ADS 468x60

31 December 2012

எல்லாம் போனதுதான் மிச்சம்


போ போ
இந்த பிறப்பில்
என்னை விட்டு
எல்லாம்
போனதுதான் மிச்சம்
உயிரை விட..

அதுவும்
இப்போ போகிறது..
நீ வீசிய
சொல் அம்பு
சொருகுண்டு

22 December 2012

இறுதி மூச்சில் வாழும் சொந்தங்களை தேடி ஒரு மனிதாபிமானப் பயணம்

இரண்டு உயிர்களை வெள்ளத்தில் காவு கொடுத்துவிட்டு ஏங்கிக் கிடந்த வேப்பவெட்டுவான் நலன்புரி நிலையத்தை நோக்கி மனிதாபிமான பயணம் ஆரம்பமானது. கன்றை இழந்த தாய்போன்று அங்கே வாடி நின்ற தாய்மாரும், சிறுவர்களும் எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொன்றாக கூறக் கேட்ட எங்களுக்கு அழுகையை விட ஆறுதல் ஒன்றும் இருக்கவில்லை.

'நாங்கள் இன்றுடன் வந்து ரெண்டு நாளாகிட்டு, உடுக்க உடுதுணியோ, படுக்க பாயோ ஒன்றுமில்லாமல் 8 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளோம். இஞ்ச 72 குடும்பம் (252பேர்) வேப்பவெட்டுவான், காரைக்காடு மற்றும் மாவடி ஓடை போன்ற ஊரில இருந்து வந்நிருக்கம், உம்மயா சந்தோசமா இருக்கு எங்கட புள்ளங்களுக்கு தேவையான பால்மா, சீனி, விஸ்கட்டு மற்றது தேயில அதோட கோதும மா, பருப்பு எல்லாம் அநாதரவா இருந்த எங்களுக்கு தந்து உதவி இருக்கிங்க நன்றி தம்பிமாரே' என்று குமாரி கனகசபை அழாக்குறையாகக் கூறினார்.

10 December 2012

மர்மம் என்ன??


08 December 2012

இலங்கைப் பட்டதாரிகள் படும் பாடு

சென்ற வருடம் கலாசார உத்தியோகத்தர் தெரிவுக்காக, கொழும்பின் சந்து பொந்துகள் எல்லாம் வந்து நிரம்பிய பட்டதாரிகள் பட்ட பாடுகள் பார்த்தேன், குழந்தையுடன் பல பெண்கள், குடுப்பத்துடன் சில பேர்கள், வலம் இடம் தெரியாமல் வந்திறங்கியோர் ஒரு தொகை, பஸ்சில் பயணம் செய்து இறங்குமிடம் துலைத்தோர் எத்தனைபேர், கண்விழித்து வந்து புண்பட்டோர் ஒரு புறம், பயணப்பை துலைத்து பரதவித்தோர், மொழி தெரியா முழிச்சவர்கள் என்று வேலை தேடி வேர்த்துப் போனவர்களை எம் திருநாட்டில் பார்த்தேன்.

03 December 2012

மட்டு மாநிலத்தின் பாரம்பரியத்தை காக்கும் வேட்கை - தீபத்திருநாள் களியாட்டம்.

 இற்றைக்கு முப்பது வருடத்துக்கு முன்பு இந்த மட்டு நகரம் இப்படியாகத்தான் கலையில் களைகட்டி இருந்தது. அதன் பிறகு காற்று மட்டும் போய்வருகின்ற வேற்று வாசிகளின் இடம்போல் ஆகிவிட்டது. இருந்தும் இன்று மெது மெதுவாக பசுமை பூண வைக்கும் நடவடிக்கையை செய்யவேண்டிய பொறுப்பு எம்மையும் சார்ந்து நிற்க்கின்றதல்லவா!. மட்டு மாநிலத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் தீபாவளித் திருநாள் பாரம்பரியத்தினை நிலைநாட்டும் கலை நிகழ்வுகளோடு தேத்தாத்தீவு திருவூரில் இனிதே நடந்தேறியது.

