ADS 468x60

24 February 2010

நவரச நாயகன்..

மட்டு நகரின் தெற்கே கடல் வளமும், நிலவளமும் கொழிக்கும் தேனூர் என்றழைக்கப்படும் தேத்தாத்தீவில் கலையருவி பாய்ந்தோடுவது சிறப்பு. கலாலயா கலைக்களகம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முதல் இவர்கள் தான் எங்கள் கீரோக்கள், நடிகர் திலகங்கள் எல்லாமே. சடங்கு, திருவிழா மற்றும் வருடப்பிறப்புகள் என்று வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டமுங்க...இவர்கள் நாடகத்தின் நாடிபிடித்தவர்கள், வில்லிசையில் நாண் பிடித்தவர்கள். நவரசம் பொங்க இவற்றை படைத்த படைப்பாளிகளில் கந்தையா -நவரட்ணம் ஒரு பெரிய முன்னோடி..பெயர்பெற்ற இந்த கலைக்களகத்தின் மூத்த கலைஞரான நரன் என்று செல்லமாக அழைக்கப்படம் நாராயணம் அவர்களின் வயிறு குலுங்க வைக்கும் பாடலை எங்கள் கொம்புச்சந்தி கலையகம் படைத்து உங்களுக்கு சமர்ப்பிக்கிறது... இனி வருங்காலங்களில் ஆக்கபூர்வமான படைப்புகளை தர உங்கள் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம்.

21 February 2010

இனியும் வேண்டாம்!

யார் இந்த
முள்ளில் கரம் பற்றும்
அல்லி மொட்டு!
கம்பிக் கூட்டுக்குள்
வெம்பி நிற்கும்
சின்னக் குயிலின்
பறவை விடு தூது இது...


ஏய் காக்கயே
உனக்கு தெரியுமா
என் அம்மா இருகுமிடம்
வட்டர் தருகிறேன்
வாய்திறந்து சொல்வாயா!


பச்சைக் கிளியே
பார்காமல் போகிறியே
பல இடம் சுத்துகிறாய்,
என் தம்பியை கண்டாயா?
தனியாக நிக்கிறேனே!..


வண்ணாத்து பூச்சே
வழியில் செல்கிறாய்
என் அப்பாவை கண்டாயா
நான் அவரிடம் போகனுமே!


நீங்களெல்லாம்
கனியும் தேனும் உண்டு
காட்டில் கூடுகட்டி
பாட்டுப் படித்து வாழ்கிறீர்
குஞ்சை ஈந்து
குடும்பமாய் இரக்கிறீர்...


என்னையும் உங்களிடம்
கொண்டு செல்வீர்களா!
இந்த மனிதம் செத்த
நாட்டுக்குள்
மறுபடியும் வாழும்
துரதிஸ்டம்
இனியும் என்கு வேண்டாம்..

20 February 2010

தேத்தாத்தீவு அழகான களரியம்மா!

தேத்தாத்தீவு என்றாலே கலை, கல்வி நம்ம பண்பாடு எல்லாமே ஞாபகம் வரும் அல்லவா. உன்மையில் "என்னதான் என்றாலும் நம்மூரு போலவருமா!" என்றதுக்கு சான்றாக இந்த பாடல் அமைந்துள்ளது.                                                                            கிராமிய வாசனை நுகர உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம், நீங்கள் நம்ம ஊரில இருக்கிறதா உணரவேண்டுமா இதைப்பாருங்க! இதை யாழ், இசைத்துறை இளமானி த.வாகீசன் அழகாகப் பாடித்தர நம்ம கொம்புச்சந்தி கலையகம் தயாரித்து பெருமையுடன் இதனை வெளியிடுகின்றனர்....                

">

வறுமை

பாவையர்  உடையில்  வறுமை
பள்ளியில்  கல்வி  வறுமை
படித்தோருக்கு வேலை வறுமை
பாதீட்டில்  மீதி வறுமை

மங்கையர்க்கு   மாப்பிள்ளை வறுமை
மாதமெல்லாம்  மழை வறுமை
அரசியலில்   ஒதுக்கீடு வறுமை
ஆட்சியில்  செங்கோல் வறுமை


விண்வெளியில்  காத்து வறுமை
     வித்திட்டால்  விளைச்சல் வறுமை
          பாலையில்  நீர் வறுமை
                பசித்தோருக்கு   உணவு வறுமை

