ADS 468x60

Showing posts with label ஆண்மீகம்.. Show all posts
Showing posts with label ஆண்மீகம்.. Show all posts

25 December 2025

"தேவ கானங்கள்" இசைப் படைப்புடன் உங்கள் ஆசீர்வாதங்களைப் பெற!

 அன்பான நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த ஆனந்தம் பொங்கும் நாளில், எங்கும் மகிழ்ச்சி பரவி, உங்கள் இல்லங்கள் அமைதியினாலும், அன்பினாலும், ஆசீர்வாதங்களினாலும் நிரம்பட்டும். தேவனின் அளவற்ற அன்பு உங்கள் வாழ்வில் ஒளியூட்டட்டும்.

என்னுடைய அன்புப் பரிசு: "தேவ கானங்கள்" 

இந்த நன்னாளினை மேலும் சிறப்பிக்கும் விதமாக, நான் இயற்றிய மூன்று பாடல்கள் அடங்கிய "தேவ கானங்கள்" இசைப் படைப்பினை இன்று வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். இந்தப் பாடல்கள் நம் ஆண்டவரின் கருணையையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் உங்கள் இதயங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

29 September 2025

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் விஜயதசமி

  1. தசரா என்பது இந்தியாவின் பிரமாண்டமான கொண்டாட்டங்களின் மூலம் வெளிப்படும் ஆழமான ஆன்மீக, கலாசார ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது.

  2. குலசேகரன்பட்டினம், மைசூர், கொல்கத்தா, டெல்லி போன்ற வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாறுபட்ட வழிபாட்டு முறைகள், இந்தியாவின் புராணக் கதைகளின் பன்முகத்தன்மையை உலகிற்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

  3. நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய உடைகள் மற்றும் உள்ளூர் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இந்த விழாக்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.

  4. மைசூர் 'நாடா ஹப்பா' போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற கொண்டாட்டங்கள், தேசிய மரபுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கங்கள் உணர்ந்துள்ளதை வலியுறுத்துகின்றன.

12 May 2025

சித்திரா பௌர்ணமி: ஈழத்தமிழர்களின் ஆன்மிகமும் பண்பாட்டுப் பிணைப்பும்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு, தனித்துவமான தமிழ்ப் பண்பாட்டு மரபுகளையும் ஆன்மிக விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பிரதேசம். இங்கு, தமிழ் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி திதிக்கு சிறப்பான இடமுண்டு. தமிழ் மதத்தில் பௌர்ணமி பொதுவாகவே வழிபாட்டிற்குரிய நாளாகக் கருதப்பட்டாலும், சித்திரை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் சித்திரா பௌர்ணமி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில், களங்கமற்ற பூரண நிலவானது பூமிக்கு மிக அருகில் காட்சியளிப்பதும், சூரியனும் சந்திரனும் முழு நீசம் பெறுவதும் விசேடமாகக் கருதப்படுகிறது. இத்தகைய ஒரு புனித நாளில், மட்டக்களப்பு மக்கள் சித்திரகுப்தனை வழிபடுவதும், சித்திரைக் கஞ்சி அருந்துவதும் பல தலைமுறைகளாகத் தொடரும் ஒரு அழகிய பாரம்பரியமாகும். இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி மே 12, 2025 அன்று கொண்டாடப்படுகிறது.

04 May 2025

களுவாஞ்சிகுடி மக்களின் செயற்பாடு கண்கலங்க வைத்துவிட்டது கொம்பன் யானையில் கொடி சுமந்தோம்.

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய வருடாந்த பிரமோட்சவத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடக்கிற அந்த நாள்... என் மனசுல ஒரு பெரிய சந்தோஷம் பொங்கி வழியுது. வருஷம் முழுக்க இந்த நாளை எதிர்பார்த்து காத்துக்கிடப்போம். எங்க ஊரு பிள்ளையாருக்கு திருவிழான்னா அது ஊருக்கே ஒரு பெரிய கொண்டாட்டம்.

13 April 2025

'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரங்கள்- 2025


தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு முதன்மையானது. இந்த இனிய திருநாள் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் இந்த நன்னாள், "சித்திரை திருநாள்" என்றும் போற்றப்படுகிறது. சூரியப் பொங்கல் காலத்துக்குப் பின் வரும் இந்த நாள், தமிழ் நாட்காட்டியின் சித்திரை மாதத்தின் முதல் நாள் என்பதால், தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

13 March 2025

மாசி மகம்: இவ்வளவு சிறப்புண்டா? அட இத மிஸ்பண்ணலாமா

ஆன்மீகத் தூய்மையின் உறுதியளிக்கும் புனித நாள்

இலங்கையில் பண்டைய காலத்திலிருந்து இந்து பண்பாட்டு மரபுகளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் புனித நிகழ்வுகளில் ஒன்று மாசி மகம். இது ஒரு முக்கியமான தீர்த்த திருவிழாவாக கருதப்படுகிறது, குறிப்பாக முற்கால சித்தர்கள், ரிஷிகள் மற்றும் புனிதர்கள் வழிபட்ட ஒரு பரம பாக்கிய நாளாக விளங்குகிறது.