30 November 2012

கனவு


29 November 2012

ஏழைகளின் உழைப்பு


28 November 2012

சிரிப்பு


மழை


காதல்


25 November 2012

அங்கு அந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை!! புலிபாய்ந்த கல்லையும் தாண்டி புறப்பட்டோம்.

கூய் போட்டாலும் கேட்காத அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளுக்கிடையே அந்த இடத்தின் வழியை மறந்து தடுமாற்றத்துடன் நகர்ந்தோம் காடுவழியே, ஈரளக்குளத்தில் இருந்து குரு அண்ணாமடு வெட்டையை புடிச்சி மறுகா தரவைக்குள்ளாள கிறுகி புலிபாய்ந்த கல்லுக்குள்ளால விட்டு கிரான் சந்திய புடிச்சு ஒரு மாதிரியா வந்து சேர்தோம்...

15 November 2012

இனிக்கும் சீனி லட்டே


வஞ்சகமில்லாத மலரா மொட்டே
வானத்தில் சிறகடிக்கும் அழகு சிட்டே
கண்களைக் கவரும் காஞ்சிப் பட்டே
கதைத்தால் இனிக்கும் சீனி லட்டே
கள்ளிபோல் மனதை மெதுவாய் தொட்டே
காதலில் மனதை உன்பால் விட்டேன்...

31 October 2012

நினைக்க வேண்டுமென

அரைவாசியில் விழுங்கிய
உன்
ஞாபகத்தின் மறதியை
இப்பொழுது
வாந்தி எடுக்கிறேன்
நினைக்க வேண்டுமென.

பரதேசியாய்
இன்னும்
எத்தனை ஆண்டுகளடி-
உன்
காலடிச் சுகத்துக்காய்
காத்துக் கிடப்பது??

27 October 2012

எமது சமுக ஆர்வலர்களால் தும்பங்கேணி, திக்கோடை பகுதிகளில் புதிய சோளம் விதைகள் இலவசமாக வழங்கி வைப்பு


எமது மட்டக்களப்பின் நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் இம்மக்களின் வறுமையயை களையும் முதற்ப்படியாக இதுவரை பாவனையில் இல்லாமல் கிடந்த நிலங்களை அடையாளங் கண்டு அவற்றை பயன்மிக்கதா மாற்றி, சுமார் 100 ஏக்கர் சோளச் செய்கையாளர்களை இனங்கண்டு புதிய முறையிலான இச்செயற்த்திட்டத்தினை அறிமுகம் செய்து பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளனர். எதுவித பயனையும் எதிர்பாராமல்  இம்மக்களின் முன்னேற்றம் கருதி நல்ல இன சோளம் விதைகளை வளங்கி வைக்கும் நிகழ்வு 21.10.2012 அன்று திக்கோடை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

15 October 2012

நீயும் பொம்மைதான்


இந்த பொம்மைபோல் சிலர்
அழகாய் இருந்தாலும்
மனசி இல்லாத ஒன்றாக...
வெறும் வேசம்தான்...
கண்களை திருடி
மனசுக்குள் நுழைந்ததும்
விழிப்பின் விளிம்பில்
தொலைந்து போகும்
கனவுகளாய்...
இன்னும் எத்தனை காலங்கள்தான்
என் வாழ்க்கையோ!

11 October 2012

நான் மகான் அல்ல..


என் வீட்டில் அழகாய் இருக்கும் ரோஜாக்கள் இல்லைதான் இருந்தாலும் வெள்ளை நிற மல்லிகை இருக்கிறது அது உங்களுக்கு சூடிக்கொள்ள முடியாவிட்டாலும் அது உங்களைப் பார்த்து புன்னகை செய்ய தவறுவதும் இல்லை, பூத்துக் குலுங்க மறப்பதும் இல்லை.

