணம் செலுத்தும் வருடம் இதுவாகும். இதுதவிர, இலங்கை வரலாற்றில் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட முதலாவது சித்திரை வருடம் இதுவாகும், அடுத்த தமிழ் சிங்களப் புத்தாண்டு வரை மக்கள் தங்கள் வாழ்வை இழுத்துச் செல்லும் வலிமை இருந்தால், அது மிகவும் அதிர்ஷ்டமானதுதான்.

வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்துவிட்டது என்று மீண்டும் சொல்கிறோம். எப்படி சாப்பிட்டோம் என்பதை நமது அடுப்பு அறியும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் அடுப்பில் வைக்கப்படும் உணவுப் சமையல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. 

02 April 2024

தேத்தாத்தீவின் அழகு தனி அழகு

தேத்தாத்தீவின் அழகு தனி அழகு- அங்கு

தெள்ளு தமிழ் கலைகள் வந்து பழகு


கரை சூழ்ந்த கிழக்கெல்லாம்
கடலலை முழங்கும்
விரைந்தோடும் மீனவர்க்கு
முத்தள்ளி வழங்கும்

ஆதவன் வருகை கண்டு
அடம்பன் கொடி பூக்கும்
அயல் எல்லாம் வெற்றிலை
செல்வங்கள் சேர்க்கும்




மட்டுநகர் வாவி மகள்
மேற்கே வளைந்தோடும்
மணல் வயலில் வெள்ளாமை
செழிப்பாய் விளைந்தாடும்

செல்வமாய் குடியிருப்பில்
சேர்ந்தோங்கும் உழவு
சில்லென்ற குளங்களிலே விளையாடும் நிலவு

பாதாளத்தில் செல்லும் நாட்டின் நிலமை: பொருளாதார எழுச்சிக்கு வழியாகுமா?

வாழ்வினை கொண்டு நடாத்த முடியாமல் இன்று எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் துன்பப்பட வேண்டியுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்களின் வருமானம் போதாது. சொந்தப் பணத்தைக் கூடக் கொண்டு வாழ்க்கைப் போரில் கடைசி ஆட்டத்தை ஆடும் மக்கள், இனி வரும் காலங்களில் எப்படி சுகம் காணப்போகின்றார்கள். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் உணவு வழங்க முடியாத காரணத்தினால் விஷம் அருந்தியதாக பத்திரிகை செய்தியொன்று அண்மையில் வெளியாகியுள்ளதனைப் பார்த்தேன்.

பல நாட்களாக தனது குடும்பம் தினமும் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வருவதாக இந்த தந்தை கூறுகிறார். மேலும் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால், தனக்குத் தானே விஷம் கொடுத்து இறக்க முடிவு செய்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியின் மூலம் நமது நாடு விழுந்துள்ள பொருளாதாரக் குழியின் மிகவும் சோகமான நிலை நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த நிலை திஸ்ஸமஹாராம தந்தைக்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றார்கள் நம் நாட்டில் என்பதனையே காட்டுகின்றது.

கலைந்த பல்கலைக்கழக கனவு!

இலங்கையின் கிழக்கில்; அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தான் கார்த்திக்.  சிறு வயதிலிருந்தே கல்வியில் ஆர்வம் அதிகம். பாடசாலைப் படிப்பை முடித்ததும், உயர்கல்வி கனவுடன் கொழும்பில் உள்ள ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான்.  பல்கலைக்கழக வாழ்க்கை அவனுக்கு புதிய அனுபவங்களை வழங்கியது.  புதிய நண்பர்கள், புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள் என அவன் உலகம் விரிந்தது.

பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்ட கல்வி அவனை ஒரு புதிய மனிதனாக மாற்றியது. ஆதன் மூலம் சமூக பிரச்சனைகள் குறித்து அவனுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.  சமூக நீதிக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வளர்ந்தது.  பல்கலைக்கழகத்தில் கற்ற அறிவை சமூகத்திற்கு பங்களிக்க பயன்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டான்.

28 March 2024

புதுக்குடியிருப்பு- களுதாவளை வரையான கிராமத்தில் ATM-ஏரிஎம்மின் அவசியம்!

