ADS 468x60

29 June 2022

இப்பொழுது உண்மையைக் கூறினாலும் மக்கள் நம்புவதாயில்லை.

இன்று அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கை சிதைவு குறிப்பிடத்தக்க ஒரு சாதகமான சூழ்நிலை அல்ல. நம்பிக்கை சிதைவதற்கு முக்கிய காரணம் தொடர்சியாக் பொய். சொல்லி மக்களை ஏமாற்றுவது.

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும். ஆனால் இன்று எங்களது சில தலைவர்கள் சொல்லும் சொற்களை நம்பி வெம்பி வீணாகும் அளவுக்கு மக்களை ஏமாற்றுகின்றவர்களை, துன்புறுத்துபவர்களை பொய்யன் என நான் சொல்லவில்லை வள்ளுவர் சொல்றார்.

 பௌத்த மதத்தின் முக்கிய பஞ்சசீலக் கொள்கையில் பொய்சொல்லாமை, பொய் கூறுவதனைத் தவிர்ப்பது மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றது. உலகில் எந்த மதமும் பொய்யை அங்கீகரிக்கவில்லை. அதுமாத்திரமல்ல, நீதிமன்றத்தில் பொய்யான சாட்சியங்களை முன்வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மறுபுறத்தில், பொய்யனால் செய்ய முடியாத குற்றமே இல்லை என்பது கதை. இன்று இந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் அடிப்படைக் காரணம் பொய்யும் புரட்டும்தான்.

26 June 2022

நாம் கண்டுகொள்ளாத பாடசாலைக் குழந்தைகளின் பிரச்சினைகள்

ஒரு நாட்டிலுள்ள மக்கள் எல்லா வகையிலும் வறுமையால் பாதிக்கப்படும்போது, உணவு மற்றும் ஏனைய பொருட்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களைச் சமாளிப்பதற்கான வழிகளையும் கண்டுபிடிப்பதில் பலர் தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள். இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்வதால், பலரால் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட யாராலும் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளமை நாம் அறிந்தது. இந்த நிலையில் இன்று பாடசாலைகளுக்கு செல்லும் மாணவச் செல்வங்களுக்கான  பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவற்றையும் பெறுவதில் மிக கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இன்னும் இது பலரால் பேசப்படவில்லை.

25 June 2022

IMF இன் மூலம் துளிர்விடும் எதிர்கால நம்பிக்கை

இன்று நாட்டில் IMF கடன் திட்டம் எங்களிடம் உள்ள இறுதி உத்தி. கடைசி துருப்பு என்று கூறுவது மிகவும் துல்லியமானது. பேச்சுவார்த்தை வெற்றியடைந்து கடனை விரைவாகப் பெற்றால் பல பிரச்சனைகள் தீரும். கடன் இல்லாது போனால், பொருளாதாரம் மோசமான நெருக்கடியில் இருக்கும். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இலங்கை அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பொருளாதாரத்தின் உண்மையான நிலைமையை ஆராய்ந்து தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம். அதிகாரிகளின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 June 2022

நாளை ஒருவேளைச் சோறு உண்பது கனவாகுமா!

இலங்கையில் உணவு நெருக்கடி ஒரு முக்கியமான கட்டத்தை இன்று எட்டியுள்ளது. நாம் சாதாரணமாக உண்ணும் அரிசி கடவுளின் வரப்பிரசாதமாக மாறிவிட்டது, பணம் கடவுளின் கடவுளின் அருளாக மாறியது. ஒரு கிலோ அரிசி ரூ. 500 வரை விலைக்குப்போகும் ஒரு ஏறுநிலை தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒரு கிலோ அரிசியின் கட்டுப்பாட்டு விலை      ரூ. 210 அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அந்த விலையில் அரிசி எங்கும் கிடைக்காத நிலை மெதுவாகத் தோன்றத் துவங்கியுள்ளது.

இந்த நேரத்தில் ஒரு கிலோ சாதாரண அரிசி கூட ரூ. 260க்கு மேல் விற்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி என்ற ஒரு வகை அரிசி சந்தையில் உள்ளது, அதற்கு சம்பா என்று பெயரிட்டு, மக்களை மகிழ்விக்க பொன்னி சம்பா என்று விற்பனை செய்ய ஆரம்பித்பித்தனர். 