மகான்கள் நடப்பதை, நடக்கப்போவதை தெழிவாகக் கணித்துச் சொல்லுவார்கள், அறிவாலும் ஆனந்தத்தாலும் உயர்வாக இருப்பார்கள், மற்றவர்கள் என்ன தேவையை மனதில் நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை குறிப்பறிந்து உதவுவார்கள். ஆனால் நான் மகான் அல்ல வெறும் தொண்டன், தொண்டனுக்கும் தொண்டன். எனக்கு தெரிந்ததெல்லாம் நா நயமும் நாணயமும் தான், என் வாழ்க்கையில் பெரியவர்கள் இருந்து சிறியவர்கள் முதல் ஏமாற்றப்பட்டுள்ளேன் ஏன் என்றால் நான் மகான் அல்ல. ஆனால் இது வரை எனக்கு தெரிந்த வகையில் யாரையும் ஏமாற்றியதில்லை, ஆனால் என்வாழ்வில் நன்றியுடையவனாக இருக்க வேண்டும் என்று அதிகமாக ஆண்டவனிடம்தான் கேட்கிறேன் ஏன் என்றால் நான் மகான் அல்ல.

எனக்கு எதையும் தாங்கும் மனம் இல்லை, அதை வளர்த்துக்கொள்ள நான் முயற்சி செய்தும் தோற்றுப்போகிறேன் ஏனெனில் நான் மகான் அல்ல. மக்களோடு மக்களாக மக்களின் தொண்டனாக வாழ்ந்து போவதுதான்;; எனது சிறிய ஒரு நோக்கம்.  நான் யாரையும் தட்டிக்கழித்ததும் கிடையாது வெட்டி அழித்ததும் கிடையாது, என் வாழ்வில் உள்ள பெரிய பயம் நான் யாரை முழுசாய் நேசிக்கிறேனோ அவர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள் ஏனெனில் நான் மகான் அல்ல........

06 October 2012

சோளச் செய்கையில் மட்டக்களப்பில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள்


இன்று மட்டக்களப்புக்கு வருவாய் தேடித்தருகின்ற பிரதானமான இரண்டு மார்க்கங்கள் காணப்படுகின்றன. ஓன்று விவசாயத்துறை மற்றது மீன்பிடித்துறை. அதில் குறிப்பாக சுமார் 58,374 கெக்டேயர் நிலப்பரப்பினில் சுமார் 300,000 விவசாயக் குடும்பங்கள் நெற்செய்கையில் இரு போகத்திலும் ஈடுபடுகின்றனர், அதேபோல சுமார் 49,339 கெக்டேயர் மேட்டுநிலத்தில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையிலும் சேனைப்பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு வெண்காயம், பச்சை மிளகாய், கத்தரி, வெற்றிலை அதுபோல் சோளம், கச்சான், கவுப்பி மற்றும் இதர பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்ற ஒரு வளமிகு மாவட்டமாகும்..


மட்டக்களப்பு மாவட்டம் மற்றவரை வசீகரிப்பதற்கும், பொறாமை கொள்ள வைப்பதற்க்கும் காரணம் கொட்டிக்கிடக்கும் அளவில்லா வளமும், கொள்ளை கொள்ளும் வாவிகளின் அழகும்தான்.

29 September 2012

சில்லிக்கொடியாற்றில் ஒரு கல்விச்சுடர்..


புள்ளங்கள படிப்பிச்சு ஆளாக்கணும்இ இந்த பக்கத்தில நாங்களெல்லாம் மாட உளச்சி உளச்சி தேஞ்சி போனதுதான் மிச்சம். என்ட புள்ளங்களாச்சும் படிப்பிச்சு இஞ்சால பக்கத்து சனங்கள நல்லா படிப்பிக்க வைக்கணும். நாங்க பட்ட துன்பம் எங்களோட போகட்டும் இந்தக் குஞ்சுகளயாச்சும் உருப்படியாக்கணும்' என்று தம்பிராச தனது நிலைபற்றி பேசினார்.