நாம் இன்று தொழில்நுட்ப வளர்சிபெற்ற ஒரு உலகில் வாழுகின்றோம். இந்த வகையில் பல துறை அபார வளர்சிபெற்று தத்தமது சேவைகளை பட்டிதொட்டி எங்கு விஸ்தரித்து வருகின்றது. இருப்பினும், கிராமப்புறங்களில் வங்கிச் சேவைகளை அணுகுவது எப்போதும் ஒரு சவாலாக இருந்து வருகிறது. பணம் எடுப்பது, வைப்பு செய்வது, கணக்கு நிலுவைத் தொகை சரிபார்க்கவது போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக கூட கிலோமீட்டர் கணக்கில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரம் வீணாவதுடன், போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கிறது.

பிரச்சனை

அதிக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் அரச தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் அதிகம் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள், முயற்சியாளர்கள் எனப் பலர் வாழும் எமது பிரதேசத்தில் தமது பணப்புழக்கத்தினை செய்ய நீண்ட தூரம் பிரயாணம் செய்து களுவாஞ்சிகுடிக்கே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு துவங்கி களுதாவளை வரையிலான பகுதியில் சுமார் 10,000 வங்கி வாடிக்கையாளர்கள்  ஏறத்தாள வசிக்கின்றனர். ஆனாலும் இங்கு எந்த ஒரு ஏடிஎம் வசதியும் இல்லை. இதனால், அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பல கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவாஞ்சிகுடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

23 March 2024

பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இறக்குமதி அதிகரிப்புதான்

கடந்த காலத்திலிருந்தே, நம் நாட்டு மக்கள் நம் சொந்த பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களையே அதிகம் மதித்து நுகர்கின்றனர். நிற்க, எமது நாட்டில் எவ்வளவு ருசியான, சுகாதாரமான மற்றும் நல்ல நம்பகமான உணவாக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து வந்தது என்று சொன்னால், எந்த ஒரு கேள்வி பார்வையோ தயக்கமோ இன்றி வாங்கி நுகர்வதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தோல் வெள்ளையாக இருந்தால், காய் பெரிதாக இருந்தால், பளபளப்பாக இருந்தால், ஒன்றல்ல நூறு நோய் வந்தாலும் வெளிநாட்டுப் பொருட்களை விரும்புவார்கள் நம் மக்கள். வெளிநாட்டுப் பொருட்களைப் பொறுத்தவரை, இந்த நாட்டு மக்கள் எந்தக் குப்பைக் குவியலையும் விரும்புகிறார்கள் என்பதையே நாம் பழகியிருக்கின்றோம்.

இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு வேகமாகக் குறைவதற்கு முக்கியக் காரணம், தடையற்ற இறக்குமதியாகும். இந்த நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுவதற்குப் பதிலாக பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து பொருட்களை இந்த நாட்டில் நிரப்புகிறோம். அது பற்றிய அலசல்தான் இது.

20 March 2024

நான் கிழக்கின் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அதிகாரியாக இருந்தால்!

எனது தேசத்தின் பாகுபாடற்ற சுற்றுலாத்துறையினை எத்தனையோ வகையில் வளர்த்தெடுக்க முடியும். ஆனால் அதற்கான அறிவும், திறனும் ஆற்றலும் இல்லாமையினால் அவற்றை கொண்டாட முடியவில்லை, வருவாய் ஈட்டமுடியவில்லை. ஊழலற்றவகையில் முதலீடகளை ஊக்குவித்தால் மிக பிரமாதமாக இத்துறையினை கட்டியமைக்கலாம். அதற்கான பரிந்துரைகள் இந்த கட்டுரையின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆய்வாளர் மார்கோ போலோ தனது முதல் இலங்கைப் பயணத்தில் பின்வருமாறு கூறினார். 'இலங்கை அதன் பரப்பளவில் உலகின் சிறந்த தீவு.' இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு நினைவு கூர்வோம். மார்கோ போலோ பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்தார். அவர் இங்கு வந்தபோது, இலங்கை முற்றிலும் பொருளாதார இயந்திரமாக இருந்தது. அப்போது சீன மற்றும் ரோமானிய சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் வந்திருந்தனர். 