புத்தர்க்கு  பற்று  வறுமை
கர்த்தருக்கு  இன்பம் வறுமை
தூய்மையான  நட்பு வறுமை
தாய்மையான   அன்பு வறுமை

காதலில்  வெற்றி வறுமை
சாதலில்  துணிவு வறுமை
நாட்டிலே  விருத்தி வறுமை
பாட்டிலே  பொருள் வறுமை
உள்ளத்தில்  நிம்மதி வறுமை
உதட்டில்  உண்மை வறுமை
உலகில்  அமைதி வறுமை
ஊரெல்லாம்  ஒற்றுமை வறுமை

வறுமை  வறுமை  வறுமை
வறுமை இன்றேல்  வளர்ச்சி  உண்டு
வளர்ச்சி  உண்டேல்  புகழ்ச்சி  உண்டு
புகழ்ச்சி  பெருக  உருகும்  வறுமை …

சிரட்டை திராசு










ஞாபகம் வருதா- அந்த
சாம்பல்  குளைத்த அப்பம்

சிரட்டை  பானை
செம்பருத்தம் பூ எண்ணை
மண்ணில் ஆக்கிய சோறு
மணலில் கட்டிய வீடு
பூமுத்தன்காய் கறி
கடதாசியில் வெட்டிய காசி
சிரட்டையில் செய்த திராசு
சில்லறைக்கு கிழவலங்கட்டி
ஆமணக்கங் காய் பம்பரம்
அல்லித்தண்டில் தன்னிக்குழாய்
கோமணம் கட்டி குளிக்கிறது
கோடைகாலத்து கச்சான் காத்து
கெட்டபோளில் குருவி அடிக்க
கிரவல் கல் பொறுக்கிறது
உத்திக்கம்பு விளையாடி
பாட்டம் அடிப்பது
மாங்காய் களவெடுத்து
மண்ணுக்குள் தாட்டு வைப்பது
குண்டடித்து பள்ளிக்குள்ள
கம்படி வேண்டுவது
இன்னும் நிறைய வந்திச்சி
இந்த சில்லறை கடையை
பார்க்கும்போது.................

18 February 2010

பாலமுருகன் பாமாலை

மட்டு நகருக்கு தெற்கே, தேத்தாத்தீலவு பால் மணலில் வீறறிருந்து தன்னை நாடி வருகின்ற அடியவர்கு நல்லருளினை வாரி வழங்கி வரும் பாலமுருகன் மீது காதல் கொள்ளாதவர் யாருமே இல்லை ஐயா! எமது முருகனைப்பற்றி கொம்புச் சந்தி கலையகத்தில் இருந்து அன்பர் இரா கதிரவேற்பிள்ளை பாடியிருக்கும் பாடலுக்கு பின்னால் பால் மணல்மேட்டின் அழகு விரிந்து கிடப்பதையும் பாருங்கள்.......">

17 February 2010

தலை குனியும் சங்கக்காதல்



இவன்  உயிர் இறந்து விட்டது
அவள் ஏத்திய
 மாய ஒளியில் வீழ்ந்து!!!!!
கள்ளம் இல்லையடி
இவன்  நெஞ்சில்....
நல்ல உள்ளம் இருந்தது
உனக்கு மட்டும் எண்டு...

காசை கொடுத்து -உன்னை
வேண்டவில்லை-இவன்
நெஞ்சை கொடுத்தே
உன்னை வேண்டினான்.
தெரிந்திருக்கவில்லை
நீயும்
காசுக்கு சோரம் போவாய் எண்டு










உள்ளத்தை கொடுத்ததால் தான்
உன் உடம்பை இன்னொருவனுக்கு
அடமானம் வைப்பதை
இவனால் பொறுக்கமுடியவில்லை

அதற்கு உண்மையான சாட்சி
இவன் மெயிலை திறந்து பார்
அவன் உடம்பில் கொயிலால்
சுட்ட புண்கள் சொல்லும்

குருதியின் கலங்களில்,
நரம்பின் எல்லைகளில்,
விழிகளின் காட்சியில்..
உன் நினைவுகளை
சிலுவை சுமந்த இவன் உறவு
கடையில் காசுகுடுத்து வாங்கும்
சல்வாருக்கும் , தோல் வாக்குக்கும்
முன்னால் அழிந்தது போகும் எண்டு
நினைக்கவில்லை

சல்வாருக்கும்  , தோல் வாக்குக்கும்
சோரம் போகும் இவள்
நாளை
இன்னொரு பொருளுக்காய்
சோரம் போகும்
அர்த்தமில்லாத காதல்
சங்க காதலை
தலைகுனிய வைக்குதையா!!!!!