சில்லிக்கொடியாறு கொக்கட்டிச்சோலைக்கு தெற்கே இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு விவசாயக் கிராமமாகும். அங்கு 5 குழந்தைகளுடன் வாழ்து வரும் இவர் தங்களது வாழ்வாதாரமாக வயற்செய்கைஇ பசு வளர்த்தல் என்பனவற்றை செய்து வருகின்றனர். மூத்த பெண் திருமணம் செய்து விட்டார். ஏனைய அனைவரும் கல்வி கற்று வருகின்றனர்.

26 September 2012

மட்/பண்டாரியா அ த க பாடசாலைக்கு சீருடை உதவி


Image may contain: 19 people, people standingயுகங்கள் பல கடந்து மனிதன் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறான். விவசாய யுகம் (Green era), கைத்தொழில் யுகம் (Blue era), அறிவு யுகம் (Knowledge era) என காலம் கடந்தே போய்விட்டது. கல்வியை வறுமை பாதித்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.

25 September 2012

இனியும் வேண்டாம் பிரிவு












சண்டைபோட்டே நம் உயிர்களை இழந்தோம்
சண்டைபோட்டே நம் உறவினைப் பிரிந்தோம்
சண்டைபோட்டே நாம் பகைவர்கள் ஆனோம்
சண்டைபோட்டே நாம் சிறைகளில் அடைந்தோம்
சண்டைபோட்டே நாம் வறியவர் ஆனோம்
சண்டைபோட்டே நாம் சிறியவர் ஆனோம்
இனியும் வேண்டாம் ஆயிரம் பிரிவு- இதனால்
ஆகுமோ தமிழரின் விடிவு--

19 September 2012

நம்மி நம்பி பின்னால் நடந்தோம்


வாழ்க்கைச் சுமையாலே வாடினோம்- சுடும்
வேட்டுச் சுமையாலே ஓடினோம்
துன்பச் சுமையாலே இடிந்தோம்- தூக்க
தோழ்கள் இல்லாமலே மடிந்தோம்

நம்மி நம்பி பின்னால் நடந்தோம்- பின்னர்
நட்டாற்றில் வேறின்றிக் கிடந்தோம்
வெம்பி வெம்பி நெஞ்சு வேகுது- சுமை
வந்து நிரம்பி வழியின்றி போகுது..

04 September 2012

சொர்க்கமே இங்கு கிடைத்ததோ


சிரிப்பு அது நீ படைத்ததோ
சொர்க்கமே இங்கு கிடைத்ததோ
உலகம் என் கண்ணை அடைத்ததோ
பழகும் உன்னால் மாயை உடைத்ததோ
எல்லாம் அடைக்கலம்
உன் வாய் மலர்ச் சிரிப்பில்.......

28 August 2012

மனிதன் ஏன் மரமானான்


கடினமாய் உழைப்பவன் கொள்ளைக்காரன் -அதை
களவாய் எடுப்பவன் வெள்ளைக்காரன்
தனக்கென குவிப்பவன் வள்ளலாவான்-உலகில்
பிறர்க்கென வாழ்பவன் பிச்சைக்காரன்...

மனம் விட்டு பேசுபவன் மடையனடா-அதை
மறைத்தே பூசுபவன் கெட்டிக்காரன்
தினம் தினம் அழுபவன் ஏமாளி-இங்கு
திருடனாய் வாழுபவன் கோமாளி

ஏன் இறைவா காலம் தாழ்துகிறாய்??