17 March 2024

செல்போன் அடிமைத்தனத்தில் உங்கள் குழந்தைகள் சிக்கியுள்ளனரா இதோ விடுதலை!

'இன்றைய இளைஞர்களையும் மாணவர்களையும் பெரும்பான்மையாக பாதிக்கும் பிரச்சனைகளில் ஒன்று செல்போன் பழக்கம்.' செல்போன் என்பது தொடர்பு கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்லாமல், கேம்கள், சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது. இதன் காரணமாக,  அளவு கடந்த செல்போன் பழக்கம் என்ற பிரச்சனை தோன்றுகிறது.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எங்கள் தொலைபேசிகளைச் சரிபார்க்கிறோம். ஆடை இல்லாமல் இருப்பதை விட ஃபோன் இல்லாமல் இருப்பதனை நாம் இன்று நிர்வாணமாக உணர்கிறோம்;;! எங்கள் தொலைபேசிகள் மூலம் பல வசதிகளையும் மற்றும் பொழுதுபோக்குகளையும் அடைவதற்காய் இது நம் வாழ்வின் மிகவும் வசதியான விஷயங்களில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் இதுதான் கொடுங்கோன்மையின் அமைதியான வடிவமாகவும் இருக்கலாம்.

16 March 2024

நான் மட்டக்களப்பில் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால்!

நேற்றைய நிலவரப்படி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை எழுநூறு ரூபாயைத் தாண்டியது. சந்தையில் நிலவும் பெரிய வெங்காயத் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் உயிரை மட்டும் பிடிச்சிக்கொண்டு கல்வி, தொழில், வருமானம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், நல்லது கெட்டது எல்லாத்தையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் துன்பப்படும் இந்த நேரத்தில் சாதாரண உணவுப்பொருட்களைக் கூட பெறமுடியாத நிலையில் ஏங்கும் மக்களுக்கு நான் மட்டும் இந்த மண்ணில் நான் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால். 

பொருட்கள் சேவைகள் தட்டுப்பாட்டுக்கு பல தீர்வினை கொடுத்து நடைமுறைப்படுத்தியிருப்பேன்.

15 March 2024

கிராமம் மகிழ்சிகளின் சொர்கவாசல்

எத்தனை தான் வசதிகள் நகரங்களில் இருந்தாலும், இன்னொருவரை பார்ப்பதற்கும், உறவாடவும் வசதியில்லாத நரகவாழ்க்கைதான் நகர வாழ்க்கை. கனகாலம் கண்டு தம்பிய இஞ்சால வாருங்கோ, மத்தியானம் சாப்பிட்டுத்துப்போங்கோ, இளணீர் ஒன்று குடிப்பமா, எருமைப்பால் இருக்கிறது போடவா, சோளத்த முறிச்செடுங்க தம்பி அப்பப்பா எத்தனை உபசரிப்பு, விருந்தோம்பல் வினாக்கள் எம் கிராமத்து மக்களின் வெள்ளை மனங்களின் வரவேற்பில்.

மரத்துக்கு கீழ பாயை தட்டி பணிய இருக்கச் சொல்லி, செம்பில தண்ணியக்கொண்டு செய்யும் சேமம் இருக்கே! அட 5 ஸ்டார்கொட்டலிலும் கிடையாது போங்க.

13 March 2024

ஏன் இலங்கைக் கல்வியில் சீர்திருத்தங்களை இவ்வாறு செய்ய முடியாது?

  • பிள்ளைகளின் பாடசாலை பிரவேச வயதை நான்கு வயதாக குறைக்கவேண்டும்
  • 10ஆம் தரத்தில் ஜீ.இ.சி. பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.
  • ஆங்கில வழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். 
  • தேசிய பாடசாலைகள், மாகாண சபை பாடசாலைகள் என வகைப்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த நாட்டில் படிப்படியாக ஒரே வகையான பாடசாலைகளை நிறுவ வேண்டும்.

