ADS 468x60

25 December 2023

பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுன்னு ஏறுது

பண்டிகைக்காலம் அதுவும் பார்த்து, இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுன்னு ஏறிக்கொண்டே வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்றது. ஆனால் இன்று அந்த விலை 750 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

உள்நாட்டில் பெரிய வெங்காய உற்பத்தி நாட்டின் மொத்தத் தேவையின் சுமார் 35 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. எஞ்சிய 65 சதவீத தேவையை நிவர்த்தி செய்வதற்கு இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதேவேளை, சின்ன வெங்காய உற்பத்தி நாட்டின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இருந்த போதிலும் சின்ன வெங்காயச் செய்கை பெருமளவில் வட பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை மற்றும் பயிர் செய்யப்படும் காணியின் அளவு ஆகியன வருடாந்தம் வீழ்ச்சியடைந்த வண்ணமுள்ளது. -tamilmirror

இந்த விலை உயர்வுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரிய வெங்காயத்தின் உற்பத்தி குறைந்துள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது கடினமாகிறது.

இலங்கையின் மத நல்லிணக்கம்: ஒரு சவாலான வாய்ப்பு

இலங்கை ஒரு பன்முக கலாச்சார நாடாகும். இங்கு பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வேறுபாடுகளை மீறி ஒருவருக்கொருவர் நல்லிணக்கமாக வாழ்கின்றனர். இது இலங்கையின் ஒரு சவால் மற்றும் ஒரு வாய்ப்பாகும்.

இந்த நல்லிணக்கம் இலங்கையில் பல நன்மைகளைப் பெற்றுத்தந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தியுள்ளது, மேலும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

24 December 2023

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

 இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நம் நாட்டில் பல துன்பங்களுக்குள் கொண்டாடப்படுகிறது. அதிகரித்த விலைவாசி, அரசியல் நெருக்கடி, அச்சுறுத்தல், இயற்கை இடர் என பல பிரச்சனைகள் நம்மை சூழ்ந்துள்ளன. இந்த சூழ்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

கிறிஸ்துமஸ் என்பது நம்பிக்கை, அன்பு, மகிழ்ச்சியின் பண்டிகை. இந்த பண்டிகையின் மூலம், கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் நாம் உணரலாம்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.

இந்த நோக்கில், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, நம் நாட்டின் துன்பங்களைப் போக்க பாடுபடுவோம். அரசியல் நெருக்கடியை தீர்க்க, பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சமூக ஒற்றுமையை வலுப்படுத்த, இயற்கை இடர்களில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

புதிய ஆண்டில், நம் நாட்டில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும். அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று நம் அனைவரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்த புதிய ஆண்டில், நம் நாட்டில் அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை நிலவ வாழ்த்துக்கள்!

நன்றி!

23 December 2023

ஜனநாயகத்தின் இரண்டு முகங்கள்: அரசியல்வாதியும் மக்களின் தொண்டனும்

செந்தூரன்: செல்வன், நீ ஏன் மக்களின் சார்பில் இவ்வளவு பேசுகிறாய்? அரசாங்கம் மக்களுக்காகவே பணியாற்றுகிறது தெரியாதா?

செல்வன்: அரசாங்கம் மக்களுக்காக பணியாற்றுகிறது என்றால், ஏன் மக்களின் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை? ஏன் மக்களுக்கு இன்னும் வறுமை, பசி, நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளன?

செந்தூரன்: அரசாங்கம் அதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்த திட்டங்கள் முழுமையாக செயல்படவில்லை. அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் இல்லையா?

நட்பின் வலிமை

கணேஸ் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தான். அவனது தந்தை ஒரு விவசாயி, தாயார் ஒரு இல்லத்தரசி. கணேஸ் படிப்பில் சிறந்து விளங்கினான். அதனால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான். அங்கு அவனுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி அந்தஸ்து, குடும்பம், படிப்பில் இருந்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் முன்னேறத் தொடங்கினர். சிலர் அரச வேலைக்குச் சென்றனர், சிலர் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தனர். கணேஸ் ஒரு அரசு ஊழியராக சேர்ந்தான்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோசமான வானிலை நிலைமைகள்: நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ளும் வழிமுறைகள்

