ADS 468x60

19 March 2022

நெருக்கடியால் நிலைதடுமாறி நிற்கும் இலங்கை: மீளுமா!

இந்துசமுத்திரத்தின் முத்து, அன்று இராமாயணம் தொட்டு அல்ல இன்று வரை அழகைக் கொட்டி உருவாக்கப்பட்ட குட்டி தேசம் என்றெல்லாம் போற்றப்படும் இலங்கை. நாலா பக்கம் கடல்கள், மலையகத் தோட்டங்கள், பசுங்காடுகள் எனச் செழுமையான நாடு நம்ம நாடு. ஆனால், உள்நாட்டுக் குழப்பம், போர் என பாதிக்காலம் போன நிலையில், இன்று பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவித்து, ஏனைய நாடுகளிடம் அடகுவைக்கும் நிலைக்கு இலங்கை சென்றுவிட்டது.

12 March 2022

பெண்கள் நுண்கடனை திருப்பிச் செலுத்தாமைக்கு அவர்களை அடகுவைக்கலாமா!

வாழ்வாதாரத்தை உயர்த்தி கஷ்ட நிலையை போக்குவதற்காக வழங்கப்பட்ட நுண்கடன் இன்றைய நிலையில் பெண்களின் வாழ்வாதாரத்தையே பாழ்ப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் சமூக சீர்கேடுகளும் நிலைமாறுதல்களும் குறிப்பாக தமிழ் பெண்களை சீரழித்துள்ளது எனலாம். இக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களையே ஆக்கிரமித்துள்ளன.

எமது நாட்டில் நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற்றப்பட்டுஇ பெற்றுக்கொண்ட கடனை செலுத்தமுடியாத பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

08 March 2022

மகளிர் தினத்தில் எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம்?

தாய் இ சகோதரி, மனைவி, மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான்.

நாம் வசிக்கும் நாடு கூட 'தாய் நாடு' என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என. முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துஇ சிறந்து விளங்குகின்றனர்.

பெண்கள் என்றால், வீட்டு வேலை செய்வது, அதிக பட்சமாக ஆசிரியர், செவிலியர் பணிக்குத் தான் என்ற எழுதப்படாத சட்டம் மாறிவிட்டது.விமான பைலட், ரயில் இன்ஜின் டிரைவர், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி, கம்ப்யூட்டர் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவது என, பெண்கள் தனித்துவமாக விளங்குகின்றனர்.

நீடித்த பால்நிலை சமத்துவத்தில் பெண்களுக்கான முன்னுரிமை.

 இன்று உலகம் எப்போதையும் விட நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய், சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள், மனித உரிமைகளுக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான காலநிலை நெருக்கடி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து இந்த உலகமும் மற்றும் அதன் சமூகமும் இன்னும் மீழவில்லை. இதனால் நமது சமூகங்கள் மற்றும் அமைப்புகளில் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக, இந்த உலகளாவிய சிக்கல்கள் தனிநபர்களையும் குழுக்களையும் வித்தியாசமாகவும்  சில சமயங்களில் மிகவும் ஆழமாகவும் பாதிக்கின்றன.

07 March 2022

பாலின சமத்துவத்திலே நிலையான அபிவிருத்தி தங்கியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் பாலினப் பாகுபாடு பெரிதாக இருந்து வந்திருக்கவில்லை. இந்த நாட்டில் பெண்களை ஒரு மதிப்புக்குரியவர்களாகவே பார்த்துவந்துள்ளனர். இருப்பினும் அதையும்தாண்டி முன்னேறி வரும் நாட்டில் அவர்கள் பல இன்னல்களை உலகமயமாதல் சூழலில் அனுபவித்து வருகின்றனர். அது இந்த தொற்றுச் சூழலில் மிகவும் இறுக்கமடைந்தள்ளது. அந்தவகையில் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாலினங்களையும் பாதிக்கும் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், இது இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளது, இந்தநிலையில் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை உலகம் முழுவதும் 'நாளைய நிலையான அபிவிருத்திக்கான இன்றய பாலின சமத்துவம்' என்ற தொனிப்பொருளில் கொண்டாடிவருகின்றது.

01 March 2022

சிவராத்திரி என்ன மகிமையை உடையது?

சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம். இந்த உலகில் நன்மை தீமைகளைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான். தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. 

சரி, சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபசேகங்களும், நான்கு கால பூஜைகளும்தான்.

அதையும் தாண்டி நாம் பலவற்றினை அறியவேண்டியுள்ளது. பாருங்கள், யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம்.