சில பாடசாலைகளில் ஆய்வகங்கள் இல்லை. நூலகங்கள் கிடையாது, விளையாட்டு மைதானங்கள் இல்லை. அதுபோக நீச்சல் குளங்கள் இல்லை. அழகியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகுப்பறைகள் கிடையாது. அறிமுகப்படுத்தப்படும் நட்பு வகுப்பறைகள் இல்லை. இன்னும் பல சுத்தமாக குடிநீர் கிடையாது, சுகாதாரமான கழிவறைகள் கிடையாது. என்னய்யா கத விடுறீங்க! 

10 March 2024

எமது பட்டிருப்புத் தொகுதி தரிசு வயல்கள்: புத்துயிர் பெறுவதற்கான அழைப்பு

ஏறக்குறய 600 ஏக்கர் வயல் நிலம் செய்கை பண்ணப்படாமல் இருக்கின்றது,

ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ நெல் விளையக்கூடிய நிலம். ஆக மொத்தத்தில் 900,000 கிலோ நெல் விளைச்சலை ஒவ்வொரு வருடமும் இழக்கின்றோம். 

அதுபோல இந்த வயல் நிலங்களில் ஒரு ஏக்கரினை செய்கை பண்ண 10 வேலையாட்கள் தேவை அப்படியானால் இக்கிராமங்களில் உள்ள 6000 வேலையாட்கள் ஒரு சீசனுக்கு உழைப்பினை இழக்கின்றனர்  இல்லையா.

எமது பிரதேசத்துக்கு வளமான விவசாய வரலாறு இருந்தபோதிலும், உணவுப் பாதுகாப்பிற்கு இலங்கை அதிகரித்து வரும் சவாலை எதிர்கொள்கிறது. இவ்வாக்கம் தரிசு நிலங்கள், கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத வளமான வயல்களின் அதிகரிப்பு பற்றி ஆராய்கிறது. குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையான பிரதேசத்தை ஒரு ஆய்வாகக் கவனத்தில் கொண்டு, புறக்கணிக்கப்பட்ட இந்தக் காணிகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் உணவு உற்பத்தி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பரந்த சாத்தியக்கூறுகளை கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. 

இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான பயிர்செய்யும் நிலங்கள் பாழடைந்து தருசு நிலமாக மாறிவருவதனைக் காணலாம். குறிப்பாக குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையுள்ள பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலம் பாழடைந்து கிடக்கின்றது.

07 March 2024

இலங்கையில் தடைகளை உடைக்கும் புதிய பெண் தொழில்முனைவோர்

உலகளவில், தொழில் துறையில் புதிய யுகம் பிறக்கிறது. இதில், பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. உலக தொழில் முனைவோர் ஆய்வுக் கண்காணிப்பு அமைப்பின் (Global Entrepreneurship Monitor - GEM) 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, உயர் வளர்ச்சி கொண்ட தொழில் முனைவோரில் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. இலங்கையிலும் பெண்கள் தொழில் முனைவோராக உருவாகும் போக்கு அதிகரித்து வருகிறதா?

01 March 2024

இலங்கை தலைவர்கள் சிறந்த அரசியல் பொருளாதார நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்

2024ம் ஆண்டு உலகளவில் தேர்தல் நடக்கும் வருடமாக அமைகிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையிலும் பல தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

2022ம் ஆண்டு தொடக்கத்தில், சுதந்திர இலங்கையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது நாடு. மிகக் குறுகிய காலகட்டத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடி தாண்டி, அரசியல் மற்றும் சமூக துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