11 June 2022

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ அரிசியின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்குமென எச்சரிக்கை!

இலங்கை ஏற்கனவே முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதுடன், உணவு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில் உணவு தானியத்தின் விலை 'தாங்க முடியாத அளவிற்கு' உயர்ந்துள்ளதால், இலங்கையில்; அரிசி வாங்குவது இன்று சவாலாக மாறியுள்ளது.

நாம் அறிந்தவை பார்தவைதான் அரிசி, சீனி, கோதுமை மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாட்டின் பலபாகங்களில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும்  சூழலும் உருவாகியுள்ளது. மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாலும், நாட்டில் கொரோனா ஏற்படுத்திய வேலைவாய்ப்பின்மை காரணமாகவும் மக்கள் மிகப்பெரிய வாழ்வியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டுள்ளனர்.

இன்று ஊட்டச்சத்து பிரச்சினை தீவிரமாக கருத்தில்கொள்ளவேண்டியது

நாளைய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க எமது பிள்ளைகள் தயாராக உள்ளனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நாட்டை விட்டு அனுப்ப முயற்சிக்கின்றனர்.

நம் நாட்டின் தவறான சில அரசியல்வாதிகளால் அவர்கள் அந்தப் பாதையில் தள்ளப்பட்டனர். இந்த ஆட்சியாளர்கள் பழைய தலைமுறையை மட்டுமல்ல, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளையும் பாதாளத்தில் தள்ளி தகர்த்துள்ளனர்.

இவ்வாறான துரதிஸ்டவசமான விடயங்கள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இந்த நாட்டில் வாழும் மற்றுமொரு தலைமுறை சிறுவர்கள் எதிர்பாராத பரிதாபமான கதியை எதிர்நோக்கியுள்ளனர். இப்போது அந்த உண்மையைப் புரிந்துகொண்டு வெளிப்படையாகப் பேச வேண்டும். மேலும், சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

07 June 2022

நுகர்வோர் பாதுகாப்பற்ற உணவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் -எச்சரிக்கை

ஓவ்வொரு ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகின்றது. அதற்காக இந்த ஆண்டின் கருப்பொருள் 'பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம்' என்பது ஆகும். மக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் மக்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பான உணவை அணுகுவது அவசியம். உணவு பாதுகாப்பானதாக இருந்தால் மட்டுமே, அதன் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பாதுகாப்பான உணவைப் பகிர்ந்து கொள்வதன்; சமூக நன்மைகளிலிருந்து நாம் பயனடைய முடியும். 

இன்று உணவுப் பாதுகாப்பு என்பது இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகத்திற்கே சவாலாக மாறியுள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை அடுத்து, உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடிய சூழ்நிலையில் உணவுப் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. 

04 June 2022

தருசு நிலங்களை விளைச்சல் நிலமாக்குவதே பஞ்சத்துக்கான பரிகாரம்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கு முன், நவம்பர் மாதத்தில் பெரும்பாலான மக்கள் உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள நேரிடும் என்று கணித்திருந்தார். இது முற்றிலும் உண்மையாகி வருவதாகத் தெரிகிறது. அடுத்த சிறுபோகப் பருவத்தில் செய்கை பண்ணப்படும் விவசாயம் 60 வீதம் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போதைய இரசாயன உரங்கள் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக சிறுபோகப் பருவத்தில் நெல் உற்பத்தி 60 வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நெருக்கடியைத் தீர்பது அனைவரதும் பங்களிப்பாகும்

 தோல்வியும், வீழ்ச்சியும் வெற்றியின் முன்னோடி என்று கூறப்படுகிறது. உறுதியும், அர்ப்பணிப்பும், வெற்றிகரமான திட்டமிடலும் இருந்தால், உலகில் உள்ள அனைத்தையும் வெல்ல முடியும் என்பது எனது கருத்து. இந்த சுலோகங்களை மந்திரமாக நாம் இன்று உச்சரிக்க வேண்டும் என்று உணர்கிறேன்;. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை வீழ்ச்சியடைந்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் இரண்டாம் உலகப் போரின் போது சரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த நாடுகள்தான் இன்று உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளாக உள்ளன. அந்த நாடுகளின் முன்மாதிரியை நாமும் பின்பற்ற வேண்டும்.