புதிரெடுத்தல்......


தமிழர்களின் வாழ்வு பொருளாதாரம், அரசியல், சமயம் மறறும் கலாசாரம் என்பனவற்றுடன் ஒன்றொடொன்று பிரிந்துவிடாமல் பிணைந்திருப்பது அதன் வரலாற்று முதிர்சியை புடம்போட்டுக் காட்டுதுங்க..

இன்று தைப்பூச திருநாளுங்க...உன்மையில் நம்ம தமிழர் பண்பாடு மற்றய இனத்தினரையும் விரும்பவைக்கும் வகையில் அதில காணப்படுகின்ற பண்பாடு, நாகரிகம் மற்றும் ஒழுக்க விழிமியங்கள் சிறப்பாக அமைந்திருக்கு..
தமிழர்களின் புதிய வருடமானது தை மகள் வருகையுடன் ஆரம்பமாகிறது, இதனால்தான் நம்மட முன்னோர்கள் 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்றார்கள். இந்த மாசத்தில் வருகின்ற தைப்பூச திருநாளில் 'புதிரெடுத்தல்', 'புதிருண்ணுதல்' எனும் பாரம்பரிய மரபுகள் இருந்து வருதுங்க...

பாத்திங்கனா புதிரெடுத்தல் என்பது தைப்பூச நாளில் விளைந்த வயலில் கதிர் எடுத்து, வீட்டின் முன்வாசலில் வைத்து அதன் பின்னர் நல்லநேரம் பாத்து வீட்டினுள்ளே எடுப்பதனைக் குறிக்கின்றது. இதில விசேசம் என்னென்றால் முந்திய வருடத்தில் எடுத்த பழய கதிரை புதிய பெட்டியினுள் எடுத்து அத்துடன் பணம், பொன், தங்கம், பாக்கு, வெற்றிலை, பூ மற்றும் திருநீறு என்பனவற்றையும் வைத்து அதனை வெள்ளை பட்டினால் மூடி கடவுளை பிராத்தித்து பின் இந்த பெட்டியோடு சென்று வெளியிலே இருக்கும் புதிய கதிரை சந்தோசமாக எடுத்து உள்ளே சாமி இருக்கும் அறையினுள் கொண்டுவருவார்கள்.

கொண்டுவந்த புதிரை அரிசாக்கி புதிதாய்ப் பொங்குவார்கள் இதனை புதிருபொங்கல் என்றழைப்பாங்க. இந்த புதிரினைப் பொங்கியபின் விளக்குச்சோறு கூட்டி அதன் பின்னர் புதிய பொங்கலுடன் பால், பழம், சீனி இவையெல்லாம் போடடு குடும்பத்தலைவனால் பிசைந்து எல்லோரும் ஒன்றாக உண்ணுவர்..அத்தோடு அன்றைக்கு நல்ல கறிகூட்டி சந்தோசமாக உண்டு மகிழுவார்கள்... இவ்வாறான வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிமுறையினை தமிழ் பண்பாடு தவிர எதிலும் காணமுடியாதங்கோ...

மாட்டு வண்டில்


கடைக்கு போகவும் இந்தக்காலம்
மாருதி வண்டி
கல்யாண மாப்பிள்ளைக்கும் அந்தக்காலம்
மாட்டு வண்டி

வயலுக்க போக- அங்க இருக்கும்
வைக்கோல் ஏத்த
படம் பாக்கிறத்துக்கு எல்லா
பாரமும் தூக்க
கும்பத்துக்கு நெல்லுக்கொண்டுபோக
குமருக்கு மாப்பிள்ள பாக்க
வருசத்துக்கு ரேசி வைக்க
வசமா பாக்பண்ண

தண்ணியும் தவிட்டோடையும்எண்ணிய கருமம் செயிறது
எங்க மாட்டு வண்டிதானே!!
மாட்டு வண்டிய பார்க்கும் போது அந்தநாள் ஞாபகம் வந்தது சம்மந்துற வட்டப் பக்கமாக பிலேண்டி கடை ஒண்ணுல தேத்தண்ணி குடிச்சிற்று இருக்கக்குள்ள வந்த வண்டில்கள எடுத்தது




இவர்களா பெரியவர்கள் !!!