29 February 2024

கல்லாநிதிகளின் பொல்லாத ஆசை

இன்று கல்லா நிதிகள் அவர்களை அழைப்புக்களில் போடுவதற்கும், பொது இடங்களில் அழைப்பதற்கும் மறந்துவிட்டால் அவர்களின் அளப்பறை தாங்க முடியாமல் பல நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் திக்குமுக்காடுவதைப் பார்க்கின்றோம். ஆம் இன்று உலகில் மூன்று நாடுகளில் கலாநிதிப் பட்டங்களை மிக மலிவாகப் பெறலாம். முதலாவது இந்தியா. அங்கு கலாநிதிப் பட்டங்களை வாங்க மிகக்குறைந்த ரூபாய்கள் மட்டுமே செலவழித்தால் போதும். இன்னும் ஒரு 250 ரூபாய் கொடுத்தால் கறுப்புத் துணி, பட்டமளிப்புத் தொப்பி அணிந்து, நீண்ட பிட்டு மூங்கில் போன்ற பட்டச்சுருள் உறையைப் பிடித்துக் கொண்டு பட்டமளிப்புப் படம் எடுக்கலாம் இல்லையா. 

27 February 2024

போரின் நிழல்கள்: மனதார மீள் எழுவோம்!

 2013ம் ஆண்டு கிளிநொச்சி அம்பாள்நகர் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நீண்டகால உளநல பாதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. புகைப்படத்தில், போரின் தாக்கம் அவர்களின் முகங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. அச்சம், கவலை, துயரம் போன்ற உணர்வுகள் அவர்களின் பார்வையில் தெரிகின்றன.

ஆய்வு மற்றும் மீட்பு முயற்சிகள்

போர் முடிந்த உடனே, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்திறனை ஆய்வு செய்யும் குழுவில் நான் பணியாற்றினேன். ஆய்வின் ஒரு பகுதியாக தரவு சேகரிப்புடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டோம். உதாரணமாக.

25 February 2024

மத்தியவங்கியின் சம்பள அதிகரிப்பும் ஒடுக்கப்பட்ட பொதுமக்களும்.

சம்பளம் போதாது, வாழவே பிடிக்கல, ஒரு பொருட்களையும் கிடைக்கிற சம்பளத்தில வாங்கமுடியல என எல்லோருமே அரசியல்வாதிகளைத்தவிர விரக்தியில் இருக்கின்றனர் இன்று. இந்த நேரத்தில்தான் மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரித்த சம்பள உயர்வு நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 29.53 வீதம் முதல் 79.97 வீதம் அதிக விகிதாச்சாரத்தில் மூன்று வருட ஊதிய திருத்தத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளது. 

தெரியுமா மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் மாதாந்த சம்பளம் 1.7 மில்லியனில் இருந்து அலுவலக உதவியாளர்களின் சம்பளமும் ரூ. 974,965 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு அலுவலக உதவியாளரின் மொத்த ஊதியம், ஒரு நுழைவு நிலை மருத்துவரின் ஊதியத்தை விட இப்போது உயர்ந்துள்ளது என்று அனைவரும் தெரிவிக்கின்றனர்.

22 February 2024

நெல்லைக்காட்டி விவசாயியை மறைப்பதுபோல உள்ளது இது

இன்று பரவலாக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை விவசாய அமைப்புக்களின் பிரதிநிதித்துவம் இன்றி நடாத்துவது தொடர்பில் அந்த அமைப்புக்களின் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. விவசாயி கீழே விழுந்து, கடத்தல்காரர்கள் வெளியே வர முயற்சிக்கும் காலம் இது. 

ஒரு சர்வதேச அளவிலான மாநாட்டில் இந்நாட்டின் பல விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வாய்ப்பை நிச்சயமாக வழங்கியிருக்க வேண்டும். இந்த நாட்டில் விவசாயம் பற்றி நன்கு அறிந்தவர்கள் விவசாயிகள். இந்த நாட்டை செழிப்பான பூமியாக மாற்றுவதற்கான போராட்டத்தின் முன்னணியில் நிற்பவர்களும் அவர்கள் தான். 