தற்போதைய நிலைமைகள்

சமீபத்திய காலங்களில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோசமான வானிலை நிலைமைகள் அதிகரித்து வருகின்றன. வெள்ளம், மண்சரிவு, கடல் மட்ட உயர்வு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

2023 ஆம் ஆண்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோசமான வானிலை நிலைமைகளால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால், நாடளாவிய ரீதியில் 2,271 குடும்பங்களைச் சேர்ந்த 7,61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு: இலங்கை மக்களின் நம்பிக்கை ஒளிரும் நாளாக இருக்க வேண்டும்

இலங்கையில் இன்று மக்கள் சொல்லொண்ணாத் துயருக்குள் வாழ்கையினை நடாத்தி வருகின்றனர். அதிகரித்த விலைவாசி, பொருளாதார நெருக்கடி, அரசியல் சீர்குலைவு, இயற்கை இடர்பாடுகள் என பல சவால்களுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த அபாக்கியமான வாழ்வை அவர்கள் தொடரக்கூடாது. பொருளாதாரம் செழிப்படைந்து, அரசியல் ஸ்திரமடைந்து, இலஞ்சம் ஊழல் அற்ற ஒரு சிறந்த வேற்றுமையற்ற சகோதரத்துவமான வாழ்க்கைப்பயணத்துக்கு இந்த பிறக்க இருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் நம்பிக்கை ஒளிரும் அர்தமுண்டாக்கும் ஒரு நாளாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் நிறைந்த ஒரு பண்டிகை. இந்த நாளில், நாம் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகிறோம். கிறிஸ்து, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, நமக்கு மீட்பை அளித்தார். அவர், நமக்கு என்றென்றும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தார்.

22 December 2023

வினோதாவின் கனவு- சிறுகதை

பகுதி 1: கனவுகள் மோதும் கடல்கள்

வினோதா, யாழ்ப்பாணத்து கிராமத்தில் வாழ்ந்த இளம் பெண். கடற்கரையில் விளையாடிய சிறு வயதில், அலைகளில் ஊஞ்சல் ஆடிய கனவுகள், வானத்தை முத்தமிட எழும்பும் களிறுகள் போல அவள் மனதில் உயிர் பெற்றிருந்தன. அவுஸ்திரேலியா, அவளுக்கு ஓர் பச்சை ஓவியமாக, சொர்க்கமாகத் தோன்றியது. அங்கே சென்று வாழ்வது, சுதந்திரமாக பறப்பது என்ற லட்சியம், ஆழ்கடலின் அடியில் மறைந்திருந்த முத்துவைத் தேடும் யாத்திரை போல அவளை துரத்தியது.

ஆனால், கடலும் கரையும் சேரும் இடத்தில் எப்போதும் மோதல்கள் உண்டு. வினோதாவின் வாழ்க்கையில் ஓங்கியிருந்த வறுமை, கடலின் சீற்றத்துக்கு ஒப்பாக இருந்தது. அவள் குடும்பத்துக்கு, அன்றாட உணவைக் கொண்டுவருவதே போராட்டம். அவுஸ்டிரேலியாவிற்குச் செல்ல, குறைந்தது லட்சக்கணக்கிலான பணம் தேவை. சட்டப்பூர்வ வழிகள் சிக்கலான கடல் அலைகளாகத் தோன்றின.

14 December 2023

மக்கள் எங்களை நம்பி


 

13 December 2023

விவசாயி தோற்றால்


 

போதைபொருள் பாவனை பாடசாலையை ஆக்கிரமித்தால் என்ன செய்யலாம்?

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினைவிட, வாழ்வதற்கே அச்சுறுத்தலாக உள்ளதொன்றினை கண்டு பெரும் அச்சத்தில் உள்ளனர் மக்கள். அதுதான் ஆபத்தான போதைப்பொருள். போதைப்பொருள் பாவனையானது இன்றைய சமூகத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இவர்களில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

 போதைப்பொருளுக்கு அடிமையானதால் அவர்கள் பல்வேறு மனநோய்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கான காரணங்கள், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்குத் திரும்பும் அபாயம் போன்றன தொடர்பாக விடயங்களை நாம் இன்று நோக்கலாம் இக்கட்டுரையில்.

11 December 2023

இளைஞர்களை போதைக்கு இரையாக்கும் ஆபத்தில் இருந்து மீட்போம்.

