ADS 468x60

30 June 2023

சொந்தக் காரனெல்லாம் நண்பர்களைப் போல் வருமா!


உறவெல்லாம் உண்மையான உறவாகுமா

உதவாத இதயமெல்லாம் நட்பாகுமா
செலவெல்லாம் உள்ளபடி வரவாகுமா
செல்வமெல்லாம் உயிர்போல உறவாடுமா

முல்லைக் கொடி வாடுதென்று தேரைக்கொடுத்தான்
பிள்ளைக் கறி ஆக்கி பசி தீரக்கொடுத்தான்
பொருள் பணம் வந்துபோகும் அன்பு வருமா சொந்த அன்பு வருமா
தரும் மனம் உள்ளவரே உறவாகுமே இரத்த உறவாகுமே

நெல்லு விளைய நிலங்கள் என்றும் நிதி கேட்குமா
புல்லு விளையும் நிலங்களெல்லாம் உறவாகுமா
பேருக்கு இருப்பதெல்லாம் சொந்தமாகுமா பெரிய சொந்தமாகுமா
பிறப்பாலே இல்லாவிடினும் உள்ளம் போதுமே அன்பு உள்ளம் போதுமே

26 June 2023

அரசியலில் நிவாரண மாற்றம் ஒரு சிக்கலான காலகட்டமே!

அந்நிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலிருந்து இலங்கை மக்கள் இழந்தது ஏராளம். ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு, அவர்கள் பெரிய அளவில் வர்த்தகத்துக்கான தோட்டங்களை ஊக்குவித்தனர். மலையகப் பகுதிகளில் தேயிலை, இறப்பர் மற்றும் கோபி அதிகளவில் பயிரிடப்பட்டது. அதனால்தான் 1812ல் ஐரோப்பியர்களுக்கு இலவச விளைச்சல் நிலம் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. 

பெருந்தோட்டப் பொருளாதாரம் புத்துயிர் பெற்ற போதிலும் உள்ளூர் மக்களை விட வெளிநாட்டவர் கைகளில் காணிகள் கையகப்படுத்தப்பட்டமையினால் இந்நாட்டு மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

25 June 2023

சமுர்திக்கு என்ன நடந்தது?

உலக வங்கியும், உலக உணவு அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில், 2019ல் நம் நாட்டில் 30 லட்சம் ஏழைகள் உள்ளனர். ஆந்தத் தொகை இதுவரை 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் வறிய மக்களுக்கு நிவாரணம் என்ற திட்டத்தை ஆரம்பித்து மீண்டும் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமுர்த்தி திட்டத்திற்கு பதிலாக தற்போதைய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அஸ்வசும திட்டத்தினால் நிவாரணத்திற்காக மானியம் கிடைக்காமல் தவிக்கும் குழுக்களுக்கு நாடு பூராகவும் அஸ்வசும மானியங்கள் கிடைக்காத நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்.

24 June 2023

இலங்கை பிச்சைக்காரர்களது நாடா? ஒரு ஆய்வு

பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை 85000 முதல் 100000 வரை அதிகரித்துள்ளது!

கொழும்பு காலி முகத்திடலில் இருந்து 150 முதல் 200 பிச்சைக்காரர்களை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரிதியகமவில் உள்ள பிச்சைக்காரர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

நமது நாடுபற்றி இன்று பல பொருளியலாளர்கள் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி மக்களை தெழிவுறுத்தியவண்ணம் உள்ளனர். நானும் எனது வாழ்வில் மக்களுக்கு பிரயோசனமான பல ஆக்கங்களை எழுதிப் பணிசெய்கின்றேன். இன்று ஒரு வித்தியாசமான ஆக்கத்தினை உங்களுக்கு வழங்க முன்வந்துள்ளேன்.

அதில் இரண்டு விஷயங்கள் உள்ளன: வாழ்வதற்காக உண்பது மற்றும் சாப்பிடுவதற்கென்றே வாழ்வது. அதுபோல வாழ்வதற்காக பிச்சை எடுப்பது, பிச்சை எடுப்பதற்காக வாழ்வது என இரண்டு விஷயங்கள் உள்ளன. இந்த நிலையில் இலங்கையில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. 

15 June 2023

உணவுப் பாதுகாப்புக்காக விவசாயிகளை ஊக்கப்படுத்தவேண்டும் முதலில்.

 ஒரு காலத்தில் உணவு உற்பத்தியில் அதன் மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்த ஒரு நாடாக இலங்கை இருந்தது, அந்த அரசு குளங்களைக் கட்டுவது மற்றும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு போதுமான நீர் இருப்பதை உறுதி செய்வது போன்றவற்றை நிறைவேற்றி வந்தது.

இவற்றுக்காக அரசர்கள் மக்களிடம் இருந்து வரிகளை வசூலித்தனர், அதுவே அந்த அரசன் அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பிற்கு குடிமக்கள் செலுத்தும் விலையாக இருந்தது. நமது இலங்கை ஒரு தீவாக இருப்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எளிதான இலக்காக இருந்தது. இந்த நாட்டின்  வரலாற்றாசிரியர்களால் தயாரிக்கப்பட்ட பண்டைய வரலாற்று புத்தகங்கள் மற்றும் இலக்கியங்கள் நாட்டைப் பாதுகாப்பதும் பாதுகாப்பை உறுதி செய்வதும் மன்னனின் கடமை என்று கூறுகின்றன. அப்போது சாதி அமைப்பு நிலவியது, விவசாயத்தை நம்பி குடும்பங்கள் இருந்தன. மற்ற உயர்குடி குடும்பங்கள் பாரம்பரியமாக நிதியைக் கையாள்கின்றன. ஆனால் இந்த அமைப்பு எங்களைப் போன்ற ஒரு சிறிய தீவில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க நன்கு வேலை செய்தது.

01 June 2023

பசியுள்ள வயிறு