20 February 2024

எல்லாநேரத்திலும் மக்களை முட்டாள் ஆக்கமுடியாது


 

16 February 2024

அடேங்கப்பா: நாளொன்றுக்கு சுமார் 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக செலவிடுகின்றனர்

எமது நாட்டில் நாற்பதுகள் மற்றும் ஐம்பதுகளில் கூட, புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் மிகவும் குறைந்த உயரடுக்கு வர்க்கத்திற்கு மட்டுமே இருந்தது. அப்போது அந்த வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் புகைப்பிடிக்க குழாய் பைப்பை அதிகம் பயன்படுத்தினார்கள். அந்த அரசியல்வாதிகளில் பிரதமர்களும் அமைச்சர்களும் அடங்குவர். எந்தப் பொதுக்கூட்டத்துக்கு வந்தாலும் நெருப்பு எரியும் குழாயுடன்தான் வந்தார்கள். அவை மறைந்து சிலைகளாக மாறும்போதும் நாம் சொன்ன குழாய் அவர்களின் கைகளில் இருக்கிறது. ஆனால், பின்னாளில் அந்த குழாய் சுருட்டு, சிகரெட், பீடி என மாறி பெரும் சமூகப் பேரிடராக மாறியது. இந்நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொற்றாத நோய்களை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளில், புகைபிடித்தல் முக்கிய காரணியாக மாறியுள்ளது.

அனுபவம்


 

15 February 2024

எது முதல்தேவை


 

07 February 2024

இளைஞர்களின் அரசியல் ஈடுபாடும் இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்துக்கான தேவையும் 2024

அறிமுகம்

2022ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் (18-29 வயது) பங்கேற்கும் தேர்தல் நடக்கவிருக்கும் 2024ம் ஆண்டில், நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு புதிய மாற்றத்திற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதில், இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 72% இளைஞர்கள் அரசியல் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது 2019ம் ஆண்டில் 58ம% ஆக இருந்தது. மேலும், 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்குப் பிறகு, இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கான தேவையை அதிகமாக உணர்கின்றனர்.

04 February 2024

சுதந்திர நாட்டைக் காப்பாற்றும் அளவுக்குத் தகுதியான அரசியல்வாதிகள் நம் நாட்டில் இல்லை!

இன்றோடு 76 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சுதந்திரம் அடைந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேய ஏகாதிபத்தியங்களின் கீழ் நசுக்கப்பட்டு, சிக்கித் தவித்த இந்நாட்டு மக்களுக்கு அந்த நாளில் சுதந்திரம் மிகவும் விசித்திரமான உணர்வைத் தந்தது. 

அப்போதும் இலங்கை அரை நிலப்பிரபுத்துவ நாடாகவே இருந்தது. 1800களின் கடைசிப் பாதியில் இந்த நாட்டில் நிலவிய நிலப்பிரபுத்துவ நடைமுறைகள் 1948ஆம் ஆண்டிலும் ஏறக்குறைய நாட்டில் அப்படியே இருந்தன. 

பழைய ஏகாதிபத்திய் வியாபாரிகளின் பண பலம் அப்படியே இன்னும் இருந்தது. குடும்ப ரீதியாகவோ, பரம்பரையாகவோ இல்லாத புதுப் பணம் படைத்தவர்கள் தலை நிமிரத் தொடங்கிய அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்று நடந்தது. அதுதான் இந்த நாட்டில் வருமானப் பங்கீட்டு ஏற்றத்தாழ்வின் ஆரம்பம். 

01 February 2024

இலங்கை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி: சாத்தியக்கூறுகள்

அறிமுகம்:

இலங்கை, இயற்கை அழகு, வரலாற்று சின்னங்கள், மற்றும் வளமான கலாச்சாரம் கொண்ட ஒரு தீவு நாடாகும். சுற்றுலாத்துறை இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஆய்வுக்கட்டுரை, இலங்கை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது.

சமூக அடிப்படையிலான சுற்றுலா என்றால் என்ன?

சமூக அடிப்படையிலான சுற்றுலா என்பது, உள்ளூர் சமூகங்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு நன்மை பயக்கும் சுற்றுலா வடிவமாகும். இது உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் வாழ்க்கை முறைகளை அனுபவிக்க சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பளிக்கிறது.

29 January 2024

சாவு கிடையாது சம்பந்தன் சேர்

ஆழ்ந்த இரங்கல்களை சொல்லவா ஆங்கிலம் கற்பித்தீர்கள்!