நாய் தின்னாக் காசி
 பூகம்பத்துக்கே நில்லாத ஊடு 
ஓட்டிப்போக காரு
உடுக்கப் பட்டு
சூட்டுக்கு ஏசி-ஆனால்
சொந்தமெல்லாம் தூசி
மாப்பிள்ளைய விலைபேசும்
மனிதம் செத்தவர்கள்














சேற்றில் கால் வைக்காத
சோத்து மாடுகள்
கண்களில் ஈரமில்லாத
கல்நென்சக்காரர்கள்
உடலையும் உயிரையும்
பங்குபோடும்
நாகரிகம் நலிந்தவர்கள் -தாய்
மொழிமறந்து
வழிகெட்டு போனவர்கள்
பாசமே இல்லாத
வேசதாரிகள்.........
இவங்கதான் இப்ப பெரியவங்கலாம்

குச்சிக் குடில்
தின்னக்கஞ்சி அதிலும்
உண்ணக்குடுப்பவன்
தன்னைப்போல
பிரரைப்பாப்பவன்
மிச்சமில்லாது ஒழைப்பவன்
அச்சமில்லாது வாழுபவன்
துண்டு கட்டியவன்
வெந்து வேலை செய்பவன்
கோடி கொடுத்தாலும்
போலியாகாதவன்
ஒத்தக்காலானாலும்
சொந்த சோறு தின்னுபவன்
செத்துப்போனாலும்
ஒத்திகாக சாகிறவன்
நம்ப வாழுபவன்
நம்பியே கெடுபவன்
இவங்கெல்லாம் இப்ப
சிறியவங்க தாம்பா
.................................................

இதிலும் ஒரு சுகம்தான்

என்னதான் மாளிகை இருந்தாலும் ,பணம் இருந்தாலும், நம்மட கிராமப் புறண்கலப் பாருங்க எத்தன எளிமையா சந்தோசமா சீவிக்குதுகள்....இப்படித்தான் அடிக்கடி அடியேனுக்கு அனர்த்தம் சம்பந்தமான மாவட்ட உத்தியோகத்தராக இருக்கிறத்தால காணாத இடத்தையும் காணும் பாக்கியம் நம்ம பக்கத்தில கிடைக்கும் அப்பா.....இப்பவும் நம்ம கிராமப்புறப் பகுதியில மண்ணில் கட்டிய சிறிய கடைகளில் இந்த தூரப் பிரயாணங்களின் போது தேநீர் குடிப்பதெனில்அதில ஒரு தனிச்சுகம் இருக்கு....

புதிதாய் பொங்குவோம்

எத்தனையோ பொங்கல் 
எங்கள் தமிழ் பண்பாட்டில்
சர்க்கரைப் பொங்கல்
சந்தணப் பொங்கல் 
பால்ப் பொங்கல் 
பழப் பொங்கல 
மாட்டுப் பொங்கல் 
காணும் பொஙகல் 
இன்னும் எத்தனையோ 
எம்மிடத்தில் இருந்தும்.....  

மணப்பாற மாடு கட்டி 
மாயவரம் ஏரு பூட்டி 
வயல் காட்டை உழுது 
பச்சை வயலாக்கி 
பருவத்தோடு கதிர்பறிய 
போடியார் வட்டைக்குள் 
வேளாமை வெட்டப்போய் 
ஊரெல்லாம் சிதேவி 
உணவளிக்க உதவிய 
ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும் 
தமிழ் பொங்கலே  
தைப் பொங்கல்  

பகலவன் கோலம்போட 
பறவைகள் பண்ணிசைக்க 
மலர்கள் மணம் பரப்ப 
மரங்கள் தலையசைக்க 
மட்டக்களப்பு கரும்புசேர்த்து 
யாழ்ப்பாண வெல்லமிட்டு 
திருமலை அரிசி சேர்து 
வவுனியா வாழைப்பழமிட்டு 
அம்பாரை பசும்பால்  
அனைத்தையும் ஒன்றுசேர்த்து  
பொங்குவோம் பொங்கல்  
வெள்ளம் மடைதிறந்து  
வேகமாய்ப் போவதுபோல் 
நம் உள்ளத்து 
வேதனைகள் 
இல்லாது பொங்குவோம்  