இந்த நாட்களும் நகர்ந்து விடுகிறது
எல்லோரது விடுப்புக்களுடனும்
பதில்கள் இல்லாத கேள்விகளுடன் மட்டும்,
பழசாய் போகும் நானும்
என்னையும் என் பிறப்பையும்
பரிகசித்துக்கொண்டு இருக்கும் என்
இறப்புக்கு மட்டும் ஏன் இறைவா
காலம் தாழ்துகிறாய்???

புன்னகைச் சொரியல் ,,

ன்னையும் புதிதாக்கும் 
இந்தப் புன்னகை
பொன்னையும் பொருளையும் இந்த
மண்ணையும் போ என்றது...
என்னே அதிசயம்

என் இறுமாப்புகள் 
இறுக்கங்கள் கூட-இந்த 
புன்னகைச் சொரியலில்
மறைந்து போனது.

கண்களின் நீரும் அர்ச்சனையாகும்


ஆசையில் கைகள்
அணைத்திடும்போது
கண்களின் நீரும் 
அர்ச்சனையாகும்
பேசிடும் வார்த்தை ஆறுதலானால் 
தூசிகளாகும் வேதனை யாவும்.

15 August 2012

நல்ல செயற்ப்பாடுகளை செய்யத்தொடங்கினால் தீய சிந்தனைக்கு இடமிருக்காது

Image may contain: outdoor and natureஎத்தனையோ விதமான வளர்ச்சிகள் முன்னெடுத்துச் செல்லவேண்டி இருக்கிறகு இன்னும் எமது மட்டு மாநிலத்தில்! இன்று உலகத்தில் சனத்தொகை அதிகரித்துவிட்டது, அதனால் நிலம் குறுகி ஜீவராசிகளுக்குகூட மேய்ச்சல் தரை இல்லாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலுக்கான நியாயமான விலை தளர்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பன காரணமாக பசுக்களைக்கூட விற்று தங்கள் புளைப்பை நடத்தவேண்டியவர்களாக மாறிவிட்டனர் மட்டக்களப்பு வாள் விவசாயிகள். 

11 August 2012

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார்? எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்


நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தல் வரலாற்று முக்கியம்வாய்ந்த போட்டி நிறைந்த ஒன்றாக இருப்பதனால்தான் கிழக்கின் அடுத்த முதல்வர் யார் என்கின்ற பெரிய கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அதிகாரங்கள் பரவலாக்கப்படும் நடை முறை இருந்து வந்தது. இதன் மூலம் அதிகாரங்கள், பொருளாதாரம், மற்றும் வளங்கள் நாட்டின் எல்லா எல்லைகளிலும் சமமாகக் கிடைக்கப் பெற 1978 ஆம் ஆண்டு யாப்பின் 13ம் இலக்கச் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை முறை சட்டபூர்வமாகக் கொண்டு வரப்பட்டது.. இலங்கையில் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் மாகாண சபைகளின் பின்னணி என்ன? அவற்றில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், அவை செயலற்று இருந்தமை, அதன்பின் நடத்தப்பட்ட தேர்தல்கள் மற்றும் இவற்றில் கிழக்கிலங்கையில் தமிழர்களின் நிலைத்து நிற்ப்பதற்க்கான தந்திரோபாய நகர்வுகள் என்பன பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

02 August 2012

அவுஸ்திரேலிய கனவில்..


ஆசை இன்று மனிதனை ஆட்டுது
ஆளம் அறிந்தா காலை நீ விட்டது
காசை உயிரை பணயமாய் இட்டது
காரியம் ஒன்றுமே இல்லாது வாட்டுது

பேரலை மீதொரு படகினை ஓட்டி
பேரெடுப்பேன் என்று ஊருக்கு காட்டி
பேதைபோல் பாதையில் இடையினில் மாட்டி
 பட்டதெல்லாம் துன்பம் மொத்தமாய் கூட்டி.

31 July 2012

குறுக்கு வெட்டிப்பார்


ஸ்ருபிட் பொறுக்கி நோன்சன்
ராஸ்கல்
உனக்கு என்னடா செய்தன்??