தமிழ் மாதமான மாசியில் (பிப்ரவரி - மார்ச்) மகம் நட்சத்திரம் வரும் போது, இதனை மிகுந்த பக்தியுடனும், ஆன்மீகத் தூய்மையுடனும் கொண்டாடுவதை பரம்பரையாய்த் தொடர்ந்து வருகிறோம். இலங்கையின் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், இந்த நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

24 February 2025

அன்னதானமும் வீண்விரயமும்- நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

தமிழர் பண்பாட்டு விழாக்கள் என்றாலே கோலாகலமான கொண்டாட்டங்கள், உற்சாகமும், நன்மதிப்பும் நிறைந்த நன்னாள்கள். பண்டைய காலத்திலிருந்தே தமிழர்கள் தங்களது திருவிழாக்களை மிகுந்த உணர்வுடன், அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒப்பற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தார்கள். மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இந்த விழாக்கள் பக்தியுடனும், தாராள மனப்பான்மையுடனும், வரும் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறி விருந்தோம்பும் அழகிய மரபுடனும் இடம்பெற்றன. இதனால் மட்டக்களப்புக்கு வந்தோரை வாழவைப்போர்” என்ற புகழ்மிக்க அடைமொழி உரியதாக உள்ளது.

14 January 2025

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

"தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்"

என் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த, மகிழினிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நம் நாட்டில் எந்த நல்ல செயலையும் தை மாதத்தில் துவங்குவது என்பது மரபு. தை மாதத்தின் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும், திருநாள் ஆகும். இது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் கொண்டாடப்படுகின்றது. அறுவடையால் பெற்ற பலனுக்காக கடவுளர்க்கு நன்றி தெரிவிக்கும் முறையில் இம்மாதத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

27 December 2024

நவீன உலகில் மனித நேயத்தின் வீழ்ச்சி: ஆன்மிக சமுதாயத்தின் மீளுருவாக்கம் தேவை

ஆலயங்களில் நிதி மோசடி, வெளிப்படைத்தன்மையின்மை, பதவிமோகம், அரசியல் ஈடுபாடு, இயற்கை வளங்களை லயத்தின் பேரால் அழித்தல், தேவைக்கு அதிகமான விழாக்கள், செலவுகள் என்பன எதையும் வளர்த்துவிடும் திட்டமில்லாத மாற்றங்களே. ஆகவே ஆன்மிக வளத்தை மீண்டும் பெற சிறந்த திட்டங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

இன்றைய உலகம், மனித நேயத்தை பெரிதாக மதித்து வருவதில்லை. பணம், அதிகாரம், மற்றும் சமூகப் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கின்ற ஒரு சுயநலமிகு சூழல் நிலவுகிறது. ஆனால், நம்முடைய வளர்சி என்பது வெறுமனே பொருளாதார ரீதியில் மட்டுமே இருக்கக்கூடாது, ஆன்மிக ரீதியிலும் வளர்ந்து இருக்க வேண்டும்.

நாம் தற்போதைய சமுதாயத்தின் ஆன்மிக வீழ்ச்சி குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்விதம் நகராமல் இருந்தால், எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களின் அடிப்படையில் தடைகள் உருவாகக் கூடும். ஆன்மீகம் பல இடங்களில் அட்டகாசமாக மாறியுள்ளதனை நாளுக்கு நாள் அவதானித்து வருகின்றோம்.

10 July 2024

களுதாவளைச் சுயம்புலிங்கர் பேராலயம் ஒரு ஆன்மீக நிறுவனமாகும் கனவு!

 இந்துசமுத்திரத்தின் முத்தான இலங்காபுரியின் கிழக்கே, இராவணன் இருந்தாண்ட பூர்வீக மண்ணின் தெற்கே, மீன்பாடும் தேன்நாடான மட்டக்களப்புக்கு தெற்கே, வங்கக் கடல் அலைமோத, வற்றாத வாவிமகள் வளைந்தோட, வெற்றிலையும் வேளாண்மையும், வெற்றி கொண்ட தமிழ் மக்களும் செறிந்திலங்கு களுவைநகரில் சுயம்பாக வந்தமர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க களுதாவளைச் சுயம்புலிங்கப்பெருமானின் பொற்பாதம் பணிந்து ஒரு கட்டுரையினை எழுதுகின்றேன்.

'களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க-அங்கு 

கணநாதன் சந்நதியில் நின்று பாருங்கள் 

ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது

ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க' 

எழுத்தினை இப்படி துவங்குகின்றேன். எனது சிறிய வயசில் பசுமரத்தாணிபோல் பதிந்த பல விடயங்களில் என்னுடைய அம்மம்மாவின் பாசம் அன்பு என்பவை மறக்கமுடியாதது. ஆம் எனது அம்மம்மா என்னுடனும் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் ஒரு இறை நம்பிக்கைகொண்டவர். அவர்; பார்ப்பதற்கு எப்பொழுதும் நெற்றி நிறைய நீறணிந்து, சுத்தமாக உடைதரித்து மங்கலமாக இருப்பார்.

01 March 2022

சிவராத்திரி என்ன மகிமையை உடையது?

சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம். இந்த உலகில் நன்மை தீமைகளைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான். தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. 

சரி, சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபசேகங்களும், நான்கு கால பூஜைகளும்தான்.

அதையும் தாண்டி நாம் பலவற்றினை அறியவேண்டியுள்ளது. பாருங்கள், யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம்.

04 December 2020

அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை.


கடவுள் பக்தி மாத்திரமா நமது வாழ்வாதாரமும் இன்று நம்பிக்கை சம்மந்தப்பட்டது. ஆம் இன்று இந்த கொவிட்-19 பலரை நம்பிக்கை இழக்க வைத்திருக்கிறது. இதனால் கடவுளையே கைத்தடியாகப் பிடிக்க நாடியவர்களும் இருக்கின்றார்கள் கைவிட்ட கடவுளை வெறுத்து ஓடியவர்களும் இருக்கின்றார்கள். எது எவ்வாறிருப்பினும் இன்றய காலகட்டத்தில் ஆண்டவனை கூப்பிடுபவர்கள் அதிகமாயிட்டார்கள். அதேபோல் அறிவியலை அள்ளிப்பிடிப்போரும் கூடிப்போச்சி. காரணம் காலமாற்றம்தான். 

ஆகவே, முதலிலேயே ஒன்றைத் நான் தெளிவாக்கிவிடுகிறேன். நான் நாத்திகனும் அல்ல. பகுத்தறிவு பாசறை பக்கம் தலை, கால் வைத்துப் படுத்ததும் கிடையாது. படுக்கும் உத்தேசம் துளிக்கூட இல்லை. இதைக் கேட்டுவிட்டு 'கடவுளை நிந்திக்கிறாயா' என்று குடையாதீர்கள். மதத்தில் மண்வைக்கிறாயா என்று மிரட்டாதீர்கள். 'கடவுள் கண்ணை குத்தும்' என்று கவலை கொள்ளாதீர்கள்;. நம்மில் பலருக்கு பக்தி என்பது வேலைக்காரனைக் கூப்பிடும் அளவுக்கு வெரி; சிம்பிளாகப் போயிற்று.

13 November 2020

இப்படித்தான் இம்முறை தீபவளி இருக்கவேண்டும்!

நண்பர்கள் மற்றும் வெள்ளிச்சரம் வாசகர்கள் அனைவருக்கும் முதலில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

இது பண்டிகைக்காலம் அதனால் நீங்கள் தீபாவளி கொள்வனவு செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கொரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித, சமுக இடைவெளியைக் கட்டாயம் கடைப் பிடியுங்கள். கடையில் மற்றவர்கள் மறந்தாலும் வாங்கச் செல்லும் நாம் மறக்கவே கூடாது.

நீங்கள் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். எந்தக் கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாலும், கடைக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வரும்போதும் கட்டாயம் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய தவறாதீர்கள்.

01 January 2020

வெள்ளிச்சரத்தின் ஆங்கில புதுவருட நல்வாழ்துகள்!

அனைத்து வெள்ளிச்சர வாசக நெஞ்சங்களுக்கும் எனது அன்பு நிறைந்த ஆங்கில புதுவருட நல்வாழ்துகளை தெரிவிப்பதனில் மனநிறைவடைகின்றேன். நாம் வாசிப்பதனையும் எழுதுவதனையும் இலகுபடுத்த பல தொழில் நுட்ப வசதிகளை உலகத்தில் தருவித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனை எம்போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளவர்களட அரிதாகவே பயன்படுத்தி வருவது அதிகரிக்கப்படவேண்டும். எமது மாணவர்கள், எழுத்தாளர்கள் தமது ஆக்கபூர்வமான படைப்புக்களை படைக்கவென இலவச தளங்கள் அதிகம் உள்ளன. அவற்றை நாமும் பயன்படுத்தி பிறரினையும் பயன்படுத்த ஊக்கப்படுத்தி புதிய ஆண்டில் எமது சமுகத்தின் அத்தனை சிக்கல்களையும், பிரச்சினைகளையும் அடையாளங் கண்டு அவற்றிற்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதனூடாக நமது சமுகத்தினை வளர்சிபெறச் செய்ய உறுதிகொள்வோம்.