இன்னும் எனது நாட்டில் 
எனது மண்ணில் 
தூர விரட்டப்பட்டு 
தூங்கக்கூட இடமில்லாத 
துணியைத் தொட்டிலாக்கி 
பனியிலும் மழையிலும் 
படுத்துறங்கும் 
எம் இனத்தின் 
சாந்தி வேண்டிப் பொங்குவோம்.  
பண்பாடு பறித்தெறியப்பட்டு 
சமயம் சபைக்காகாமல் 
விழுமியம் வெறுக்கப்பட்டு 
வெட்கத்தினை விலைகேட்கும் 
அநாகரிகம் அழியப் பொங்குவோம்.  
இமைமூடிய பொழுதிலும் 
உன் நினைவுகளை 
மூடாமல் மனக்கதிரையில் 
சிம்மாசனம் தந்து 
மரணத்தின் கடைசி மூச்சிலும் 
உன் உயிரையே 
சுவாசிக்கும் காதலரை 
வாழ்த்திப் பொங்குவோம்.  
பசிபோக்கப் பொங்குவோம் 
பாவம் அழியப் பொங்குவோம் 
அநாதைகள் இல்லையென  
அறைகூவிப் பொங்குவோம் 
அன்பை பகிரப் பொங்குவோம் 
அறிவை ஊட்டப் பொங்குவோம் 
துயரில் கைகொடுக்கப் பொங்குவோம் 
துட்டரை விரட்டப் பொங்குவோம் 
பொங்கலோ பொங்கல் எங்கும் அன்புப் பொங்கல்.....

பொங்கலோ பொங்கல்....

தைப்பொங்கல்...........
தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாகதமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் வரலாறு சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. 
பொங்கும் முறை தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆய்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம் தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதுகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர். பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.  
உழவர் திருநாள் பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்தநெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும். 
மாட்டுப் பொங்கல் 

என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.


வெள்ளத்து அபாயத்தை இல்லாது பண்ணுவோம்..

வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.
காலநிலை மாற்றங்களுக்கிணங்க இலங்கையானது வெள்ளம், புயல், சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு இலகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளமையை முன்னைய வருடங்களில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஒழுங்கான முறையில் வடிந்து செல்வது தடைப்படும்போது வெள்ளம் ஏற்ப்படுகின்றது. வெள்ளம் வடிந்தோடுகின்ற, மற்றும் தாழ்நிலைப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைப்பதன்மூலம் வெள்ளம் தடைப்பட்டு அதன் ஆபத்தினை அதிகரிக்கச் செய்கின்றது. 
வெள்ளம் ஏற்ப்படுவற்க்கான காரணங்கள்.




வெள்ள அனர்த்த மட்டங்களை கருத்தெடுக்காமல் நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளல்.

அதிகரித்துவரும் சனத்தொகை காரணமாக நிலப்பகுதியின் அளவு குறைந்து வருகின்றமை இதனால் வெள்ளளம் வடிந்தோடுகின்ற இடங்களில் வருமானம் குறைந்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம்.

வடிகால் அமைப்புகளை தூய்மை செய்வதில் காணப்படுகின்ற பொது மக்களின் அசண்டையீனமான போக்கு. மண்ணை முறையற்ற முறையில் அகன்றெடுத்தல். நீர் வழிந்தோடி தேங்கி நிற்கும் இடங்களை நிரப்புதல் மற்றும் அவற்றின்மீது கட்டிடங்களை அமைத்தல். 