மனம் வைத்து பழகியதை
மாற்றி காட்டுகிறயே டா...
பிணம்போல் உன்
பின்னே வந்தது பிழையா???

24 July 2012

பாலன் பிறந்த வேளை மகிழ்ச்சி பிறந்தது மட்டக்களப்பில்

'குழந்தைகளுக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் உதவியாகும், இந்த மழை பொழுதிலும், பசியாலும், கொடிய வெள்ளத்திலும் இடம்பெயர்ந்து வாடும் இந்த குழந்தைகள் எப்படி இந்த கிறிஸ்த்மசை கொண்டாடுவது என்று எண்ணி இருந்திருப்பார்கள்! இவர்களை தேடி வந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்த இத்தனை ஏற்ப்பாடுகளையும் செய்த இந்த குழுமத்தினரை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்' என்று மகிழ்ச்சியோடு பாஸ்ட்டர் ஐசையா தனது ஆசீர்வாதச் செய்தியோடும் இந்த விழாவினை ஆராதனையுடனும் ஆரம்பித்து வைத்தார்.

17 July 2012

நொந்த நீயும் சொந்தமாவாய்....


உனக்கீடு உண்டோ அழகு
செம்மண்ணும் பசும் புல்லும்
சிலு சிலுக்கும் நீரோடையும்
கனிச் சாரலும் களிக்கீறலும்
வயற்கீற்றும் வாய்க்கால்களும்
உரசி இம்மண் பட்டு நடக்காத கால்கள்
என்னடா கால்கள்....

உனக்கீடு உண்டோ அழகு...
கெழுத்தி கோர்வையும் கீரைக் கட்டும்
பழுக்கப்போட்ட மாங்காச் சாக்கும்
கிண்ண்காயும் பனம் பாணியும்
திராய்ச் சுண்டலுடன் விரால் மீனும்
உண்டு மகிழ கோடி இருக்கும்...
மட்டு மாநிலம் வந்து பாருடா...
நொந்த நீயும் சொந்தமாவாய்....

08 July 2012

இருட்டினில் தொங்குகிறாய்


திரும்பிப் பார்!!!; 
உலகம் உன்னை விட்டு
எங்கோ போயிற்று...
நீ....
தாய் மொழியை மடியில் கட்டி
சாதித்தது என்னவோ!!!
அரச தொழிலை நம்பியே- உனக்கு
அரை வயசு போயிற்று...

மாதங்கள் மலையேறி
நாட்கள் நடைகட்டி
மணித்தியாலம் மறைந்துபோய்
நிமிடங்கள் நிலையில்லாது
கணப்பொழுதில் உலகை அறியும் 
கணணி உலகமடா

ஆனால்....
நீ இன்னும் இன்னும்...
வருடங்களை கையில் பிடித்து
இருட்டினில் தொங்குகிறாய்...

குருகுலக் கல்விக்குள்
ஊறிக் கிடந்தால்
உலகை மட்டும் அல்ல
உன்னைக் கூட வெல்லமாட்டாய்

தமிழன் உனக்கு என்ன செய்தான்

கானகத்தை நிலத்தை காற்றுவீசும்
வானகத்தை அசுத்தம் செய்த மனிதன்
நன்றி கெட்டு நடந்தான்- ஆதலால்
வான மழை பொச்சுப்போய்
வயிற்றுப் பிளைப்பு கெட்டுப்போச்சு
பட்டினிச் சாவும் இயற்க்கை
கெட்டு உயிர் அனர்த்தமும்
விட்டு வைத்ததா உன்னை!!!

மனிதன் கிரகங்களை அச்சுறுத்த
கிரகங்கள் மனிதனை வதைக்கிறது
இருந்தும்,,
தவிச்ச வாய்க்கு –தண்ணி
தரமறுக்கும் பூமித்தாயே
தன்னை போன்றே பிறந்த
மண்ணை பூசிக்கும் - தமிழன்
உனக்கு என்ன செய்தான்???