இலங்கை மக்களின் சமூக வாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள கொடிய பயம் முழு நாட்டையும் சூழ்ந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலாகும். மக்களின் வாழ்வில் போதைப்பொருளின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் போதைப்பொருள் தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில், இந்த தொற்றுநோய் நாட்டில் விசாலமாகப் பரவியுள்ளது.

போதைப்பொருள் பரவலைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது, ஆனால் அவை வெறும் பிரச்சாரத் திட்டங்களாகவே இருந்தன. பெரும்பாலும் கோடிக்கணக்கான அரசின் பணம் செலவழிக்கப்பட்டு புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டன. போதைப்பொருள் சோதனைகள் மற்றும் கைதுகள் பெரும்பாலும் அந்தந்த அரசாங்கங்களின் நிகழ்ச்சிகளாகவே இருந்தன. இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் போதைப்பொருள் தொற்று இலங்கை முழுவதும் பரவியுள்ளது. இதன் பக்கவிளைவாக பாதாள உலக செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பாதாள உலகக் கும்பல்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்தும், சுதந்திரமாக வாழும் மக்களை சுட்டுக் கொன்று வருவதுடன், மக்களின் உயிர் அச்சத்தில் உள்ளதும் இதன் ஒரு பாரிய விளைவாகப் பார்க்கப்படுகின்றது.

10 December 2023

வரி விதிக்கும் மக்கள் தெரிவுகளால் விழிபிதுங்கும் சாதாரணமக்கள்!

சமீபகாலமாக அரசர்களின்; பிள்ளைகள் ஆட்சி செய்த காலம் தொட்டு இந்த நாடு மக்களிடம் இருந்து வரிப்பணம் செலுத்தப்பட்டு வருகின்றது என்பது இரகசியமல்ல. அவை பல்வேறு கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது, ஆனால் அவர்கள் பொதுவாக எல்லா மக்களிடமிருந்தும் அவற்றை வசூலிக்கவில்லை.; வாழ்வாதாரத்திற்குப் போதுமானதைத் தாண்டிச் செல்வத்தைக் குவிக்கும் மக்களிடமிருந்தும், அதுபோல அளவுக்கதிகமான சொத்துக்களை வைத்து, வரம்பற்ற செல்வத்தை ஈட்டும் பல்வேறு நபர்களிடம் இருந்தம் மாநில வரிகள் அறவிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த நியாயமான நிலை மாறி இன்று ஒட்டுமொத்த மக்களும் வரிச்சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

09 December 2023

குடியிருப்புக் குமார்

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்புக்கு தெற்கே, கமவாசம் வீசும் கலைகொஞ்சும் பதி தேத்தாத்தீவு அங்கேதான் குடியிருப்பு எனும் பூர்வீக அழகிய இயற்கை எழிலகொஞ்சும்; ஒரு சிறிய கிராமம் உள்ளது.

இங்குள்ள மக்கள் கமம் மற்றும் மீன்பிடியில் அதிகம் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தேத்தாத்தீவு கிராமம் வர தேவைப்படுகின்றது. 

அந்தப்பாதையின் இருமருங்கும் குளம் அமைந்துள்ளது. தேத்தாத்தீவு மக்கள் குடியிருப்பு மக்கள் பிரயோகிக்கும் பாதையின் இருமடங்கும் இரவு நேரங்களில் குப்பைகளைக்கொட்டி வருகின்றனர். 

இதனால் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் குடியிருப்புக்கிராம பாதசாரிகள். இக்குப்பைகளில் இருந்து வரும் துர் நாற்றம் இந்த மக்களுக்கு பல நோய்த்தொற்றுக்கு காரணமாகின்றது. குழந்தைகள் முதியவர்கள் செல்ல முடியவில்லை. அமைப்புக்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை ஏனெனில் அது ஏழைக்கிராமம். கல்வியில் பின்தங்கிய கிராமம். குளம் அசுத்தமடைகின்றது.

07 December 2023

அன்புடையவராய் இரு


 

05 December 2023

வாழ்க்கையில் அடுத்தநொடி


 

02 December 2023

உன்னுடைய பாதை


 

01 December 2023

மாணவர்களிடையேயும் எயிட்ஸ்நோய்: அவதானமில்லாமல் போனால் ஆபிரிக்காவாகப்போகும்!

