ADS 468x60

30 August 2022

கடினமான சூழலிலும் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களின் மனத் தைரியம்!

கடந்த பரீட்சை முடிவுகள், நாட்டின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையான ஒரு சமிக்ஞையை வெளியிடும் அதிஷ;டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது எதிர்காலம் நம் குழந்தைகள். குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மற்றும் கொடுக்க வேண்டிய மிக மதிப்புமிக்க சொத்து கல்வி என்பதனை நாம் அறிவோம். ஒரு சமுகத்தின் அறிவு என்பது அதன் மூலதனம். ஒரு நாட்டின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான காரணியாக தேசிய கல்வி அறியப்படுகிறது. கல்வியின் முன்னெடுப்பு தோல்வியுற்றால், எதிர்கால இலக்குகளை அடைவது கடினம். கல்வியின் இடையூறில்லாத செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தால், எதிர்கால இலக்குகளை அடைவது எளிது.

28 August 2022

வரலாறு சொல்லித்தரும் எமக்கு முன்னுள்ள ஆபத்து! ஊட்டச்சத்து கூட்டப்படுமா?

'கொரோனாவால் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு 7 பேர் உயிரிழக்கின்றனர். பட்டினியால் உலக அளவில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கின்றனர். உலக அளவில் கடந்த ஆண்டு பட்டினி, உணவுப் பாதுகாப்பின்மைஇ பஞ்சம் போன்ற காரணிகளால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது அது உலக அளவில் 15.5 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள் உலக அளவில் வறுமையையும், பட்டினியையும்இ பஞ்சத்தையும் எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் முக்கியக் காரணமாக இருக்கிறது' அந்தப்போரை இலங்கையில் நாம் இன்னும் செய்யத் துங்கவில்லை. இது இந்து தமிழ் சொல்லும் செய்தி.

இன்று எமது நாடு எது எதிலெல்லாம் முன்னிலை அடைந்து வருகின்றது. முக்கியமாக உலகில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மைப் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. 

இலங்கை உணவுப்பாதுகாப்பில் இருந்து மீண்டுவருவதற்கான பரிந்துரைகள்! அரசு கவனம் செலுத்துமா?

இலங்கையின் மனித அபிவிருத்தி மற்றும் சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகள் அதன் தெற்காசிய அண்டை நாடுகளை விட எப்பொழுதும் முன்னணியில் உள்ளன. 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, மனித வளர்ச்சிக் குறியீடு, எழுத்தறிவு விகிதம் மற்றும் சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகள் போன்ற இந்த குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம். உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் கணிசமான குறைந்த வறுமை விகிதத்தை கொண்டுள்ளது. அதில் இலங்கை 0.77 வீதமாகவும், இந்தியா 13.42 வீதமாகவும், பங்களாதேஷ; 15.16 வீதமாகவும், பாக்கிஸ்தான் 5.23 வீதமாகவும் உள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை அடைவதே இலங்கையின் இலக்காகும். 

24 August 2022

மண்ணெண்ணை விலை மக்களின் வாழ்வாதாரத்தை தீயில் கொழுத்தியுள்ளது! ஒரு ஆய்வுக் கட்டுரை.

பல ஆண்டுகளாக ரூ.87 க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஓரிரு நாளுக்கு முன்னர் ரூ.340 ஆக உயர்த்தப்பட்டது. இந்த விலை அதிகரிப்பு இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கனிம எண்ணெயின் விலை அதிகம் அதிகரித்து இடம்பிடித்துள்ளது. 

அன்று 1970 களில் மண்ணெண்ணெய் போத்தலின் விலை ஒரு ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது. அந்த நேரத்தில், இந்த நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்ததால், வீடுகளுக்கு மண்ணெண்ணெய் போத்தல்கள் அல்லது கலன்கள் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது.

23 August 2022

பாடசாலை மாணவர்களை வேலையில் இணைத்தல் என்ன மாற்றத்தினை நாட்டிற்குள் கொண்டுவரும்?

எமது நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பாடசாலை மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடுவதற்கு தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார எடுத்த தீர்மானம் இன்றய சூழலில் உயரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இந்த இக்கட்டான காலங்களில் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் உதவமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நெயற்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தால், கூடுதல் வருமானம் மாணவர்களின் கைக்கு வரும் அதே வேளையில் கல்வி கற்க்க  நிறைய செலவுகள் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பாக்கெட் மணியையும் இந்த முயற்சி ஏற்படுத்திக்கொடுக்கும். 

22 August 2022

அரசசேவையில் உள்ள மூன்று குழுக்களும் யார்? ஜனாதிபதியின் காட்டம் நியாயமானதா?