எமது கிராத்தில் இருந்து முழு உலகத்திலும் உள்ள மாணவ மணிகளை படைத்து இன்று எமை விட்டு மீழாத் துயில்கொள்ளும்  இராசையா திருஞானசம்பந்தன்(ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்)  சேருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் முதலில்.

நான் நினைக்கின்றேன் அது 90 ஆம் ஆண்டு காலம். அப்போ அதிபயங்கரமான காலகட்டம். கல்வி என்பதே முயல்கொம்பு எங்களுக்கு. அந்த காலத்தில். அதிலும் ஆங்கிலம் கச்சி வேப்பங்காய். ஏனெனில் ஒழுங்கான ஆசிரியர்கள் அந்த நேரத்தில் கிடையவே கிடையாது. ஏதோ ஆங்கிலம் தவிர்ந்து ஐந்து பாடங்களில் சித்தியடைந்து, தத்தி தவழ்ந்து கரைசேர்ந்தாலே பெரிய விடயம் அப்போ.

15 January 2024

ஜனாதிபதிதேர்தலில் நாம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள்!

நாம் இன்று இந்த நாட்டின் அரசாங்கத்தின் தலைமையில் நம்பிக்கை இழந்து, அதில் விரக்தியுற்றுள்ளோம். இதற்காக, இன்றய சூழலில் ஒரு பெரிய அரசியல் இக்கட்டான சூழல் இல்லாவிட்டால், ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2024 க்கு இடையில் நடைபெறும். அதற்காகத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இப்போது தயாராகி வருகின்றன.

நாமல் ராஜபக்ச இப்போதே நாடுபூராகவும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள அதற்கான தெரிவுக்காக மக்களை வழிநடத்தி அதன் பின்னர் பாராளுமன்றப் தேர்தலை எதிர்கொள்ளும் தலைவர்களுக்காகவும் நாமலின் தெரிவு இடம்பெற முஸ்தீபு அமைத்து வருகின்றார். 

14 January 2024

தட்டிக்கேள்


 

சாபம் வேணாம் பாவமும் வேணாம்! அர்தமற்ற பாராளுமன்ற பதவியை துறக்கும் நிலை!

என்ன கொடுமை இந்த நாட்டின் மக்கள் என் குழந்தைகளையும் மோசமாகச் சபிக்கிறார்கள் என சமகி ஜனபலவெக்கின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சமிந்த விஜேசிறி கூறிக்கொண்டு தான் இராஜினாமா செய்வதாக தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தது நாம் அனைவரும் அறிந்ததே!. தனது மனசாட்சிக்கு இணங்க இப்படி ஒரு முடிவை எடுத்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்தான்.

இந்த நா.ம.உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இருவர் பாலர் வயதுடையவர்கள். எம்.பி., இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு வழமையாக அழைத்துச் செல்வதுண்டு. அங்கு அவர் சந்திக்கும் நபர்கள் சொல்வதைக் கேட்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். 'நான் சமூகத்தில் பலரை சந்திக்கிறேன். அவர்கள் அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதை நான் வெட்கத்தோடு கேட்கிறேன். அவர்கள் பார்லிமென்டில் உள்ள 225 எம்.பி.,க்கள் மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. 

09 January 2024

இலங்கை விவசாயமும் விலங்குகளும்: சேதமாகும் செய்பயிர்கள்

உலகின் 70 வீதமான நாடுகளில் உள்ள விவசாயிகள் தொழில்நுட்பரீதியான விவசாயத்தில் கவனம் செலுத்தி, அதற்கமைவாக செயல்படும் காலகட்டத்தில், நாம் இங்கு பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளைப் பிடித்து சீனாவுக்கு அனுப்புவது பற்றி இன்னும் பேசுகிறோம். SMART FARMING என்றால் என்ன? இந்த முறைமையின் கீழ், அந்தந்தத்துறைகள்; கணினி அல்லது ஸ்மார்ட் போனுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களை தெளிப்பதும், ட்ரோன் தொழில்நுட்பத்தின் கீழ் பூச்சிக்கொல்லி எண்ணெயைப் பயன்படுத்துவதும் ஸ்மார்ட் ஃபார்மிங்கின் செயற்பாடாகும்.