கடந்த வாரம் வெளிவந்த ஊடக அறிக்கையின்படி சுமார் 485 புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் இந்த ஆண்டின் ஓக்டோபர் 31க்குள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிலும் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே அது இம்முறை அதிகரித்துள்ளதனை சுட்டிக்காட்டியுள்ளது. இது இவ்வாறிருக்க 2021 இன் அறிக்கைப்படி, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 411 ஆகவும் அது கடந்த வருடம் 2022 மட்டில் 607 ஆக அதிகரித்து வந்துள்ளதனையும் ஆபாய சமிக்ஞையாக காட்டியுள்ளது.

இன்று இலங்கையில் உள்ள ஊடகங்கள் பல உடனடி நடந்தேறுகின்ற கொலை, விபத்துக்கள், தற்கொலை, வீதிவிபத்துக்கள் என்பனவற்றினை பெரிதாகப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல ஏட்ஸ் மற்றும் கான்சர் போன்ற சிறுகச் சிறுகக் கொல்லும் ஆபத்துக்கள் பற்றி பேசுவது குறைவு. எமது எதிர்கால சந்ததியை சாக்கடையாக்கும் இக்கொடிய நோய்பற்றி பேசவேண்டியுள்ளது இன்று. அதற்கு இத்தரவுகள் போதிய ஆதாரமாக உள்ளதல்லவா.

வலுவூட்டுவோம் வாருங்கள்

மட்டக்களப்பின் பல பின்தங்கிய கிராமப்புறங்கள், கவனிப்பின்மை, பாராமுகம், வறுமை போன்ற இன்னோரன்ன போராட்டங்களுக்கு மத்தியில், எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு ஆழமான வாய்ப்பு அங்கு உள்ளது. தளராத அர்ப்பணிப்புடன், சிறு கிராமங்கள் மற்றும் பாடசாலைகளுக்குச் சென்று, நாளைய எதிர்காலத்தின் திறவுகோலைக் கொண்டிருக்கும் மற்றும் ஏக்கத்தில் வாழும் இளம் உள்ளங்களைத் தொடர்புகொள்வதில் எனது நேரத்தை செலவிடுகிறேன்.

காந்திநாகரில், இந்தக் குழந்தைகளில் சிறிய நேரத்தினை முதலீடு செய்வது என்பது பிரகாசமான, அதிக நெகிழ்ச்சியான சமூகத்தில் முதலீடு செய்வதாகும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

அவர்கள் மாற்றத்தின் விதைகள், அவர்களின் வளர்ச்சியை பாதுகாப்பது நமது கடமை. அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் பல இருந்தபோதிலும், அவர்களின் சூழ்நிலைகளை விட முன்னேறும்; திறனை நாங்கள் நம்புகிறோம். அவர்களுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம், அவர்களின் திறனை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் கனவுகள் மெய்ப்படும் மற்றும் அடையக்கூடியவை என்ற நம்பிக்கையை அவர்களிடம் விதைக்கிறேன். ஒன்றாக, இந்த குழந்தைகளுக்கு தடைகளை உடைப்பதற்கும்;, சாத்தியம் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வலுவூட்டுவோம் வாருங்கள்.

28 November 2023

பசிக்கு சட்டம் தெரியாது


 

26 November 2023

நம்பி முடிவெடு


 

22 November 2023

கல்வி செல்வம் சொல்திறன்


 

21 November 2023

அழகான விஷயம்


 

20 November 2023

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வேண்டாம் என்று கூறும் மக்கள், மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

பிபிசி சிங்களச் சேவை, இலங்கையில் உள்ள மருத்துவமனைகள் பற்றிய செய்தியை அண்மையில் தெரிவித்திருந்தது. அதாவது பிரித்தானிய சுகாதார சேவையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வைத்தியர்கள் இணைந்திருக்கும் 5 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது. 

இன்றய இலங்கை நோயாளிகளின் தலைவிதிக்காக நாங்கள் வருந்துகிறோம். இலவசக் கல்வியை அதிகபட்சமாகப் பயன்படுத்தி இலங்கைக்கு டாடா சொல்வது யார்? வரியை உயர்த்துவது அவர்களுக்கு பிரச்சனையா? லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும் வரி கட்ட வேண்டும் தாNனு இல்லையா? அதன் வரிகளை ஏய்க்க முடியுமா?. 

18 November 2023

நம்பிக்கையைக் கொடுங்கள்


 

14 November 2023

சிறியவர்க்கு உதவுங்கள்!