இலங்கை நாட்டின் ஜனாதிபதி அவர்கள் அநுராதபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன் அடிப்படையில் அரச உத்தியோக்தர்கள் இந்தச் சந்தர்பத்தில் கள்ளமில்லாமல் பணியாற்ற வேண்டும். அவ்வாறு நீங்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் அதற்கான வழி திறந்தே உள்ளது. நீங்கள் மாத்திரமல்ல வேலை செய்யவில்லை எனில் நானும் வீட்டுக்கு அனுபபப்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வேலைசெய்யாதவர்களுக்கு சும்மா சம்பளம் மற்றும் பிற வசதிகளை வழங்க அரசு தயாராக இல்லை. இந்தப்பேச்சை அரசு ஊழியர்கள் நன்றாக நினைவி;ல் இருத்த வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த நாட்டில் இராணுவம் பொலிஸ் உட்பட மொத்த அரச சேவையாளர்களையும் எடுத்துக் கொண்டால் பதினெட்டு லட்சத்துக்கும் அதிகம் என்பது தரவு. இந்த பதினெட்டு இலட்சம் பேரில் பெரும்பாலானோர் வேலை செய்யாமல் நேரத்தை வீணடிப்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். இந்த நிலை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் எதிர்மறையாக பாதிக்கிறது ன்பதனை மறுக்க முடியாது.

21 August 2022

ஆதாரம் இல்லாமல்போகிறது மக்களின் சுகாதாரம்!

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் அண்மைக்கால வரலாற்றில் அனுபவித்திராத சோகமான சாபத்தினை அல்லது விதியை எதிர்கொண்டுள்ளோம். முதலில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. பசி, உறக்கமின்றி, எரிவாயு எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வரிசையில் காத்திருக்காத மனிதனைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு குவிய் நெல்லுக்குள் கடுகினைத் தேடுவதற்கு ஒப்பாகும்.

20 August 2022

இன்று ஒரு துண்டு மீன்சாப்பிடுவது முடியாதுபோயுள்ளது.

காலி முகத்திடல்; உட்பட நிரந்தரப் போராட்டத் தளங்கள் இருந்த இடங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் மீண்டும் உருவாகி வருகின்றன. வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்களுக்கு காரணம் எரிபொருளும் மண்ணெண்ணையும்தான்.

இன்று பல மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து மீன்பிடி போராட்டம் நடத்தப்பட்டதாக பல பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தில் மண்ணெண்ணெய்க்கு மானிய விலை வழங்க வேண்டும், மீனவர்களுக்கு தட்டுப்பாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க வேண்டும், எரிபொருள் நெருக்கடியால் கடந்த 3 மாதங்களாக வேலை இழந்த மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

14 August 2022

எம்மை ஆக்கிரமித்துள்ள சமுக நெருக்கடிகளும் ஆபத்துக்களும்.

இன்று நாம் கவனம் செலுத்தாத பல சமுக நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் வேர்விடத் துவங்கியுள்ளன. அதிகரித்துவரும் களவு, பாலியல் துஸ்பிரயோகம், கறுப்புச்சந்தைகள், ஏமாற்று வித்தைகள், இலஞ்சம், பதுக்கல்கள், போலிகளின் அனுமதி, போதைவஸ்த்து என பல சமுக நெருக்கடி முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதைப்பொருளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இளம் தலைமுறையினரை போதைப்பொருளில் இருந்து காப்பாற்ற அரசு கடுமையாக உழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தகாலத்தில் கூட நாம் கல்வியைக் கட்டிக்காத்தோம்!

இன்று பல மாற்றங்கள் நிகழத் துவங்கியுள்ளன. எரிபொருள் நெருக்கடி மோசமடைந்ததால், இலங்கையின் வாழ்க்கை மாறியது. பேற்றோல் நிலையங்களில் வாகனங்கள் வரிசையாக நீண்டு செல்லத் தொடங்கியவுடன், அரசாங்கம் ஒரு முடிவை எடுத்தது. வாரத்துக்கு ஐந்து நாள் பாடசாலை வாரம் 2 அல்லது 3 நாட்கள் ஆனது, ஐந்து நாள் அலுவலக வேலை வாரம் 3 நாட்கள் ஆகச் சுருங்கியது.
வேலை இல்லாத நாட்களில் வீட்டில் இருந்தே விவசாயம் செய்யும்படி அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

அந்த கோரிக்கை காற்றில் மிதந்து அங்கு யாரும் விவசாயம் செய்யவில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நகர்ப்புற மக்களில் பெரும்பாலோர் எந்த அறுபடையினையும்; பற்றி அறியாத, விடுமுறை நாட்களில் மகிழ்வாக இருந்து டிவி பார்ப்பதை மட்டுமே விரும்பும் குழுவாக இருந்தனர். விளைச்சலுக்குத் தேவையான விதைகளோ உரங்களோ மக்களிடம் இல்லை என்பது அடுத்த பிரச்சினை. 