வெள்ளத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள். 
தூய சுட்டாறிய நீரினை அருந்துதல் அதற்க்காக வீடுகளில் பாவனைக்கு பயன்படுத்தப்படும் நீரில் குளோரினை இட்டு பாவித்தல்.எப்பொழுதும் குடிநீரை சிறிய மூடி கொண்ட, சுத்தமான கொள்கலன்களில் சேமித்து வைத்தல் வேண்டும். உணவினை மூடிவைத்து பாதுகாப்பதுடன் அவற்றை சூடாற முன் உண்ணுதல் வேண்டும். சாப்பிட முன்னும் பின்னும் கைகளை தூய்மையாக கழுவுதல் வேண்டும். நுளம்பு தொல்லையில் இருந்து பாதுகாப்பு பெற நுளம்பு வலைகளை பாவித்தல் வேண்டும். இவற்றின்போது வயிற்றோட்டம், வாந்திபேதி என்பன ஏற்ப்பட வாய்ப்பிரிப்பதனால் தூய நீராகாரங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியமாக இருக்கும். மேற்கூறிய நோய்களுக்குரிய அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடி வைத்தியரை நாடி ஆலோசனை பெறுவது சாலச் சிறந்ததாகும். நித்திரை செல்லும்போது கால் மற்றும் கைகளை மூடும்படியாக துணிகளால் போர்த்தவேண்டும். சுகமடைந்த நோயாளிகளை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும். தண்நீர் தேங்கி நிற்கும் இடங்களை இல்லாது செய்தல் வேண்டும் (தகரப் பேணி, டயர், சிறட்டை போன்றன) இயற்கையாக அமைந்திருக்கும் நீர் வழிந்தோடக்கூடிய வழிகளில் குடியேற்றத்திட்டங்களை அமைத்தல் தடைசெய்யப்பட வேண்டும். புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர் வழிந்தோடும் இடங்கள் பாவிப்பது தடைசெய்யப்படுதல் வேண்டும். ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட வெள்ளம் வழிந்தோடும் இடங்கள் மீளவும் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். 
வெள்ள அனர்த்தம் மூலம் ஏற்ப்படும் பொது ஆபத்துகள். 
வெள்ளத்தினால் பெரியளவிலான மண்ணரிப்பு உருவாகின்றது, அத்துடன் இது பாலங்கள், கட்டிடங்கள் என்பனவற்றை சிதைவடையச் செய்கின்றது. மனிதர்களால் கட்டப்பட்ட வீட்டின் சுவர்கள், கதவுகள், கூரைகள் அத்துடன் வீடுகள் என்பன சிறிய வெள்ளத்தினாலும் பாதிப்படைகின்றது. விவசாய நிலங்களில் ஏற்ப்படுகின்ற வெள்ளத்தின்போது விவசாயப்ப் பயிர் செய்கைகள், மிருக வளர்ப்புப் பண்ணைகள் அத்துடன் செல்லப்பிராணிகள் என்பன வெள்ளத்தின்போது மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.வேள்ளம் போக்குவரத்தினை சீர்குலைத்து விடுகின்றது இது அங்கு உடனடி உணவுத்தட்டுப்பாட்டினை உண்டுபண்ணுவதுடன் அதுவே மக்களை பட்டினிச் சாவுக்கும் இடடுச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டு விடுகின்றது. வெள்ள காலங்களில் அதன் வடிந்தோடும் தன்மையைப் பொறுத்து மக்களின் இடப் பெயர்வுகள பாரியளவில் ஏற்ப்பட்டு வருகின்றன. இதன்போது மக்ககள் தற்காலிக வீடுகளிலும் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களிலும் குடியமர்த்தப்படும் போது தூய்மையான நீரைப் பெறுவது மற்றும் போதியளவு உணவினைப் பெறுவது மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுவதுடன் அங்கு ஏற்ப்படும் சுத்தமற்ற தன்மை உணவு மற்றும் குடி நீர் மூலம் வரும் நோய்களுக்கு ஏதுவாக அமைந்து காணப்படும். ஓவ்வொரு வருடமும் வரும் வெள்ள அனர்த்தத்துக்கென பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை வழங்க வேண்யெ நிர்ப்பந்தம். வெள்ளம் ஏற்ப்பட்டதன் பின்னர் பல்வேறு நோய்கள் உண்டாகுகின்றன, குறிப்பாக கொலரா, தைப்பொயிட், டையேரியா மற்றும் காய்சல் போன்ற இன்னோரன்ன நோய்களையும் உண்டுபண்ணுகிறது. 

வெள்ளம் மூலமாக ஏற்ப்படுகின்ற சுகாதாரக் கேடுகள். 
வெள்ளநீர் மூலம் குப்பை கூழங்கள் கொண்டு சேர்க்கப்படுவதுடன் நஞ்சு கலந்த மாசுறுதலும் அதன்போது ஏற்படுகின்றது இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகின்றது.

யாருக்கு தெரியும்..