 

13 November 2023

வேறொருவரின் கருத்துக்கு காத்திருக்காதே!


 

ஆரச ஊழியர்களின் ஆபத்தை நீக்குமா பட்ஜெட் 2024?

இன்று இந்த நாட்டின் அர்ப்பணிப்புள்ள அரச ஊழியர்களின் அபிலாஷைகள் மற்றும் அக்கறைகளுடன் எதிரொலிக்கும் ஒரு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை பேச இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஆவர்களின் மாதம் ரூ.20,000 சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வெறும் நிதி நிவாரண கோரிக்கை மட்டுமல்ல் நமது தேசத்திற்கு அயராது சேவை செய்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் கூட.

புல நெருக்கடிகளுக்குள் அன்றாட வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் தேசத்தில், நமது பொதுமக்களின் உயர்ந்த அபிலாஷைகள், விருப்பம் மற்றும் கொள்வனவு சக்தி குறைந்துவரும் கடுமையான யதார்த்தத்தை பார்கின்றோம். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் ஒரு தெழிவான எடுத்துக்காட்டினை கூறுகின்றன. 

11 November 2023

நாட்டின் எழுத்தறிவு ஏன் வீழ்ச்சியடைந்துள்ளது


கல்வியே நமது தேசிய வளர்ச்சியின் அடிப்படை இருந்தாலும் 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்பதற்கிணங்க கைவினைப்பொருளை நன்கு கற்றுக்கொண்டால், அது எதிர்காலத்தை மட்டுமல்ல, முழு வாழ்க்கையையும் காப்பாற்றும். இன்று இருக்கும் நிலைமையில் எமது கல்வியில் முழு நம்பிக்கை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் கல்வியறிவு எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் இந்நாட்டின் கல்வியானது டியூஷன் மாபியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதொன்றே போதும்.

06 November 2023

மாறும்வரை காத்திராதே!


 

05 November 2023

உலகின் போதைப்பொருள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள்

போதைப்பொருள் என்பது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகும். இவை பல்வேறு வடிவங்களில் கிடைக்கக்கூடியவை. போதைப்பொருள் பாவனை என்பது மனித உடலில் இந்த பொருட்களை உட்கொள்வது ஆகும். போதைப்பொருள் பாவனையின் விளைவுகள் உடல் மற்றும் மனநலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாவது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாகும். உலகெங்கிலும், 15 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் போதைப்பொருள் பாவனையின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர்.

02 November 2023

ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

பெறுமதி அல்லது மதிப்பு கூட்டப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட வரி 2002 இல் இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, இது 19 முறை திருத்தப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவை வரிக்கு பதிலாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வுக்கு விதிக்கப்படும் வரி என்று கூறுவதில் தவறில்லை. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இலங்கையின் எல்லைக்குள் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த வரியின் எல்லைக்குள் அடங்கும். பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இறுதியில் நுகர்வோரால் சுமக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி குறித்த விவாதம் இப்போது எழுந்துள்ளது.

01 November 2023

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை விடவும் அச்சுறுத்தலான போதைப்பொருள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். ஆனால், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை விடவும் அச்சுறுத்தலான ஒரு பிரச்சினை இன்றைய சமூகத்தில் உள்ளது. அதுதான் போதைப்பொருள்.

போதைப்பொருள் பாவனை இன்றைய சமூகத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு மனநோய்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 October 2023

எல்லோரும் நல்லவர்களா


 

22 October 2023

நம்பிக்கையை கனவு காண்போம்


 

18 October 2023

கல்வியின் நோக்கம்


 

15 October 2023

இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல்வேறுபட்டவை. அவை வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வேறுபடுகின்றன.

வரலாற்று ரீதியான பிரச்சினைகள்

இலங்கையில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இடையேயான மோதல்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்த வரலாற்றைக் கொண்டுள்ளன. 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர், தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்தன. போர்த்துக்கீசியர்கள், பின்னர் ஒல்லாந்தர்கள், பின்னர் பிரித்தானியர்கள் என பல அந்நிய ஆட்சியாளர்கள் இலங்கையை ஆண்டனர். இந்த ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக தமிழர்கள் மற்றும் சிங்களவர்களை எதிராகப் பயன்படுத்தினர்.

11 October 2023

சுமக்கத் தெரிந்துவிட்டால்