16 June 2012

மரம் பேசுகிறது...



நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு

படுக்க கட்டில்
விரிக்க பாய்
உடுக்க துணி
உண்ண உணவு
வீட்டுக்கு வளை
விருந்துக்கு இலை

நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு

பாட்டுக்கு குழல்
பசித்தால் பழம்
ஆடக் காவடி
அடைக்க கதவு
கொதிக்க கொள்ளி
கொப்பளிக்க பன்னீர்

நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு

18 May 2012

வானம் பார்த்த பூமி


நடு விரல் சுழுக்கு போல்
மேலும் ஆசையாக
உன் பார்வையும் இதயத்தில்
இன்னும் வேண்டும் என்ற...
ஏக்கத்தில்....

நானும்,
வானம் பார்த்த பூமியாக,
பிம்பங்களில் மட்டும்,
தோன்றி மறையும் -உன்னை,

கனவுகளின் வெக்கையில்
காய்ந்து கிடக்கும் -என்
இதயத்துக்கு- உன்
கடைக்கண் பார்வையும் கடும் மழைதான்....

13 May 2012

ஏய் நிலவே


தூரப் பார்க்கிறேன்- அந்த
நிலாவின் அழகை
ரசிப்பதற்க்காக மட்டும்தானா! என்று
ஆச்சரியத்துடன்!!

உருவம் இல்லாத- என்
உள்ளம் சொன்னது!
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம் என்று.

அந்த நிலவுக்கு
வழிகள் தேவையில்லை
விழிகள் மட்டும் போதும்.
சாந்தமான பூமி
குளிர்ந்த முகம்
இதமான காற்றின் அரவணைப்புடன்
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம். என்று...

ஓ அந்த நிலா...
என் பக்கம் வருமா!!




12 May 2012

மட்டக்களப்பில் பிள்ளைகளை பெற்றோர்கள் சுமையாக நினைக்கின்ற நிலை

'எம்  எதிர்காலம் கல்வியின் எதிர்காலத்தினைப் பொறுத்தே அமையும்' என நாம் அடிக்கடி சொல்லி வருகின்றோம்;. இந்நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தினை இட்டு பெருமையடைகிறார்கள், இருந்தபோதும் எம்மக்கள் கல்வியறிவின்மையால் ஆண்டுதோறும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது பெரும்பாலும் புரிவதில்லை. காலம் செய்த கோலத்தால், குறிப்பாக தமிழ் இனம் கல்வியை துலைத்து விட்ட நிலையில் இன்று சமுக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மிகப் பின்னடைந்து இருக்கின்றமை வேதனையே. இருப்பினும் இன்று படிப் படியாக இவற்றை உணரத் தொடங்கி இருக்கும் எமது உறவுகள் கை கொடுக்க தொடங்கியிருப்பது வரவேற்க்கத்தக்கதே! 

19 April 2012

எந்தன் தேசத்தின் புகழ்

தேன் கதலி வருக்கன்
மா இளநீர் பெருகி
வான் பிளந்து மழை பொழிய
வயல் நிலங்கள் செழிக்கும்
நான் பிறந்த மட்டு மாநில
நல்ல தமிழ் நாடே


முந்திரிகை கொழித்து மணம்
மூக்கினுள் வந்து மோத

பந்தி வைத்து பசியாற்றும்
பண்புடைய தேன் நாடே
செந்தமிழில் முந்தி இருக்கும் திருநாடே
நீ வாழி வாழியவே....

11 April 2012

பிறந்த நிலமே மறந்து விடுமா!!