யாருக்கு தெரியும்
புதையல் தோண்ட பூதம் வரும் எண்டு
என் கண் செய்த கொடுமைதான்
என் நெஞ்சை புண்ணாக்கியது
மல்லிகையாய் மணம் வீசி
தேநிலவாய் ஒளி கலந்த
எனது அந்த நாட்கள்
சூனியமாய் போனது இப்போ

உலகமென்னும் மாயைக்குள்
நானும்
குருதி பச்சிய குப்பிகள்!
பல்லைக்கட்டும் பாம்புகள்!
பொய் உரைக்கும் நரிகள்!
நம்பவைத்து கழுத்தறுக்கும் துரோகிகள்!
உணர்வை காட்டி
மனசை பறிக்கும் அரக்கர்கள்!

இவர்களை
சந்தித்து சரிந்து விட்டேன்
வந்தித்து வாடி விட்டேன்
உண்மை ஊமையானதால்
காதல் காசிக்கு விற்கப்படும்
கொடுமை மிஞ்சிவிட்டது!

என் உணர்வு, சந்தோசம்,
அழகு, சிந்தன ஓட்டம்,
கரிய பலம்
எல்லாத்தையும்
கொண்டுவிட்ட உனக்கு
என் அற்ப உயிரை கொல்வது பெரிதா?
நாட் குறித்து சொல்
நானே வருகிறேன்...




கொம்புச்சந்தி கலையகம்


என்னங்க ஆச்சரியமாப் பாக்கிறீங்க! நம்மட மாவட்டத்தில அதுவும் நம்மட ஊரில பாடல் ஒன்னு பதிவு செய்த வேளை திருவாளர் சண் இன்பத்தார் பாடுகிறார்..











இது தான் நம்மட கொம்புச்சந்தி கலையகம் ... சிறிய வசதியைக்கொண்டு பெரிய பெரிய படைப்புகளை செய்ய இது உதவி வருகிறது...

காளி கோயில் கும்பாபிசேக பாடல் மற்றும் பட இறுவட்டுகள்... மற்றும் எமது கிராமத்து அருங்கலைகள், இதெல்லாம் தாண்டி பல படைப்புகள் வெளியிட்ட வண்ணம் இந்த கொம்புச்சந்தி கலையகம் இருக்கிறது...எனது இணைய இணைப்பில் காணப்படுகிறது.

எனது மாவட்ட முத்தான சொத்துகளை எடுத்துக்காட்டும் கண்ணாடி...
எனது வாசல் மல்லிகையாய் மணம் பரப்பும் பூந்த்தோட்டம்...

இங்க பாருங்க அன்பர் இன்பத்தார் பாடலுக்கு முன்னர் தன்னை ஒருமுகப்படுத்துகிறார்...

ம்ம்ம்ம் தனது ஒளிப்பதிவை படைத்துவிட்ட திருப்பதியில் எனது ஆருயிர் நண்பர் சுரேசருடன் பால் தேநீர் அருத்துகின்றனர்

நண்பர் கூட சளைத்தவர் அல்ல...அந்த காலத்தில கடுமையான சோக பாடல்களை எல்லாம் நல்லா வாசிக்க கூடியவர் என்று என் சக நண்பர்கள் எல்லாரும் கிண்டலடிப்பார்

இது தான் எங்க ஆரம்பகால கலையாக தோற்றம் ...


அடியேனும் சிறிது பாடுவேன் ஆனால் வெடிவெடியாய் கொண்டு போடுவானுகள் அங்க கம்பசில படிக்கக்குள்ள...









இங்கதான் நிறைய நேரத்த பயனுள்ளதாக களிப்பம்... பின்னேரம் ஆகினால் இன்பராஜன், விமலானந்தராஜன், ஈழவேந்தன், சண் அங்கிள், கதிரவேற்பிள்ளை எல்லோரும் வருவார்கள் பிறகென்ன ஒருவர் இராகத்தை  எடுப்பார் நான் பாடலை எழுதுவேன், இன்பத்தார் பாடலை சமைப்பார் அன்பர் விமல் மற்றது ஈழவேந்தன் ஆகியோர் இசை வழங்க திரும்ப திரும்ப படிச்சி ஒரு வளி பண்ணி விடுவார்கள்....



