எமது எதிர்கால விவசாய அபிவிருத்தியின் தேவை, அவற்றில் ஏற்படும் மாற்றம் அவற்றுக்கான தந்திரோபாயங்கள் என்பன பற்றிய எனது உரையாடல் ஒலி ஒளிப் பதிவொன்று.
Showing posts with label வீடியோ கலவை. Show all posts
Showing posts with label வீடியோ கலவை. Show all posts
14 October 2018
10 October 2018
சாரல் மழை ஒரு பக்கம் காரல் மழை மறுபக்கம்
இப்பொழுது மட்டு மண்ணின் கரையோரங்களில் உள்ள கரைவலை பாடுகள் உள்ள ஊர்களில் சிறியரக மீன்கள் அள்ளா கொள்ளையாக பட்டு நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. மக்கள் அவற்றை உண்ணுவதற்கு வாய்ப்பாக உள்ளது, ஏனெனில் பெரிய மீன்கள் பட்டால் பொரியலுக்கும் கிடைக்காமல் அவ்வளவு மீன்களையும் மாற்றான் உண்டுமகிழ ஏற்றிவிடும் நடைமுறை, எமது வளத்தைப் பயன்படுத்தி நாம் நிறைவு காணமுன் ஏற்றுமதி செய்யும் நிலை நிறுத்தப்படனும்.
22 April 2018
27 January 2018
புதிய மாற்றம்!
காக்காச்சிவட்டை அறநெறி மாணவர்களுக்கு அறநெறி சார்ந்த போட்டிகளின் பின் சான்றிதழ் வழங்குதலும் ஊக்குவித்தலும் இடம்பெறும் தருணம்!
11 March 2010
தேனூர் சிட்டுகளின் குழு நடனம்
நம்ம சின்னஞ் சிறுசிகளுக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தும் அவங்கள பறைசாற்றும், முன்னுக்கு கொண்டுவரும் எவரும் இருக்கிறார்களா என்றால் கேள்விகுறியாகவே இருக்கிறது.. இதனால் நான் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இவங்கள உங்கள் வாசலில் மலர வைக்கிறேன்..
>
24 February 2010
நவரச நாயகன்..
மட்டு நகரின் தெற்கே கடல் வளமும், நிலவளமும் கொழிக்கும் தேனூர் என்றழைக்கப்படும் தேத்தாத்தீவில் கலையருவி பாய்ந்தோடுவது சிறப்பு. கலாலயா கலைக்களகம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முதல் இவர்கள் தான் எங்கள் கீரோக்கள், நடிகர் திலகங்கள் எல்லாமே. சடங்கு, திருவிழா மற்றும் வருடப்பிறப்புகள் என்று வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டமுங்க...இவர்கள் நாடகத்தின் நாடிபிடித்தவர்கள், வில்லிசையில் நாண் பிடித்தவர்கள். நவரசம் பொங்க இவற்றை படைத்த படைப்பாளிகளில் கந்தையா -நவரட்ணம் ஒரு பெரிய முன்னோடி..பெயர்பெற்ற இந்த கலைக்களகத்தின் மூத்த கலைஞரான நரன் என்று செல்லமாக அழைக்கப்படம் நாராயணம் அவர்களின் வயிறு குலுங்க வைக்கும் பாடலை எங்கள் கொம்புச்சந்தி கலையகம் படைத்து உங்களுக்கு சமர்ப்பிக்கிறது... இனி வருங்காலங்களில் ஆக்கபூர்வமான படைப்புகளை தர உங்கள் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம்.
20 February 2010
தேத்தாத்தீவு அழகான களரியம்மா!
தேத்தாத்தீவு என்றாலே கலை, கல்வி நம்ம பண்பாடு எல்லாமே ஞாபகம் வரும் அல்லவா. உன்மையில் "என்னதான் என்றாலும் நம்மூரு போலவருமா!" என்றதுக்கு சான்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. கிராமிய வாசனை நுகர உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம், நீங்கள் நம்ம ஊரில இருக்கிறதா உணரவேண்டுமா இதைப்பாருங்க! இதை யாழ், இசைத்துறை இளமானி த.வாகீசன் அழகாகப் பாடித்தர நம்ம கொம்புச்சந்தி கலையகம் தயாரித்து பெருமையுடன் இதனை வெளியிடுகின்றனர்....
">
">