ADS 468x60

28 December 2022

'நாம் என்ன இந்த நாட்டுக்கு செய்தோம்' என்பதே இன்று நமக்குள்ள கேள்வி

பல மாதங்களாக இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதனைப் பார்க்கின்றோம். ஆனால் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான செயல்முறை குறித்து அர்த்தமுள்ள உரையாடல்கள் நடைபெறுகின்றனவா என்பது ஒரு கேள்வி. கடந்த காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நம் நாட்டை உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் செல்ல வேண்டிய திசையைப் பற்றிய சரியான மதிப்பீட்டை அடைவதே இன்று எம் முன் உள்ள தேவையாகும்.

இந்த புதிய யோசனைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். உழைக்கும் மக்கள், உழைக்காதவர்களை இயன்றவரை உழைக்கத் தூண்ட வேண்டும். இந்த ஊக்கத்தை அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் செய்ததெல்லாம் வேலை செய்யாத மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுதான். அரசியல் சித்தாந்தத்துக்காகப் பல நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் மக்களுக்கு இலவசங்களை வழங்க அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

22 December 2022

பொது மக்கள் ஒருபோதும் தேர்தலைக் கோரவில்லை!

இன்று பல பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தவண்ணமுள்ளன. 2023ல் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்க்கை எளிதாகுமா? ஐஎம்எப் கடன் தொகை கிடைக்குமா? மின்சாரம் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுமா? இது போன்ற பல பிரச்சனைகள் பொது சமூகத்தில் இருப்பது போல் தெரிகிறது. தற்போது மின்சார நெருக்கடி பற்றி பேசப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்கள் வேகமாக வறண்டு கிடப்பது இதனை பாதிக்கும் முக்கிய காரணிகள் என பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சார விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமையை நாம் பாதுகாக்கத் தவறினால், நாம் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மின்சாரம் இல்லாதபோது பொருளாதாரமும் அதோகெதியாகி பாதிக்கப்பட்டுவிடும்.

16 December 2022

நாம் நெல் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட என்ன செய்யலாம்?

நம்மில் பலர் உணவு நெருக்கடி மற்றும் உணவுப்பாதுகாப்பு பற்றி கரிசனைகொள்ள ஆரம்பித்துள்ளோம். ஆதில் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் உணவுப்பொருள் அரிசியாகும். அதில் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது பற்றி இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

நமது நெல் அறுவடை, அரிசி நுகர்வு, விலை நி
ர்ணயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, மூன்று முக்கிய காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. 

முதலில் நெல் அறுவடையில் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இரண்டாவதாக, நெற்செய்கையாளருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அரிசியினுடைய சந்தையை கையாள வேண்டும். 

மூன்றாவதாக, அரிசியை நியாய விலையில் பெற நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

15 December 2022

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையின் வேகமான வளர்சியால் நாடு இன்னொரு ஆபத்தில் சிக்கியுள்ளது.

இன்று நம் எல்லோருக்கும் தெரிந்த நாட்டின் முக்கியப் பிரச்சினை பொருளாதாரத்தின் வீழ்ச்சி என்றாலும், அதே நேரத்தில் தீர்க்கப்பட வேண்டிய மற்றொரு பிரச்சினை இன்று உள்ளது. அதுதான் இன்று பாடசாலை மாணவர்கள் உட்பட இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு வேகமாக அடிமையாகி வருவது.

நாம் கடின உழைப்பால் பொருளாதாரத்தை மீட்டெடுத்தாலும், போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து இளம் தலைமுறையை காப்பாற்றவில்லை என்றால், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க யாரும் இருக்க மாட்டார்கள். 

12 December 2022

போதைப்பொருள் வலையில் சிறியமீன்களை மட்டுமல்லாது சுறாக்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நமது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பிரித்தானியர்களுக்குப் பிறகு நாட்டை ஆண்டவர்களே இதற்குக் காரணம். இவர்கள் மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள். இதன் விளைவாக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் நம் நாட்டிற்கு பரிசாக கிடைத்துள்ளனர். இந்நிலை மேலும் வளர்ச்சியடைந்தால் நாளை நமது நாடு மேலும் வீழ்ச்சியடையும். இப்போதும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து காப்பாற்ற அறிவார்ந்த மற்றும் விழிப்புணர்வுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

03 December 2022

பிரச்சனைகளின் வேர்களுக்கு கீழே: இலங்கையின் நெருக்கடிக்கு தேர்தலைத் தாண்டிய தீர்வுகள்

இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடியால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சிலர், தேர்தலில் வெற்றிபெறும் கட்சி இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் என்று நம்புகிறார்கள். அவர்கள், தேர்தல் மூலம் புதிய அரசாங்கத்தை அமைத்து, அதை நல்ல முறையில் நிர்வகித்தால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீரடையும் என்று கருதுகின்றனர்.