ADS 468x60

29 May 2023

இலங்கையின் பொருளாதாரம்; பாய்மரம் உடைந்த கப்பல்

உலகில் மிகவும் துன்பகரமான நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தை அடைந்துள்ளதாக கடந்த வாரம் பேராசிரியர் ஹான்கி தெரிவித்தார். ஏப்ரல் 2022 இல் இடைநிறுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை நாங்கள் இன்னும் மீளச்செலுத்தத் தொடங்கவில்லை. இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பச் செலுத்த முடியும்; என்பது குறித்து மத்திய வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி அடுத்த வருடம் தீவிரமடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

28 May 2023

நோய்களின் வளர்பிடமாகும் இலங்கை: எதனால் நடக்கிறது

 விவசாய கலாச்சாரம் கொண்ட நாடுகளில், மழைக்காலத்தை அதிர்ஷ்டமான காலமாக மக்கள் பொதுவாக கருதுகின்றார்கள். பொதுவாக வறண்ட காலத்திற்குப் பிறகு மழைக்காலம் வரும். வறட்சிக்கு பின், மழைபொழிந்து மழைநீர் தேங்;கி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பத்தி வருகின்றோம். அந்த செழிப்பான விவசாயத்தின் மூலம் விளையும் பயிர்களின் விளைச்சல் மக்களுடைய பசியைத் தீர்த்து வைக்கின்றது.

ஆகவே மக்களின் பசியை ஒழிப்பது ஒன்றுதான் மனித வாழ்க்கையை பலப்படுத்துகிறது. அதனடிப்படையில் வலிமையான மனித வாழ்க்கை ஒரு நாட்டின் பொருளாதாரத்தை இயக்குகிறது. ஒழுங்காக நிர்வகிக்கப்படும் பொருளாதாரம் கொண்ட நாடு வளமான நாடாக மிளிர்கின்றது. 

27 May 2023

காலை நேரத்தில் சட்டத்தினை மீறி, மாலையில் சட்டத்தினை உருவாக்கும் நிலை

நாம் விளங்கிக்கொண்ட மட்டில் சட்டமன்றம் என்பது சட்டங்களை உருவாக்கவும், அதில் காலத்துக்குக் காலம் திருத்தம் மேற்கொண்டு நிறைவேற்றவும், அதற்கான விவாதங்களை மேற்கொண்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு உயரிய சபை இலங்கையின் சட்டமன்றமாகும. அங்கு மக்களின் பிரதிநிதிகள் என தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தச் சபையை அலங்கரிப்பர்;. எனவே, அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை உருவாக்குகிறார்கள், சட்டங்களை இயற்றுகிறார்கள் மற்றும் சட்டங்களை மாற்றுகிறார்கள். இவ்வாறான உயரிய இடத்தில் உள்ளவர்களில் சிலர் அவ்வப்போது விதிகளை மீறுகின்றனர். விதிகளை மீறிய சில எம்.பி.க்கள் தற்போது இலங்கையில் சட்டங்களை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் நிறைவேற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். 

24 May 2023

ChatGPT புரட்சி: உலகில் ஓர் அதிசயப் பயணம்

 இணைய உலகில் இதுவரை கண்டிராத அதிசயத்தை ChatGPT நிகழ்த்திக் காட்டுகிறது. மனிதர்களுக்கு நிகரான, சில சமயங்களில் அதை மிஞ்சியும் செயல்படும் இந்த மொழிப் படிமைப்பு (Language Model) 2022 ஆம் ஆண்டு OpenAI நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் புதுமை, வார்த்தைகளின் வண்ணமயமான உலகில் புரட்சியை ஏற்படுத்தி, நமது சிந்தனை முறையையே மாற்றி அமைக்கிறது.

ChatGPT தன்னுள் பெரும் தரவுத்தளத்தை ஒருங்கிணைத்து வைத்துள்ளது. மனிதர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள், வலைப்பதிவுகள் போன்ற கோடிக்கணக்கான தகவல்களை உள்வாங்கியுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு, நம் கேள்விகளுக்கு மட்டுமல்ல, நம் எண்ணங்களுக்கும் பதிலளிக்க முடியும். கவிதைகள் எழுதுதல், கதைகள் தீட்டுதல், மொழிபெயர்ப்பு செய்தல், நிரலாக்குதல் என ஏராளமான பணிகளை அச்சுறுத்தாக செய்யும் திறன் ChatGPT-க்கு உண்டு.

21 May 2023

இலங்கையில் தலைதூக்கும் தொற்றுநோய்களின் அபாயம்- எரியும் சிவப்பு சமிக்ஞை

இம்முறை டெங்கு அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்ற அதேவேளை, இந்நாட்டு சாதாரண பொதுமக்கள் அறியாத பல விடயங்கள் இந்தக் கட்டுரையில் பேசப்பட உள்ளதனை முதலில் குறிப்பிட வேண்டும். 

எல்லா நுளம்புகளும் கண்டபடி மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. பெண் நுளம்புகள் தங்கள் முட்டைகளை உருவாக்க மனித இரத்தத்திலிருந்து புரதத்தைப் பெற இரத்தத்தை உறிஞ்சுவதாக நாம் அறிந்துள்ளோம். ஏடிஸ் ஏஜிப்டஸ் நுளம்பு டெங்கு வைரஸை பரப்பும் கொடியவனாக செயல்படுவதாக தெரிகிறது. இந்த நுளம்பு பொதுவாக காலை 6-10 மணி முதல் மாலை 3-6 மணி வரை இரத்தத்தை உறிஞ்சும் என்று கூறப்படுகிறது, அந்த நேரங்களில் வெளியில் இருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேற்கூறிய காலங்களில் நுளம்புக்கள் அதிகமாக உள்ள வளாகங்களில் சுற்றித் திரிபவர்கள் எளிதில் நோய்வாய்ப்படும் அபாயத்துக்குட்படுவர்.