புதிய வானம் புதிய பூமி
என்னை அழைக்கிறதே!
இளமைக் கோலம் வசந்த காலம்
கண்ணில் தெரிகிறதே!
மட்டக்களப்பே! மட்டக்களப்பே!
தேன்சிந்தும் பூமி நீதானே
பிறந்த நிலமே மறந்து விடுமா
எனை ஈன்ற சாமி நீதானே

ஆற்றங்கரையும் அசையும் இலையும்
என்னைச் சுகம் கேட்குதே
காற்று வெளியும் கடலின் ஒலியும்
என்னைக் கண்டு துள்ளுதே

ஒரு அன்னையைப் போல்
சிறு பிள்ளையைப் போல் - மண்ணில்
பாசம் உன்டாகுதே
ஒரு பறவையைப் போல்
இரு சிறகினுக்குள் - என்னில்
நேசம் கொண்டாடுதே

சொந்த மண்ணில் சோகம் நேர்ந்தால்
கைகள் கொடுத்திடுவோம்
வந்தோர் எல்லாம் வாழ வைத்த
சொர்க்கம் காத்திடுவோம்

26 February 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்...

மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்க்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவான இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்ப்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும், இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் '"பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்' எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் செல்ல இதனை வரைகிறேன்.

06 February 2012

"புதிர் உண்ணுதல்" பாரம்பரியத்தின் சுவாரசியம்தான் என்ன?

தமிழர்களின் வாழ்வு; பொருளாதாரம், அரசியல், சமயம் மறறும் கலாசாரம் என்பனவற்றுடன் ஒன்றொடொன்று பிரிந்துவிடாமல் பிணைந்திருப்பது அதன் வரலாற்று முதிர்சியை புடம்போட்டுக் காட்டுதுங்க..

இன்று தைப்பூச திருநாளுங்க...உன்மையில் நம்ம தமிழர் பண்பாடு மற்றய இனத்தினரையும் விரும்பவைக்கும் வகையில் அதில காணப்படுகின்ற பண்பாடு,  நாகரிகம் மற்றும் ஒழுக்க விழிமியங்கள் சிறப்பாக அமைந்திருக்கு..

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

01 January 2012

இறந்த காலக் காயங்கள், எதிர்கால மாயங்கள் பற்றி சிந்தித்து கையில் இருக்கும் தங்கக் தருணங்களை தவற விடாதீர்கள்'

'கடந்த காலத்தில் எந்தச் சாதனையும் நிகழ்த்தப்படவில்லை நிகழ்ந்ததெல்லாம் இந்த விநாடியில்தான். வருங்காலத்தில் எதுவும் நிகழப்போவதில்லை. நிகழ்வதெல்லாம் இந்த விநாடியில்தான்!' என்கிறார் எக்ஹர்ட் டோல்.  பல பேர் நாம் சென்றவற்றை நினைத்தே இருக்கின்ற விநாடியை, சந்தோசத்தினை நான் உட்ப்பட இழந்து விடுகிறோம் அல்லவா!. என எக்ஹர்ட் டோல் குறிப்பிடுவதனை அவர் அவரது “The Power of Now”  எனும் நூலில் குறிப்பிடும் விடயத்தினை புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நமது வாழ்க்கைக்கு பொருத்தி பார்க்கவே  இந்த கட்டுரையை எழுதுகிறேன். 

'தோல்வி என்று எதைச் சொல்வீர்கள்? எதிராளியுடன் போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியாத புள்ளி, தோல்வி. ஆந்த விநாடியில் அதை நாம் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? வேற்றிக்காகத்தான் திட்டமிடுகிறோம், போராடுகிறோம். ஆனால் அதையும் மீறி நம் கணக்கு தப்பும்போது எதுவாயினும் எதிர்கொள்வதுதானே சமயோகித நிதர்சனம்! தோல்விகளிடம் மட்டுமே நாம் சரணாகதி அடையத் தேவையில்லை. வெற்றி, வேதனை, சாதனை, சோதனை போன்ற அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாம் சரணாகதி அடையப் பழக வேண்டும். என்கிறார் எக்ஹர்ட் டோல்.