இன்பனின் பாட்டில் ஊரில எல்லோருக்கும் ஒரு தனிப்பிரியம்..தரமா படிச்சுடுவாரு.... ம்ம்ம் இந்த கலைஞர்கள்  இந்த மாவட்டத்தின் பெரிய சொத்துக்கள்..அனால் கழுதைக்கு தெரிவதில்லை கற்பூர வாசனை.... எங்கட நாட்டில வானொலி டிவிய துறந்தா வேரனாட்டாநிண்ட  கூத்துதான் வெட்கக்கேடாய் இருக்குங்கோ .....

கிட்டத்தில நம்மட யாழ் பல்கலைகக்கழக இசை மானி வாகீசன் தம்பி ஒரு அழகான பாடலை வெளியிட்டுத்தந்தார் அதை உங்களுக்காக விரைவில் தருவேன்..அது இப்படி தொடங்குகிறது..
கொம்புமுறி ஆடுகிறோம்
கரகம் கும்மி பாடுகிறோம்
தேத்தாத்தீவு அழகான களரியம்மா..
தெருவெல்லாம் கமத்தின் வாடையம்மா.... என்று போகுதுங்க....
அவரு படிக்கும்போது எமது கலையகத்தில் கிளிக் பண்ணிய பதிவுகளில் இன்பத்தார் மற்றும் விமலானந்தர் ஆகியோர் இசை கூட்டுவதை பார்க்கலாம்...


அப்பா நம்மடவங்க பண்ணிறத பாருங்க, பாராட்டுங்க, கேளுங்க, அதுவே பெரிய உயிர்ப்பிச்சை எங்கட குற்றுயிர் தமிழ் கலாசாரத்துக்கு ........

10 February 2010

மெட்டி


இந்த மெட்டி
ஆயிரம் கதை பேசும்!
காதல் சின்னம்.....
அதுதான் எனக்கு,
அதை பார்க்கும்போது
புகழ் பாடத் தோணுது.

என் இதயமோ
அவள் அன்பில் கட்டுண்டு,,
வளைந்து விட்டது
இந்த மெட்டியைப்போல்.....

நான் கீழ் இருக்கும்போது
நீ மேலேயும்,,,,
நான் மேலே உன்னை  நாட
நீ கீழேயும்,,,,,
இந்த வட்டத்தினுள்
தொடமுடியாதவனாய் .........


உன் நெஞ்சிக்குள்-நீ
இடம் தராவிட்டாலும்!!!!
உன்னையே தாங்கும்,,
உன் பாதத்துக்கு
அழகு சேர்க்கும்
இந்த
மெட்டியைப்போல்....

நானும் எனது
உள்ளத்துள்
உட்கார வைத்திருக்கும்
உனக்கு,,,,,,
அழகு சேர்க்க கிடைக்குமா!!!!!

சிகரட்டின் சீகரட்!!


















இதயச்சுவர்களை
உரசிப்பார்க்க
அனுமதி பெற்ற
மரணப்புழு!

குளிர்ந்த மேனியின்
உதிரத்தை காயவைக்க
20௦ ரூபா கூலி கேட்கும்
நயவஞ்சகன்!

புகையிலை
தீ மூட்டி
சாவின் நாள் குறிக்க...
சுடுகாட்டு பூவைக்கும்
ஊதுபத்தி!

ஜனனத்தின் மடியில்
சிசுக்களின் சிரசில்
மரணத்தை தூவும்
நச்சு மரம்!

உதட்டினை காச்சி
உள்ளத்தில் பாய்ச்சி
பற்களை கருக்கி
புற்று வியாதி
வரவழைக்கும்
புல்லங்குழல்

பேதையின் காதலில்
கண்களை துலைத்து
பாதை மாறிய வாலிபரின்
சவக்குளிக்கான வழிகாட்டி

மெய் பேசும் நாக்கில்
சயனைட்
மை பூசும்
நிக்கொடினே!!!
நீ
நெருப்பினில் கரையும்
நிமிஷங்களை
என்
உருப்பினில் உறைய வைத்து
வாலிப பருவத்தை
வழியாக்கும் சூட்டுக்கோல்

அன்னையின் உதடுகள் அரவணைத்த
உன் முகத்தை
புகயடித்து
பழுக்க வைக்கும்
நெருப்புக்கொள்ளி

அரிசிகளை குறைத்து
அடுப்பெரிக்கும்
உன் அம்மா
தெருக்களின் வாயிளிப்பில்
பல் இளித்து
கடன் பெற்ற-காசி..
இன்று
சிகரட் மூட்டிய தீயினிலே
உடன் கட்டை ஏறுகிறது.......