20 May 2023

பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் இலங்கை!

இன்று உலகம் 5வது தொழில் புரட்சியின் விளிம்பில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட் தொற்றுநோய் உலகை ஆக்கிரமித்த பின்னர் தொழில்துறை புரட்சியின் 4 வது கட்டம் வந்தது மற்றும் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் மாநிலங்கள் அந்த கட்டத்தை வெற்றிகரமாக முடித்தன. ஏப்ரல் 2022 இல், இலங்கை வங்குரோத்தானதாக அல்லது திவாலானதாக அறிவிக்கப்பட்டபோது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை நிறுத்தியும், தொழில்துறை புரட்சியின் 4 வது கட்டத்தை இலங்கை எதிர்கொள்ள முடியவில்லை.

தொழில் புரட்சியின் 4 வது கட்டத்தை ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மார்க்வெஸ் அறிவித்தார். ஜேர்மனியின் தொழில்துறை வளர்ச்சி தேக்கமடைந்த நிலையில், ஏஞ்சலா தொழில்துறை பல்வகைப்படுத்தல் மற்றும் தொழில்துறை நவீனமயமாக்கலை அறிமுகப்படுத்தினார். கோவிட் தொற்றுநோயால் அழிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஏஞ்சலா மார்க்வெஸின் அடிச்சுவடுகளை உலகம் பின்பற்றியது.

19 May 2023

குழந்தைகளை மொபைல் போனுக்கு அடிமையாக்கினால்! நடப்பது என்ன?

இன்று உலகம் ஒரு கிராமமாகிவிட்டது. தொழில்நுட்பம் இல்லாமல் இது நடந்தது என்று சொல்ல முடியுமா? இல்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்து பிறந்த இணையம்த்தினால் இன்று சமுகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. இன்று சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைவரும் இந்த இணையத்தைக் கையாள்கின்றனர். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்ப உலகத்திலேயே வாழ்கின்றனர்.

இணையம் மூலம் உருவாக்கப்பட்ட சமூக வலைதள வசதிகள் தற்போது குழந்தைகளின் கல்விக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, குழந்தைகளை 'சமூக ஊடகங்களில்' இருந்து விடுவிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் சமீப நாட்களாக தொடர்ந்து பதிவாகி வரும் குழந்தைகள் தொடர்பான 'சம்பவங்கள்' நேரடியாக 'சமூக ஊடகங்களின்' தாக்கத்தினை பிரதிபலிக்கத் தவறவில்லை.

08 May 2023

பிலோமினா அம்மா ஞாபகார்த்தமாக நந்தவனம் முதியோர் இல்லத்தில்


இன்று பிலோமினா அம்மா அமரத்துவம் அடைந்து 31ஆவது நாள் நினைவலையில், முதல்கட்டமாக அவருடைய ஞாபகார்த்தமாக நந்தவனம் முதியோர் இல்லத்தில் ஆதரவுக்காக் தஞ்சமடைந்திருக்கும் பெரியோர்களை கண்டு அவர்களுக்கு சிறு உதவிகளை வழங்கிவைத்தோம். 

ஒரு வீட்டை நடாத்தும் பெண்ணே நாட்டை நடாத்தும் பொறுப்பானவள்

 சர்வதேச மகளிர் தினம் இன்று. இந்த ஆண்டுக்கான கரு '"சமத்துவத்தினை தழுவிக்கொள்ளுதல்" அந்த வாக்கியத்தின் நேரடி அர்த்தத்தில், உலகம் ஒரு சமத்துவமான இடமாக இருந்தால், பெண்ணும் அவளுடைய உலகமும் சமத்துவமாக இருக்க வேண்டும். உலகில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய் ஒரு பெண். ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி, ஆறுதல், ஆரோக்கியம், வளர்சி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாது காக்கும் அடித்தளத்தை அமைக்கும் முன்னோடி அம்மா. கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றும் பொறுப்புவாய்ந்தவள் ஒரு தாய், இவர்கள் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிக்கிறார். ஆரோக்கியமான மனம் மற்றும் வலிமையான தாயைக் கொண்ட குடும்பம் இயற்கையாகவே வலிமையானது. ஆரோக்கியமான மற்றும் வலுவான குடும்பங்களைக் கொண்ட ஒரு நாடு இயற்கையாகவே ஆரோக்கியமான மற்றும் வலுவான நாடாக மாறும்.

சுகாதாரம், கல்வி மற்றும் நாட்டு மக்களின் அறிவுத்திறன் ஆகியவை ஒரு நாட்டின் வளர்ச்சியில் முதன்மையான அளவுகோல்களாகும். இந்த எல்லா காரணிகளையும் வெற்றிகரமாக அடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் அம்மாதான் அடித்தளம் அமைக்கிறார். ஒரு பெண்ணின் உலகம் அவளின் வெளிப்புற அழகால் மட்டுமல்ல, அவள் பொருளாதாரம், கல்வி, சமூகம் மற்றும் ஆரோக்கியத்துடன் வலுவூட்டப்பட்டால் கூட அழகாக இருக்கும். 

01 May 2023

திட்டமிடப்பட்ட காரியம்