07 July 2019

கதிர்காம பாதயாத்திரை: முருகன் அழைத்தால்தான் போகலாம்!-01

காலைப் பொழுது 'பில் பில்' என விடியத்துவங்கியதும், 'கரார் கரார்' என வீட்டின் வெளியே ஒரே சத்தம்.  வானொலிப் பெட்டி வெளியில் பக்திகானங்களை ஒலித்த வண்ணம் இருந்தது. 

'இஞ்சே உரிச்ச தேங்காயெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு சும்மா பாத்திட்டு இருக்காம அதுக்கு முடிகூட்டி எடுங்க பாப்பம்' என அம்மா அப்பாவுக்கு கட்டளை இடுவதுமாக ஒரே பரபரப்பாக இருப்பதை உணர்ந்து, நானும் நேரகாலத்துக்கு எழும்பி வெளியில் வந்தேன்.

17 April 2019

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய ராகசாகரம் இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோடசவத்தினை முன்னிட்டு என்னால்; கொம்புச்சந்தி பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டாவது இ
றுவட்டான 'கொம்புச்சந்தி ராகசாகரம்' தழிழ் சிங்களப்புத்தாண்டு தினத்தில் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவர் த.விமலானந்தராசாவின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

19 July 2017

ஆசை கொள்ளவைக்கும் தேத்தாத்தீவு பாமுருகன் ஆலயம்.

நிலவினை விரித்த வெள்ளை மணல் அருகே நித்திரை கொள்ளவைக்கும் மதிரை நிழல்;  சுற்றி நெல் சொரியும் வயல்வட்டை எங்கும் நெஞ்சினை தாலாட்டும் குளங்குட்டை;  கூடி குரவைபோடும் நாரைகள் சுற்றி பாடி இரையைத் தேடும் பருந்துகள்; விரிந்து சிரித்திருக்கும் கார்த்திகைப்பூ எங்கும் விழுந்து கிடந்திருக்கும் நாவற்ப்பழம்; அலை கொண்டு தாலாட்டும் ஆற்றங்கரை அருகே உவர்ப்பள்ளிச் சொரியும் உப்புத்தரை; சில்லென்று அலைமோதும் வில்லுக்குளம் அதில் அதில் சிலுசிலென விளையாடும் மீன்கூட்டம்;  இது பழகியோர்க்கு மட்டும் பயத்தை நீக்கும் காடு  அதுதான் இன்று பாலமுருகன் உறையும் பால்மணல் மேடு.

01 July 2017

அதிசயமாய் அமைந்த ஸ்ரீ பால முருகன்...

பெரிய அடர்ந்த காடு, வில்லுக்குளத்தின் ஓரங்காரங்களில் ஓங்கி வளர்ந்த மதுரை மரங்களின் இடையே முளைத்து நின்ற பற்றைக்காடுளினுள் ரீங்காரமிடும் சில்லூறுகள், சீனிக்கற்கள் போல் பால் மணல் மண்ணில் உயர்ந்த நாவற்சோலை, அதன் அருகே பெரியவட்டி, சின்ன வட்டி, உப்பு வட்டிக்குளங்களின் பசுமையின் அரவணைப்பில்; பாடித்திரியும் பறவையின் ஒலி, பக்கத்தில் ஆலையடி முன்மாரிக்கண்ட வயல் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பயங்கொள்ள வைக்கும் நிஷப்த இடம்.

16 June 2017

நம்புங்கள் முருகன் நல்லவன் .


நான் சிறு வயதில் அப்பாவுடன் மாரிப்போக வேளாண்மை செய்வதன் நிமித்தம், ஆலயடி முன்மாாிக்குள்ள உழவுவதற்காக கலப்பையை கொழுவி இரண்டு வெள்ளை மாடுகளை விரட்டிக்கொண்டு மதிரங்கேட்டியை மரத்தில் வெட்டி எடுத்து, காலைவேளையில் கட்டோரமாக வில்லுக்குளம் நோக்கி நடந்த நாட்கள் ஞாபகம் வருது.

17 March 2017

அற்புதம் பல கூறும் கதிர்காம யாத்திரை,


இப்பொழுது அடியவர்கள் எல்லாம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற தலமான கதிர்காமத்துக் வனங்களின் மத்தியால் நடந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில்இ சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும்இ போரில் வென்றப் பின்னர்இ இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.