ADS 468x60

30 September 2021

நமது இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்?

அரசியல் பற்றிய புரிதல்

ஓ! இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்றார் அப்துல் கலாம்.

இலங்கையில் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. உரிமைப் போராட்டம் ஆகட்டும், போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், அரசின் வேலையில்லாக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.

07 September 2021

வெளிநாடு சென்றாவது கல்வியைத் தேடு!

கொரோணா எனும் கொடிய நோய் எல்லாவற்றையும் விட கல்வித்துறையில் பல தலைகீழ் மாற்றங்களை உண்டுபண்ணி இருக்கின்றது. கொரோனா காரணமாக கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்; மூடப்பட்டுக்கிடக்கின்றன. வகுப்புறைப் பாடங்கள் இணைய வழியே நடத்தப்படுகின்றன. பாடசாலைகள், பல்கலைக்கழக படிப்பு என்பது பாடங்களை மட்டும் தெரிந்துகொள்வதற்கானது அல்ல, மற்றவர்களுடன் பழகுதல், நிகழ்வுகளில் ஒன்றிணைதல், சமூகத்தைப் புரிந்துகொள்ளல் போன்ற அனுபவங்களையும் உள்ளடக்கியது.

 அந்தவகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வழியிலான அனுபவத்தை மாணவர்கள் இழந்துள்ளனர். அப்படியென்றால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் நிலைமைதான் என்ன? அவர்களுக்கும் இணைய வழியில்தான் வகுப்புகள் என்றால், வெளிநாடு சென்று படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?' என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என பலரும் கூறினர். ஆனால், சமீபத்திய செய்திகள் நமக்கு வேறொரு உண்மையைச் சொல்கிறது.

05 September 2021

யார் பொறுப்பு? விவசாயி – நுகர்வோர் - அதிகாரிகள்.

இன்று நாடு முடக்கப்பட்டிருக்கின்றது, வர்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இருப்பினும் சாதாரண மக்கள் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசாங்கம் பலவகையிலும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது. 

உண்மையில் என்ன நடக்கின்றது? விவசாயிகள் எந்தவித தடையுமின்றி விவசாயத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவசாய உற்பத்திகளை தங்குதடையின்றி கொண்டுசெல்லவும் அவற்றைச் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.