SMART FARMING முறையில், விவசாயத்திற்கு எந்த நேரத்தில் தண்ணீர் தேவை, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கம்ப்யூட்டர் விவசாயிகளுக்கு தெரிவிக்கும். இதனால் விரயம் குறைவதுடன் விவசாயிகளுக்கு நேரமும் மிச்சமாகும். இத்தகைய முறைகளின் கீழ் பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்தப் பருவத்தின் விளைச்சலை மதிப்பிடவும் முடியும். சில காலத்திற்குப் பிறகு, வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளும் இவற்றையும் தாண்டி தங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த நுட்பம் அனைத்தும் மிக விரைவானது.

08 January 2024

மக்களைப் பாதிக்காத வரியே மக்களை பாதுகாக்கும்!

இந்த நாட்களில் சமூகத்தில் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்று ரின் எண். வரி செலுத்துவோர் அடையாள எண் அல்லது டின் எண் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் ஒருமுறை அறிவித்தது.

அரசாங்கத்தின் இருப்புக்கு போதுமான வரி வருவாய் அவசியம். ஆனால் வரி வசூல் செயல்முறை குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் தேவை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரின் எண் கிடைக்கும், ஆனால் உண்மையில் அனைவராலும் வரி செலுத்த முடியாது. வரி கட்ட முடியாது இருப்பினும் இந்த டின் நம்பரை பெற வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு. 

07 January 2024

தொழில் தொடங்குவதற்கு பயத்தை எப்படி தாண்டி வருவது?

பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும்.

தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

02 January 2024

வரலாறுபடைக்கும் வரி அதிகரிப்பு பணவீக்கத்தை ஊக்குவிக்குமா?

  • இந்நாட்டில் 60.5 வீதமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
  • 91 சதவீத குடும்பங்களின் சராசரி மாதச் செலவு அதிகரித்துள்ளது.
  • 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது.
  • 97 பொருட்களுக்கு புதிய வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் வரிவருவாய் மூன்று லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. இது பாராட்டத்தக்கது. ஆனால், இடையில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு அதிகரிப்பு ஆகும்.

கலைவாணியின் கனவு

எமது பெண்களின் கண்களில் தேங்கி கனவுகளாய் நிற்கும் நினைவுகளை வெற்றிக் கனவாக்கும் ஒரு கதை!

காட்சி 1:

இடம்: ஒரு சிறிய கிராமம். காலம்: காலை.

கலைவாணி, வயது 25, தன் வீட்டின் முன்றலில் உக்கார்ந்து, சேலைகளை மடித்து வைக்கிறாள். அவள் முகத்தில் நிரம்பிவளியும் கனவுகள், கைகளில் ஆசாத்தியமான திறமை. பக்கத்தில் சேலைக் கடை வைத்திருக்கும் ஆனந்தன், கலைவாணியின் தந்தை, அவளைச் சோகமாகப் பார்க்கிறார்.

01 January 2024

புத்தாண்டில் நிகழட்டும் புதிய விடியல்

2023 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மிகவும் சவாலான ஆண்டுகளில் ஒன்றாகும். பொருளாதார நெருக்கடி, அரசியல் பதற்றம், மற்றும் சமூக ஒற்றுமையின்மை ஆகியவை நாட்டை சூழ்ந்திருந்தன. இருப்பினும், 2024 ஆம் ஆண்டு புதிய விடியலுடன் தொடங்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.

புத்தாண்டு மலர்ந்திருக்கிறது. ஓர் ஆண்டு முற்றுப்பெறுவது என்பது ஒரு முடிவோ அல்லது தொடக்கமோ அல்ல; நாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, எதிர்வரும் நாள்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை விதைப்பது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டைக் கடந்து 2024ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். முந்தைய ஆண்டின் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகப் புத்தாண்டில் நிகழவிருக்கும் தருணங்களுக்கு முகங்கொடுக்கத் தயாராவோம். 

புத்தாண்டில் நிகழ வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் பின்வருமாறு:

  • பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
  • அரசியல் பதற்றம் குறைக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சமூக ஒற்றுமை மேம்படுத்தப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.