11 August 2022

பொருளாதார சிந்தனை இல்லாமல் அரசியல் பேசி நாட்டை காப்பாற்ற முடியாது

நாட்டின் பொருளாதாரம் குறித்து புதிய சிந்தனைகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் வெற்றுக் கோஷங்களினால் தாம் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றி இப்போது நாட்டுப் பொது மக்கள் ஓரளவு புரிந்துகொண்டிருப்பதை அங்கீகரிக்க முடியும். இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக வங்கி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இரண்டு இன்றியமையாத நிறுவனங்களாக மாறிவிட்டதால், அந்த நிறுவனங்கள் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு அதிக மதிப்பு உள்ளது. அந்த யோசனைகளை நிராகரிக்க முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்பது தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

10 August 2022

ஓடி மறைந்த எந்த வீரருக்கும் தேசத்தின் மரியாதை கிடைப்பதில்லை.

 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இலங்கைக்கு பல விடயங்களில்; நற்பெயரைக் கொடுத்துள்ளன. மல்யுத்தம் மற்றும் பளு தூக்குதல் போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் விருதுகளையும் சாதனைகளையும் பெறுவது அரிது. அந்த இரண்டு பிரிவுகளிலும் எங்களால் பதக்கம் வெல்ல முடிந்தது. குருநாகல் நெத்மி அஹிம்சா 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை எமக்கு வழங்கினார். 55 கிலோ பளு தூக்குதல் பிரிவில் திலங்க இசுரு குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். யுபுன் அபேகோன் மற்றும் பாலித பண்டார ஆகியோர் தடகளப் போட்டிகளில் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தினர். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுநலவாயத்தில் இலங்கை ஒரு சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றது.  

06 August 2022

நாம் உணவினை உற்பத்தி செய்தே ஆகணும்: நாலில் ஒருவர் ஒரு நேர உணவினை இழந்துள்ளோம்!

நாம் இந்தநாட்டில் இப்போது பன்முக நெருக்கடியினை எதிர்கொண்டு இருக்கிறோம். இது பார்ப்பதற்கு ஒரு பொருளாதார நெருக்கடி போல் தெரிகிறது, ஆனால் அதனுடன் தொடர்புடைய அரசியல் நெருக்கடி உள்ளது. தொற்றுநோயுடன், பல ஆண்டுகளாக நடந்து வரும் சுகாதார நெருக்கடியும், அதிகம் விவாதிக்கப்படாத சுற்றுச்சூழல் நெருக்கடியும் உள்ளது. சமூக கட்டமைப்புகளிலும் ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சமூகத்தின் கீழ்மட்டத்தில் சில உடைவுகள் நடக்கின்றன. இந்த விவகாரங்களைப் போலவே, கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான பகுதி, நம் நாட்டின் வெளிநாட்டு உறவுகள் துறையில் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும். ஸ்லாவோய் ஷிசெக் தனது 'எபிடெமிக்' புத்தகத்தில் இந்த நிலைமையை 'முழுமையான புயல்' என்று விவரித்துள்ளார். பல சிறிய புயல்களால் உருவான ஒரு பெரிய புயல் என்று பொருள். இலங்கையில் நாமும் இப்போது அத்தகைய முழுமையான புயலை எதிர்கொண்டுள்ளோம்.

01 August 2022

பொருளாதார நெருக்கடி சிரேஸ்ட மாணவர்களின் இடைவிலகலை அதிகரித்து வருகின்றது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது நீண்டகாலத்தில் நாட்டைப் பாதிக்கும் பாரிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதும், இந்தப் பாதிப்புகளைத் தணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மக்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கைத்தரத்தை குறுகிய காலத்தில் மீண்டும் எதிர்பார்க்க முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு கணிசமான நேரம் கடக்கும் வரை இவற்றை நாம் அனுபவிக்க நேரும்.

இன்று நாட்டிற்கு தேவையான புதிய பொருளாதார மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக, ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடியிலிருந்தான மீட்சி இருந்தபோதிலும், விஷேசமாக சில துறைகள் தொடர்சியாக இயங்குவதை எந்த வகையிலும் உறுதி செய்ய வேண்டும். நாம் எதிர்காலத்தில் எவ்வாறான பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், நாடு விட்டுக்கொடுக்க முடியாத தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய ஒரு துறை கல்வியாகும்.

அரசியல் அமைப்பில் இருக்கும் இரண்டு சாத்தியமான தீர்வுகள்.

தலைக்குமேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன! ஆகவே இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் மெதுமெதுவாகக் குறையத் துவங்கியுள்ளது. அதே நேரம் நம் நாடு பல நெருக்கடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளது. ஆகவே இந்த நாட்டிற்கு இந்தத் தருணத்தில் தேவைப்படுவது, கட்சிகள், தனிநபர்கள் என வேறு வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்காமல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தினேஷ் குணவர்தன பிரதமரானார். பொது மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது அமைச்சரவை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், இப்போது செய்ய வேண்டியது, நாடு விழுந்துள்ள பொருளாதாரப் படுகுழியில் இருந்து விரைவாக மீள்வதற்கு உடனடியாக வழிவகை செய்வதுதான். இது தொடர்பில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.